ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக
வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல
பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள்
உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் காட்டமான கருத்தளித்த சிலவாசகர்களின் கருத்தை இங்கு பகிர்கிறேன்..!

சர்தார்ஜி - உங்களுக்கு அதுக்கு மேல் பேச இத்தாலியில் இருந்து உரிமை
கிடைக்கவில்லை. ஏதோ வந்தோமா குடுக்குற ஏலக்காய் டீ மற்றும் மசால் வடையை
சாப்பிட்டோமா என்று இருக்காமல் ஓவரா கூவகூடாது

சமூகம் என்பது என்ன? மக்கள் தானே சமூகம்? மக்களின் கருத்துகளை வலை
தளத்துக்கு கொண்டு செல்ல கூடாது என்று அவசர சட்டம் போடலாமா என்று
பார்க்கிறாரோ? எந்த வலை தளத்தில் மத உணர்வுகளை எவர் தோண்டுகிறார் என்று
பார்த்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.

வெட்கம் கெட்ட மனிதர், தன் மேல் உள்ள கையாலகாத தனத்தை அடுத்தவர் மேல்
போடுவதில் இவர் மௌனியாக இருந்தே சாதிப்பார். கேவலம் வாக்கு வங்கிக்காக,
சிறுபான்மையினர் மனதில் நஞ்சை மற்றும் அச்ச உணர்வை விதைத்ததே உங்கள்
அன்னையார் தான்.

ஏதேதோ சொல்லி பார்த்தாங்க எதையும் சரியா மக்கள் ஆதரிக்கிற மாதிரி தெரியலை
சரி எதாவது சொல்லி வைப்போம் அது எப்பயாவது உதவும் சொல்லி பார்க்கிறாங்க அதை
மக்கள் ஏத்துக்கிற ஜடியாவே இல்லை என்ன சொன்ன இவங்க சந்தோஷ படுவாங்கனு
இவங்க தனிப்படை வச்சு விசாரிச்சாங்க அவங்க இவங்கிட்ட சொன்னது நீங்க ஆட்சியை
கலைக்க போறாம்னு சொன்னா எல்லா மக்களும் ஆதாரிப்பாங்கனு அவங்க
சொல்லிட்டாங்க அதான் இப்படி பேச்சு

எதப் பத்தி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லை இவங்க காங்கிரசோ அல்லது
இவர்கள் ஆதரிக்கும் சிறுபான்மை தீவீரவாத இயக்கங்களோ சமூக வலைதலங்களையா
நம்பியுள்ளன ? டெல்லி வாக்காளர் பட்டியலை வைத்தே சீக்கியர் வீடுகளைக்
கண்டுபிடித்து கொன்று குவித்தபோது ட்வ்விட்டரும் பேஸ் புக்கும் இல்லையே.

உங்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை விட சமூக வலை தளங்களில் தகவல்
உடனுக்கு உடன் கிடைக்கிறது அதுவும் நேரம் நாள் கடத்தாமல்...அதனால் மக்கள்,
நாட்டில் நடக்கும் அவலங்கள், அக்கிரமங்களை உடனுக்கு தெரிந்து கொள்ள
முடிகிறது...உங்களுடைய ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள்
தெரிந்து கொள்ளும் ஒரு உன்னத சாதனம் சமூக வலை தளங்கள் தான்...எனவே தடை
செய்ய வேண்டியது உங்கள் ஆட்சியை தான்..சமூக வலை தளங்களை அல்ல...

இவரு எல்லாத்தையும் மூடிட்டு ராஜபக்சே மாதிரி அரசாங்கத்தை நடத்தலாம்னு
பாக்கறாரு.......அடுத்ததா இந்த நாட்டில் குழப்பம் விளைவிப்பது ஊடகங்கள்
தான் என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கும், டிவி சானல்களுக்கும் கட்டுப்பாடு
கொண்டு வரவேண்டும் என்பார்...அதில் காங்கிரஸ் கட்சியையோ பிரதமரையோ
விமர்சிக்க கூடாது என்பார்.......கையாலாகாத பிரதமரை கைபில்லையை போன்று
இருப்பவரை விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பார்கள்?

