கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 January, 2011

முட்டை பரோட்டா (31-01-2011)

  • அன்பா வசக பெருமக்களே.. கவிதை போட்டு போர் அடித்து விட்டது..அதான் ஒரு வித்தியாசத்துக்காக
    (கண்டிப்பாக இது கொத்து பரோட்டாவுக்கு மாற்றாக இல்லை)

 தெரிந்துக் கொள்ளுங்கள் :
  • மைதா மாவு - அரை கிலோ
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 1
  • முட்டை - 3
  • எழும்பில்லாத கோழி - 4 , 5 துண்டுகள்
  • இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - சிறிதளவு
  • கரம் மசாலா தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு


வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கோழி துண்டுகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைதா அல்லது கோதுமை மாவை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
மாவை எடுத்து சப்பாத்திக்கு வளத்துவது போல் ஓரங்கள் மெல்லியதாக செய்துக் கொள்ளவும்.
அதில் ஒரு தேக்கரண்டி வெங்காய கலவையை வைத்து,அதன் மேல் 3 ஸ்பூன் முட்டையை ஊற்றி விடவும்.
படத்தில் உள்ளது போல் முதலில் மேல் கீழ் பக்கங்களை உள்ளே வைத்து மடிக்கவும். பின்னர் இடது வலது பக்கங்களை (முட்டை வெளியே வராமல் இருக்கும்படி மடிக்கவும்.)
இதைப் போலவே மற்ற மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பரோட்டாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
தீயை மிதமாக வைக்க வேண்டும். அதிகமான தீ இருந்தால் வெளியே பொரிந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
சுவையான முட்டை பரோட்டா ரெடி.
 (நன்றி : அறுசுவை சமையல்)


முடிந்தால் செய்து பாருங்கள் இல்லையென்றால் ஓட்டலில் வாங்கி சாப்பிடுங்கள்... அது சரி இப்போ நீங்க படிச்சிட்டு தமிழ் 10 ஒரு 20 ஓட்டு... இன்ட்லி-ல் 25 ஓட்டு.. தமிழ்மணத்தில் 10 ஓட்டு போடுங்க.. போட்டா பார்சல் வரும்.. இல்லான மவனே.. ராணகலமாயிடும் 
(யாருக்கு) யாருக்கோ...

20 comments:

  1. அய்யா ஆரம்பிச்சிடிங்களா உங்க ரவுசை...
    இப்படியே நடத்துங்க விளங்கும்...

    ReplyDelete
  2. என்னவோ நடத்துங்க..
    ஆமா ஓட்டு போதுமா...

    ReplyDelete
  3. நான் என்னவோ ஏதோன்னு வந்தேன் ..
    நம்கேபில் சங்கர் கோபிச்ச மாட்டாரா ...

    ReplyDelete
  4. நான் வந்துட்டேன்..
    பிரசண்ட் சார் ...

    ReplyDelete
  5. எப்படியா இப்படி கிளம்பிட்டிங்க..
    உறுப்படியா ஏதாவது பதிவு போடுங்கயன்னா என்னது இது சின்னபிள்ளை தனமா...

    ReplyDelete
  6. சூப்பர்..
    நான் டிரைபண்ரேண்...

    ReplyDelete
  7. நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  8. @அசுரன்
    சரியா வரலன்னா என்னை கேட்ககூடாது..

    ReplyDelete
  9. இன்னைக்கி இதை பண்ணிற வேண்டியதுதான்.........
    ஆனா முதல்ல பாட்டு ரசிகனை திங்க வச்சி டெஸ்ட் பண்ணிட்டுதான் நான் தின்பேன்....

    ReplyDelete
  10. முட்டைபுரோட்டா.... அருமை. போட்டோக்கள் எளிதில்புரிய வைக்கின்றன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @MANO நாஞ்சில் மனோ
    பாட்டு ரசிகன் என்ன பாவம் பண்ணாரோ..
    இப்படி டெஸ்ட் பண்ண அவரை பயன்படுத்திரங்க

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...