நடந்து முடிந்த சென்னை பதிவர் சந்திப்பில் மதுமதி அவர்கள் எழுதி இயக்கிய குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த குறும்படம் குறித்த விமர்சனம்... (விமர்சனம்ன்னு போட்டிருக்கேன்... இதுக்கு எவ்வளவுபேர் பொங்கப்போறாங்கன்னு தெரியலையே...)
பதிவர், பாடலாசிரியர், எழுத்தாளர், என்ற பரிமாணங்களை தாண்டி ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நம்ம மதுமதி அவர்கள்... ஆரம்பத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பும் ஐடியா இல்லாமல் இருந்தது. ஆனால் பின்னர் கொஞ்சம் கடினமுயற்சிக்குபிறகு படத்தை தயார்செய்து இந்த விழாவில் ஒளிப்பரப்பு செய்யும் முடிவை எடுத்திருக்கிறார் மதுமதி அவர்கள்....
பதிவர், பாடலாசிரியர், எழுத்தாளர், என்ற பரிமாணங்களை தாண்டி ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நம்ம மதுமதி அவர்கள்... ஆரம்பத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பும் ஐடியா இல்லாமல் இருந்தது. ஆனால் பின்னர் கொஞ்சம் கடினமுயற்சிக்குபிறகு படத்தை தயார்செய்து இந்த விழாவில் ஒளிப்பரப்பு செய்யும் முடிவை எடுத்திருக்கிறார் மதுமதி அவர்கள்....
குறும்படத்தின் தலைப்பு... 90 டிகிரி... படம் மிகவும் சிறப்பாக இருந்தது... படம் ஓடி முடிந்தப்பிறகு அரங்கம் கொஞ்சம் அமைதியாகி பின் பலமான கைதட்டல்களை கண்டது. இந்த குறும்படத்தை குறித்து அனைவரும் வெளிப்படையாக பாராட்டினார்கள்... பாராட்டுதலுக்கு ஏற்ற படைப்பு தான்இது.
இந்த குறும்படத்தின் கதையமைப்பு மிகவும் அழகாக அமைந்திருந்தது... குறும்படத்துக்கு ஏற்றகதை... நேர்த்தியான இயக்கம்... இசை அழகான ஓவியம்போல் படம்முழுவதும் அழகாக பரவிக்கிடந்தது...
மதுமதியின் முதல் முயற்சி என்பதால் இப்படத்தின் ஆக்கத்திற்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். மேலும்... இனி அவர் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மேலும் இத்திரைப்படத்தில் நான் கண்ட சில குறைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... (ரைட்டு வில்லங்கம் ஆரம்பிச்சிடிச்சி....)
கதை...
கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சைப்புகினும் கற்கை நன்றே... என்ற ஒருவரி கதைக்கருவை கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏழைப் பெண்குழந்தை பிச்சையெடுத்தாவது படிக்கவேண்டும் என்று எடுக்கும் முடிவையும், அந்த மாணவி பிச்சையெடுப்பதற்கான பின்னணியையும் அழகாக சொல்லியிருக்கிறார்.
கதைப்படி பள்ளி மாணவி ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். உடல்நலம் சரியில்லாத அப்பா... குடும்பத்தில் ஏழ்மையை அனுசரித்து வாழும் அம்மா... சரியான தேர்வு... வீடும் அதுபோலவே...! ஆனால் கதையின் நாயகியாகவரும் அந்த பள்ளி மாணவி அந்த குடும்பத்தோடு ஒட்டவில்லை. அந்த கதாப்பாத்திரம் ஏழைப்போன்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக எனக்குதெரியவில்லை. வேறுஒன்றுமில்லை... அந்த பள்ளிமாணவியை பார்த்தால் ஏழைவீட்டில் பிறந்த மாதிரி தெரியவில்லை... பார்த்தால் ஏழ்மையாக தெரிவதுபோன்ற குழந்தையே தேர்வு செய்திருக்கலாம்...
காட்சி அமைப்பிற்கான இடம்.. அவர்கள் வாழும் பகுதி, தெருக்கள் கச்சிதமாகவும் யாதார்த்தமாகவும் இருந்தது... படக்காட்சிகள் பல்வேறு திசைகளில்இருந்து படமாக்கப்பட்டிருந்தது.. அந்தகோயில்.. பூக்காரர்கள்.. உடன் பிச்சையெடுப்பவர்கள் என அனைவரும் எதார்த்தமாக தெரிந்தார்கள்....
