100 ஆண்டுகளை நெருங்கி பெருமைக்குறிய இடத்தில் இந்திய சினிமா ஓங்கி நிற்கிறது... அந்த இந்திய சினிமாவில் தனக்கென்று தனிஇடத்தை பிடித்துவைத்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா..!
100 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளையையும்.. மைல்கற்களையும் எட்டியுள்ள தமிழ் சினிமா... இன்னும் சிலவரையறைகளை விட்டுவிடாமல் பிடித்துவைத்துக்கொண்டிருக்கிறது. அவைகளை தவிர்த்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் இந்த திரைஉலகை நகர்த்த முடியம்.
தவிர்க்க முடியாதவைகள்...!
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை என்று சொல்லியிருப்பார்கள் ஆனால்... அத்தனையும் பத்து பழைய படங்களை ஞாபகப்படுத்துவதாக இருக்கும்.. (அதாவது அனைத்தையும் மாற்றியிருப்பார்கள்... ஆனால் கொண்டையை மறந்திருப்பார்கள்....)
தங்கச்சி சென்டிமெண்ட் கதை என்று வரும்சினிமாவில்... கண்டிப்பாக தங்கச்சி வில்லனால் கற்பழிக்கப்படுவார்... (இதன் விளைவாக சில காலக்கட்டங்களில் தங்கச்சி நடிகைகளுக்கு பற்றாக்குறைகூட ஏற்பட்டது)
கிராமத்துக்கதை என கூறிவிட்டு இரண்டு பாட்டுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்துவிடுவார்கள்....
எதார்த்த நாயகன் என்று டைட்டிலில் போட்டுவிட்டு அம்பது அறுபது தடியன்களை பந்தாடும்படி சண்டைகள் வைப்பார்கள்...
டூயட் காட்சிகளில், கண்டிப்பாக இருபது மூப்பதுபேரை ஆடவிடுவார்கள்... (ஆனால் பொதுமக்கள் என்று யாரும் அதில் இருக்கமாட்டார்கள்...)
பாரீஸ்லிருந்து சென்ட்ரல் வருதற்கே அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது... ஆனால் சினிமாவில் திருவெற்றியூரில் இருந்து திருவான்மியூருக்கு நொடியில் வந்துவிடுகிறார்கள்... (அதாவது சேலையை உறுவி முடிப்பதற்குள்... அருவாளை ஓங்கி வெட்டுவதற்குமுன்... கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போவதற்குள்... இன்னும் வேண்டுமா ஏதாவது ஒரு தமிழ்சினிமா பாருங்க..)
தடுப்பதற்கு ஹீரோ வருவார் அதெப்படி சரியான நேரத்துக்கு வருகிறார் என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லமுடியாது...!
அடியாட்கள் ஒரே அடியில் வீழ்ந்துவிடுகிறார்கள் ஆனால் ஹீரோவும் வில்லனும் மட்டும் ஏகே47 கொண்டு சுட்டால்கூட கிளைமாக்ஸை முடித்துவிட்டுதான் சவார்கள்...
மாபெரும் வெற்றி.. அலைபோதும் கூட்டம் என்று படம் வந்த... மறுநாள் செய்திகளில் போடுவார்கள்... ஆனால் பிரியாணி கொடுத்து ஆட்களை அழைப்பார்கள்.
சில நம்ப முடியாத காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா இன்னும் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை...!
(தொடரும்...)
(தொடரும்...)
ஹாஹா எல்லாம் உண்மைங்க..கலக்கல் பதிவு!
ReplyDeleteஅப்ப எப்படித்தான் தமிழ் சினிமாவை அடையாளம் கண்டுகொள்ள?
ReplyDeleteஹா... ஹா... ஆசை நிறைவேற நாளாகும்...
ReplyDeleteஇப்படியெல்லாம் ஆசைப் படக்கூடாது கவிஞரே...
ReplyDeleteசின்னப்புள்ளத் தனமாவுல்ல இருக்கு...
தொடருங்க... நல்லாயிருக்கு...
ஆசை நிறைவேற இன்னும் நூறாண்டுகளாகும்
ReplyDelete