வீட்டுக்குஅடங்காத பிள்ளை, காதலியை பின்தொடரும் சராசரி வாலிபன், நான்கு நண்பர்களுடன் கலகலப்பான நாயகன், நான்கு குத்துப்பாட்டு, நான்கு பறந்தடிக்கும் சண்டை என அடையாளப்படுத்திககொண்ட தனுஷ் தற்போது இருக்கும் அத்தனை இமேஜை உடைத்தெரிந்து விட்டு முழுக்க முழுக்க நடிப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் படம் தான் ஆடுகளம்.
படத்தில் எந்த இடத்திலும் தனுஷை பார்க்க முடியவில்லை. கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தூக்கி கட்டிய கைலி, அழுக்கு படிந்த சாதாரன குடிமகன் போல் (ஒரு ஹீரோபோல் அல்லாமல்) படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்.
அன்றாடம் கஷ்டப்படும் ஒரு இளைஞனின் தோற்றமும், கோழிச்சண்டைக்காக களம் இறங்கும் போது அவர் காட்டும் முகத்தோற்றமும், பொறுமையும் மிகவும் ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல் கட்டிப்புரண்டு சண்டையிடுகையில், பாட்டுக்கு தனியாக ஆடிக்கொண்டும், காதலியிடம் அனுகும் போது புறநகர் வாலிபன் செய்யும் அதே வேளைகளை செய்து கைதட்டு வாங்குகிறார்.
அதிக மேக்கப் இல்லாமலும், அதிக கோவப்பட்டு அதை வெளிப்படுத்தாமல் அடக்கும் காட்சிகளிலும், காதலியிடும் அனுகுமுறையும், தாய் இறக்கும் போது கலங்கும்போதும், நம்பிவரும் காதலியை தவிக்க விடும் போதும், குற்றம் சாட்டப்படுகையில் அதற்காக கலங்கி நிற்கும் போதும், காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடித்திருக்கிறார் தனுஷ்.
இறுதி காட்சிகளில் தான் ஏமாற்றப்பட்டு விடுவதை உணர்ந்ததும் உணர்ச்சிவசப்படாமல் சேசும் வசனங்கள், ஏங்கங்கள் தனுஷ் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.
தனுஷ் திரை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப்படம் ஆடுகளம்.
தமிழ்படம் தமிழகத்தில் மட்டும் நின்று விடாமடல உலத்தை வளம் வரும் உக்தியை தமிழ் சினிமா கற்றுக் கொண்டு விட்டது. அந்த வரிசையில் தனுஷின் நடிப்பும், வெற்றி மாறன் இயக்கமும், ஜி.வி.பிரகாஷின் இசையும், ஆடுகளம் உலகத்தரம் வாய்ந்த படம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
அன்பர்களே பின்னுட்டம் இடுங்கள்... அது நம்மை வளப்படுத்தும்...
நல்ல விமரிசன்ம். எதையும் நல்ல சிந்தனையில் பார்க்க கூடியவராக இருக்குறீர்கள்
ReplyDeleteநல்ல விமர்சனம் தனுஷ் எப்போதும் இமேஜுக்குள் அடங்காத ஒரு நடிகர் கொஞ்ச காலமாகத்தான் ஒரே மாதிரியான படங்கள்
ReplyDeleteநல்ல விமர்சனம். தனுஷூக்காக படம் பார்க்க வேண்டும.
ReplyDelete