(கணித உபகரண பெட்டி) ஜாமன்ரிபாக்ஸ் இல்லாமல் போனதால்... அதை வாங்கவே அந்தக்குழந்தை பிச்சையெடுக்கும் முடிவை எடுக்கிறது....
ஜாமன்ரிபாக்ஸ் இல்லாத மாணவியை மையமாக வைத்துதான் குறும்படத்துக்கு 90 டிகிரி என்று பெயர் சூட்டியுள்ளார்... ஏனென்றால் 90 டிகிரி என்பது கணிதம்சார்ந்த ஒரு வார்த்தை அதற்காக அதன் விலையையும் 90 ரூபாய் என்று வைத்தது ஏனென்று தெரியவில்லை. தற்போது ஜாமன்ரிபாக்ஸின் விலை 30 ரூபாயிலிருந்தே ஆரம்பிக்கிறது.
ஜாமன்ரிபாக்ஸ் வாங்க காரணமான வகுப்பறை பிளாஸ்பேக் நன்றாக இருந்தது... பொதுவாக வகுப்பறையில் சில மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது... இந்த கதைப்படி ஆசிரியர் அவமானப்படுத்தியதால்தான் குழந்தை எப்படியாவது ஜாமன்ரிபாக்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது... இல்லையென்றால் அந்தபொருள் இல்லையென்ற கவலை அந்தமாணவியிடம் வராது.... படிபப்பிலும் ஆர்வம் வராமல்போயிருக்கும்.
இந்த கதை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றதாக இல்லை... தற்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அரசே விலையில்லாமல் கொடுத்துவிடுகிறது.... வேறு ஏதாவது புதுசாக யோசித்திருந்திருக்கலாம்....
பள்ளிச்செல்லும் அந்த மாணவி அரசு கொடுத்துள்ள புத்தகப்பைத்தான் பள்ளிக்கு எடுத்துச்செல்கிறாள்... அப்படியென்றால் ஜாமன்ரிபாக்ஸ் கண்டிப்பாக கொடுக்கப்பட்டிருக்கும்... இல்லையென்றால் அரசு அளித்த புத்தகப்பையை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் மாணவிக்கு தமிழக அரசுபள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் சீருடையையும் பயன்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
பிச்சையெடுக்கும்போது தன்னுடைய முடியை கலைத்துவிட்டுக்கொள்வது.. எதார்த்தமாக இல்லை...! (பிச்சை எடுப்பது போன்று இல்லாமல் வேறு ஏதாவது யோசித்திருக்கலாமே)
பிச்சையெடுக்கும்போது தன்னுடைய முடியை கலைத்துவிட்டுக்கொள்வது.. எதார்த்தமாக இல்லை...! (பிச்சை எடுப்பது போன்று இல்லாமல் வேறு ஏதாவது யோசித்திருக்கலாமே)
கல்வியென்பது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் யாராவது ஒருசிலரே அதை அடையமுடியாமல் வசதிவாய்ப்பின்றி அவதிப்படுகிறார்கள்.... படிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் எப்படியாது பிச்சைஎடுத்தாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது... எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதுதான்....
ஒவ்வொறு மாணவ மாணவியர்களும் இதுபோன்ற குறும்படங்களை கண்டு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை...
இது எதிர்காலத்தில் சிறந்துவிளங்கப்போகும் ஒரு இயக்குனருக்கு ரசிகனாக நான் தரும் சின்ன விமர்சனம் அவ்வளவுதான்... (உடனே சினிமாவைப்பற்றி உனக்கு என்னத்தெரியும் என்றும், முடிந்தால் நீயே ஒரு குறும்படத்தை எடுத்துக்காட்டு பார்ப்போம்... என்றும் கிளம்பிவிடாதீர்கள்...)
90 டிகிரி ஒரு முன்னோட்டம்...
கடந்த பதிவு பற்றிய என் விளக்கம் : மாநாடு குறித்து நான் வெளியிட்ட என்னுடைய கருத்தை இவ்வளவு விமர்சிப்பார்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. நான் வைத்தது குற்றச்சாட்டுகள் அல்ல... அடுத்த சந்திப்பில் சரிசெய்ய வேண்டியவைகளே.... வேண்டுமென்றால் சொல்லுங்கள் புகழ்ந்து ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.
