கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 January, 2011

நட்பின் இலக்கணம் சொல்லும் தூங்காநகரம் பாடல வரிகள்


தயாநிதி அழகிரி தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படமான தூங்காநகரத்தி-ன் பாடல்கள் சிறப்பாக உள்ளது

அதிலுள்ள ஒரு பாடல் நட்பின் இலக்கணத்தை மிகவும் அழகாக பறைச்சாற்றியுள்ளது. நட்பின் பாடல்கள் ஒரு சிலவே உள்ள நிலையில் இப்பாடல் அனைத்துக்குள் சிகரம் வைத்தாற்போல் உள்ளது எனலாம்

இப்படத்திற்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இந்த பாடல் மூலம் மிகவும் பேசப்படுவார்.
 
நட்பின் இலக்கணம் சொல்லும் அந்த பாடல்... இதே உங்களுக்காக

 பாடல் எழுதியது : எஸ். ஞானக்கரவேல்
பாடல் பாடியது : மது பாலகிருஷ்ணன்

எட்டு கண்களுக்கும் 
ஒற்றை பார்வை தரும் 
நட்பை தைத்தோம் கண்னோடு
 
சட்டை பைகளுக்குள்
நட்பை சேகரித்து
கொட்டிக் கொண்டோம் நெஞ்சோடு...

நான்கு இதயத்திற்கும்
சேர்ந்து துடிப்பதற்கு நட்பின் இதயம் தயங்காது...

வரங்கள் ஏதுமின்றி 
யுகங்கள் வாழ்வதற்கு
நட்பை விட்டால் .உரமேது..

பிரிவேது... பிரிவேது.. நட்புக்குள் பிரிவேது...
பிரிவென்னும் சொல்கூட நட்புக்கு பிடிக்காது....
தூரத்தில் இருந்தாலும்.. நம் நட்பு குறையாது..
தூக்கத்தில் இருந்தாலும்.. நட்பென்றும் உறங்காது..

சரணம் - 1


தாய்முகம் நினைத்தால்
நண்பனின் முகம் எதிரினில் வருமே
சிலநேரம் நோய்வந்து தவித்தால்
அவன் வார்த்தையில் மருத்துவ குணமே..

வருடங்கள் ஐந்தோ பத்தோ கணக்குபோட்டு பழகவில்லை
ஆனாலும் நூறு ஜென்மம் நினைவுகள் சேர்த்தோமே...

பலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திகடன் நேந்துக்கிட்டு
நண்பரின் பெயரை நாங்கள் பிள்ளைக்கு வைப்போமே..
 
மனம் கஷ்டத்தில் வரும் காயத்தை
நம் கனவுக்குள் வரும் விருப்பத்தை
உடன் தீர்ப்பானே
உயிர் நண்பன் மட்டும் தான்...

சரணம் -2


காதல் பிரிவும் தனிமையிலே
தினம் வெறுமைதரு‌மே...
பழகிய நம் நட்பின் பிரிவு
நினைவுகளில் சிறகினை தருமே
 

துன்பத்தை தூசிதட்டி சுத்தம் செய்து பூஜை பண்ணி
இன்பத்தை தந்த நட்பை இதயத்தில் வைப்போமே..
 
பிரிவெல்லாம் பிரிவே இல்லை
பிரிந்தால் கூட க‌வலையில்லை
நண்பர்கள் பிரியும் நாளில் நினைவுகள் இணித்திடுமே..
 
எமன் கண்முன்னே வந்து நின்றாலும்
நமை பெற்றோர் கைவிட்டாலும்
துணை நிற்பானே உயிர் நண்பன் மட்டும் தான்...

அந்த பாடலையும் கேளுங்கள் :

உள் நுழைந்தவர்களே அப்படியே எதாவதுதொரு என் கவிதையை படித்துவிட்டு செல்லுங்கள்.. தங்கள் வருகைக்கு நன்றி..!

5 comments:

 1. Hot Review...

  நட்பின் இலக்கணம் சொல்லும் அருமையான வரிகள்..

  பாட்டை கேட்கும் போதே அதன் Visual எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது. பகிர்விற்கு நன்றி..

  www.sakthistudycentre.blogspot.com

  ReplyDelete
 2. tamil10ல் ஓட்டு போடமுடியவில்லை என்னன்னு பாருங்க நண்பரே...

  ReplyDelete
 3. tamil10ல் ஓட்டு போடமுடியவில்லை என்னன்னு பாருங்க நண்பரே...

  தங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது..நன்றி

  ReplyDelete
 4. epadei vote poduvadhy velagam please nadpudan nakkeeran

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...