காங்கிரசின் போலி மதவாத கொள்கையினால் வந்த கேடுகள்தான் இவை.
சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று காங்கிரஸ்
செயல்படுவது - கிட்டத்தட்ட இந்தியாவை துண்டு போட எடுக்கும் முயற்சியே...

// சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான
காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும்
அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும்// நீர் யாரை
அழைக்கிறீர் . நீர் என்ன பிரதமர் தானே , தவறை கண்டுபிடித்ததே மிக தாமதம்
இதில் யாரிடம் அனுமதி கேட்கிறீர் . இழுத்து மூடுங்கள்

போலி மத சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் தான் மத மோதல்கள்
உருவாகின்றன. சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது உத்தர் பிரதேஷ் மந்திரி ஒரு
சாரரை விடுதலை செய்யுமாறு பணித்து இருக்கிறார். அவர் மீது மாநில அரசு
எடுத்த நடவடிக்கை என்ன? அதை தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி
மவுனியாக இருந்தது ஏன்? ஆட்சி, அதிகாரம், சட்டம், போலீஸ் மற்றும் ராணுவம்
அனைத்தையும் கையில் வைத்துகொண்டு சமூக வலை தளங்கள் மீது பழியை
போடுகின்றனர். ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்.

புதிய கண்டு பிடிப்பு. அரசியல் வியாதிகள் தானே மத கலவரத்தை
உருவாக்குகின்றது. போலி மதசார்பின்மை என்று கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட
மதத்தை தாக்குவது தான் இத்தாலி கொள்கை. மதத்தின் அடிப்படையில் சலுகை
வழங்குவது இது எல்லாம் கலவரம் வெடிக்க காரணம் என்பதை மறந்து வலைத்தளங்கள்
மீது குற்றத்தை சுமத்துவது வேடிக்கை. உங்கள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு
வருவதற்க்கு வலைத்தளங்கள் காரணம். இதை பொறுக்க முடியாமல் வலைத்தளங்கள் மீது
பாய்கிண்றீர்கள்.

இப்பொழுதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் சமூக வலைத்தளங்களை பழி சொல்வது ஒரு பேஷன்.

இண்டர்நெட்டை அரபு நாடுகள் போன்று நம் நாட்டில் கட்டுபடுத்த வேண்டும்.
பாலுணர்வுகளை தூண்டும் மற்றும் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வலை
தளங்களை தடை செய்ய வேண்டும். தவறான செய்திகளை நெட்டில் பரப்புவோருக்கு
கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மத கலவரங்களை தூண்டிவிடும் வகையில்
செய்திகளை வெளியிடுவோருக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
மேலும் கருத்துகளுக்கு...
என்னுடைய கருத்து...!
சமூக வளைதளங்கள் பெரும்பாலும் சில சமூக பிரச்சனைகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. ஏதோ ஒருசில தரம்கெட்டவர்களை வைத்துக்கொண்டு முழு சமூக வலைதளங்களை குறைச்சொல்வது தவறே...
சமூக வலைதளங்களில் மதஉணர்வை தூண்டும் செயல்கள் மட்டும் இல்லாமல், ஏமாற்றுவேலை, பெய்யான தகவல்களை பரப்புதல், காதல் வலை வீசுதல், சமீபத்தில் ஒரு சில கொலைகள் கூட இதனால் ஏற்பட்டிருப்பது நாம் பார்க்கிறோம். இப்படி ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த சமூகம் விழையுமானால் எல்லாம் நன்றானதாகவே நடக்கும்...!
தங்களின் கருத்தையும் பதிவுசெய்யுங்கள்..!
பேசவே மாட்டார்
ReplyDeleteபேசினால் இப்படிப் பேசுவார் போல
(அம்மா நீ எப்ப தாலி அறுக்கப் போற
என்பது மாதிரி )
குறைகளைச் சரி செய்ய வழியில்லையாம்..இவங்கல்லாம்....
ReplyDeleteஇறுதியில் நீங்கள் சொல்லியிருக்கும் உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன்...
The world's most dangerous virus: CONGRESS
ReplyDeleteஇதில் எல்லார் கருத்துக்களையும் விட கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது மிக அருமையான கருத்து... நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் இன்று சமூகத்தில் எல்லாமும்...
ReplyDelete