விமர்சனத்திற்கு தெளிவான பதிலையோ அல்லது மறுப்போ தெரிவிப்பதை விட்டுவிட்டு கருத்துக்சொன்னவரை அசிங்கப்படுத்தி பதிவெழும் பதிவுலகைகண்டு உச்சிக்குளிந்தேன்..... (தயவுசெய்து இதற்குமேல் இன்னும் வேண்டாம் என்று நினைக்கிறேன்...)
சிலர் ஹிட்ஸ் என்கிறார்கள்... அதற்கு எனக்கு விஜய்.. மற்றும் பவர்ஸ்டார் இருக்கிறார்கள்....
காப்பி பேஸ்ட் என்கிறார்கள்... நான் படித்து எனக்குபிடித்ததை, ரசித்ததை பகிர்ந்துக்கொள்கிறேன். அதற்கு சிலருக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை....
எழுத்துப்பிழை என்கிறார்கள்... இது எழுதும் ஒரு சராசரி மனிதனால் தவிர்க்கமுடியாத விஷயம்... (நான் சராசரி மனிதன்)
இந்த விளக்கம் கூட... ஒரு கருத்தை (நேர் மறையோ/ எதிர்மறையோ) ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லாமல் தரம்கெட்ட பதிவர்களுக்கு அல்ல....
தன்னுடைய கருத்தை இங்கு நாகரீகமாக வெளிப்படுத்தியவர்களுக்கு மட்டுமே...!
வணக்கம்
ReplyDeleteநல்ல முயற்ச்சி பாராட்டவேண்டியது 90 டிக்கிரி குறும் படத்தின் கதைக்கரு நன்றாக உள்ளது இதைப் போன்று பல படங்களை மதுமதி தயாரிக்க எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சரியானது-90டிகிரி
ReplyDeleteபடத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன். அதில் வரும் குழந்தையைப் பார்த்தால் ஏழைப் பெண் போல் தெரியவில்லைதான். நீங்கள் விமர்சித்தப் பிறகுதான் நான் நன்றாக அந்த குழந்தையைப் பார்த்தேன். முதல் பார்வையில் எனக்கு அந்த பின்னணி இசையும், கதைக் கருவும், நிகழ்வுகளும் மட்டுமே தெரிந்தது.
ReplyDeleteஉற்று நோக்கினால், ஊன்றி கவனித்தால் நீங்கள் கூறும் குறைகளும் உள்ளன. நீங்கள் உற்று நோக்குபவர் என்பதை இந்த விமர்சனத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
குறையில்லா மனிதன் இல்லை.. குறையில்லா படைப்புகளும் இல்லை.. நிறைவாக இருப்பதை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.. இது என்னுடைய கருத்து..
////
ReplyDeleteகுறையில்லா மனிதன் இல்லை.. குறையில்லா படைப்புகளும் இல்லை.. நிறைவாக இருப்பதை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.. இது என்னுடைய கருத்து../////
100க்கு 100 உண்மை... நமக்கு நெருக்கமானவர்கள் செய்யும் சில குறைகளை சரிசெய்துகொண்டு மென்மேலும் வளரவைக்கவேண்டும் அது நமது கடமையும்கூட...
நீங்கள் சொல்வது போல படத்தில் சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம்! அனைவரும் பாராட்டிய ஒரு படம்! சிறப்பான விமர்சனத்திற்கு நன்றி!
ReplyDeleteஉங்க கருத்து சரிதான் சௌந்தர்.., வேற சிறுமியை கதாநாயகியா போட்டிருந்தா இன்னும் டச்சிங்கா இருந்திருக்கும், சிறுமியின் உடல் அமைப்பும், உடையும் கதைக்கருக்கு ஒட்டலைதான்.
ReplyDelete////
ReplyDeleteராஜிSeptember 6, 2013 at 1:09 PM
உங்க கருத்து சரிதான் சௌந்தர்.., வேற சிறுமியை கதாநாயகியா போட்டிருந்தா இன்னும் டச்சிங்கா இருந்திருக்கும், சிறுமியின் உடல் அமைப்பும், உடையும் கதைக்கருக்கு ஒட்டலைதான்.///
நீங்க ஏன் இப்படி
சிறப்பான விமர்சனம்
ReplyDeleteமதுமதிக்கு வாழ்த்துக்கள்
சவுந்தர்,
ReplyDelete// குழந்தை எப்படியாவது ஜாமன்ரிபாக்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது... இல்லையென்றால் அந்தபொருள் இல்லையென்ற கவலை அந்தமாணவியிடம் வராது.... படிபப்பிலும் ஆர்வம் வராமல்போயிருக்கும்.
