ஒரு நள்ளிரவு..!
ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.
நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.
அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.
அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.
”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.
ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.
அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.
ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.
அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.
திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.
மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.
அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.
”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.
”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”
”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”
”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.
அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.
உண்மைதான். அச்சம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தால் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும்.
ReplyDeleteமிகவும் சரிதான்
ReplyDeleteஅச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.//
ReplyDeleteஉண்மைதான். ஆனால் அதை எப்படி ஒழிப்பது என்பதை அறிந்துக்கொள்வதில்தானே எல்லாம் இருக்கிறது? உயிருக்கு பயப்படாதவனுக்குத்தான் அச்சம் என்பதே இருக்காது. நம்மில் யாருக்காவது உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வாய்ப்புண்டா?
ஆணித்தரமான உண்மை..பயந்து நூறு நாள் வாழ்வதை விட வீரத்துடன் உடன் மடியலாம்
ReplyDeleteமனதை நெகிழ வைத்த விளக்கம் அருமை !
ReplyDelete”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”// மகான்களுக்கே உரிய நற் குணம் இது ...!!!!!
வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடரட்டும் .
மிக அழகான கதை... கதை மையத்தை ரசித்தேன்...
ReplyDeleteசிறப்பான கதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல கதை...
ReplyDelete