இந்த கதை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றதாக இல்லை... தற்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அரசே விலையில்லாமல் கொடுத்துவிடுகிறது.... வேறு ஏதாவது புதுசாக யோசித்திருந்திருக்கலாம்....
//
உண்மை தான்,ஆனால் பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களின் பால்யகால வாழ்க்கை அனுபவத்தின் தாக்கத்தினையே தங்கள் படைப்புகளில் முன்னிறுத்துவது வழக்கம், எனவே மதுமதி அவர்களின் பால்யகால பள்ளி அனுபவத்தின் தாக்கமாக இக்குறும்படத்தின் கரு இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
சைக்கிள் முதலான 16 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால் இலவச பஸ் பாஸ் வாங்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பதில்லை, எனவே சென்னையில் சைக்கிள் கொடுப்பதில்லை(பெரும்பாலும்),அதே போல ஜியாமெண்ட்ரி பாக்சிக்கும் எதுவும் காரணம் இருக்குமோ? சரியாக விசாரித்து பார்க்கனும்.
தமிழ்நாட்டில் தான் இலவசம் எல்லாம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளாவில் எல்லாம் இல்லை(அப்படினு நினைக்கிறேன்),எனவே அந்த மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட வசதியா இருக்கும்ல :-))
படமெடுத்த மதுமதிக்கு வாழ்த்துக்கள்!
(ஆமாம் பாதியில ஷேவ் பண்ணும் போது எழுந்து வந்துட்டாரா என்ன? ஹி...ஹி)
பின்குறிப்பு:
அந்த டிவிட்டர் குருவிய எடுக்க போனப்பதிவில் மெனகெட்டு வழி சொன்னேன், செய்து பார்க்கலையோ? இதுல பதிவர் சந்திப்புல தொழில்நுட்ப அமர்வு வைக்க சொல்லி வேற கேட்டிங்க :-))
சௌந்தர்..முதலில் விமர்சனத்திற்கு நன்றி..இப்போதே இப்பதிவைக் கண்டேன்..ஏழை வீட்டு குழந்தை பசியும் பட்டினியுமாக சுருங்கிப்போய்தான் இருக்கவேண்டுமா?..நிறைய வீட்டிற்கு சென்று பாருங்கள் பணக்கார பெண்களைப் போல பலர் இருப்பதைக் காணலாம்.அதைப் போல பல பணக்கார சிறுமிகளைப் பார்த்தால் சுருங்கிப்போய் ஏழைக்குழந்தை போலவே இருப்பார்கள்..ஆதலால் ஏழை இப்படித்தான் என்றில்லை.
ReplyDeleteஇக்குழந்தைதான் இப்படத்தின் பிளஸ் என்று 90 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்..
படத்தில் ஓடிய வசனத்தை நீங்கள் கவனிக்கவில்லையென தெரிகிறது..
ஆசிரியர் சொல்லுவாரே.. ''கவர்மெண்டுல யூனிபார்ம் கொடுக்கிறாங்க..சாப்பாடு கொடுக்கிறாங்க..ஜியாமெண்டரி பாக்ஸூம் கொடுப்பாங்க அதுக்குள்ள அரையாண்டுத் தேர்வு முடிஞ்சிடும் நான் பாடம் நடத்தவா வேண்டாமா என்று''
..
எல்லா இலவசங்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் உடனடியாக போய்ச் சேர்வதில்லை..மற்றபடி நல்ல விமர்சனம்..மகிழ்ச்சி..
நல்லது மதுமதி...
Deleteநல்ல விமர்சனம். உங்களுக்கும் மதுமதிக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒன்னும் கவலைப் படாதீங்க சௌந்தர் ,மதுமதியின் அடுத்த படைப்பு ...நமக்கெல்லாம் மிகவும் பிடிக்கும் ,தலைப்பு ஜாமென்ட்ரி பாக்ஸ் அல்ல ,சமந்தா பாக்ஸ் !
ReplyDelete