கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 January, 2011

இளைஞன் - திரைவிமர்சனம் (First in Net)

1959 ஆம் ஆண்டு கப்பல் கட்டும் தொழிற்சாலையில் முதலாளி வம்சத்திற்கும், அடிமைப்பட்டு கிடக்கும் தொழிலார்களை ஒன்றிணைத்துப் போராடும் இளைஞனின் கதையே இளைஞன். 

கதை :

ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதையுடன் எழுதியிருக்கும் படமே இளைஞன்.

1959 கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ செ‌ன்‌னை‌க்‌கு அருகே‌ உள்‌ள ஒரு கி‌ரா‌மத்‌தி‌ல நி‌கழும்‌ கதை‌. தெய்வநாயகம் (சரத்பாபு) கடற்‌கரை‌யோ‌ர அந்‌த கி‌ரா‌மத்‌தி‌ல்‌, ஆங்கிலேயர்களுக்காக ஒரு‌ கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌ நி‌றுவப்‌படுகி‌றது.  ஆயி‌ரக்‌கனக்‌கா‌ன தொ‌ழிலா‌‌ளர்‌கள்‌, இந்‌த கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌யை‌ நம்‌பி‌ இருக்‌கி‌ன்‌றனர்‌. தங்‌களி‌ன்‌ வி‌டி‌வெ‌ள்‌ளி‌யா‌க, சோ‌று போ‌டும்‌ சொ‌ர்‌க்‌கமா‌க அந்‌த கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌ தி‌கழும்‌ என்‌று நம்‌பி‌யவர்‌களுக்‌கு, வெ‌கு வி‌ரை‌வி‌லே‌யே‌ அந்‌த நி‌னை‌ப்‌பு‌ தவறா‌னது என்‌பது பு‌ரி‌ந்‌து போ‌கி‌றது. அதிகாரமும், முரட்டு தனமும் கொண்ட தெய்வநாயகத்தின் மகன் ராஜநாயகம் (சுமன்) தோழிளாளர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குகிறார். தினமும் 16 மணிநேரம் வேலை செய்யும்படி உத்திரவிடுகிறார். இதனால் கோபமுற்ற தொழிளாளர்களை சித்திரவதை செய்கிறார். தன் தந்தையான ஆரோக்கியசாமியை (நாசர்) கொன்ற பிறகு அந்த வேலைக்கு சேரும் கார்க்கி (விஜய்) அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு பொங்கியெழுந்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி அனைத்து தொழிலார்களையும் ஒன்று திரட்டி ஆரம்பித்த கப்பலை கட்டிமுடித்து அந்த கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து எவ்வாறு அனைவரையும் மீட்கிறார் என்பதே கதை.

விமர்சனம் :

கார்க்கி என்ற கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டு ஆரம்பமுதலே புரட்சிகர வசனம் பேசி அடிமை தனத்தை வெட்டிமுறிக்க ஆயுதம் தான் சரியானவழி என்று ஆயுதம் எடுத்து தன்னுடைய தாயின் (குஷ்பூ) அறிவுரைப்படி புரட்சி வழியில் போராடத்துணிந்து வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு ஆயுதம்தான் தீர்வுக்கு ஒரேவழி என்று ஆயுதம் ஏந்தி ஆளும் வர்கத்தினரை ஒழித்துக்கட்டும் கம்பீரமான இளைஞனாக நடித்திருக்கிறார், பா.விஜய். 

தொ‌ழி‌லா‌ள தோ‌ழர்‌களோ‌டு முற்‌போ‌க்‌கு சி‌ந்‌தனை‌களை‌ பகி‌ரங்‌கமா‌க பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ளும்‌ அவன்‌, நே‌ர்‌மை‌யா‌க தனது எழுத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ நம்‌பி‌க்‌கை‌ வி‌தை‌களை‌ வி‌தை‌க்‌கி‌றா‌ன்‌. ஆனா‌ல்‌ பே‌னா‌ முனை‌ எல்‌லா‌ சூ‌ழ்‌நி‌லை‌களுக்‌கும்‌ சி‌றந்‌ததல்‌ல என்‌பதை‌ நி‌னை‌ப்‌பவன்‌ சமயங்‌களி‌ல்‌ ஆயு‌தத்‌தை‌யு‌ம்‌ பயன்‌படுத்‌த வே‌ண்‌டும்‌ என்‌பதை‌ உணர்‌ந்‌து ஆயு‌த போ‌ரா‌ட்‌ட பா‌தை‌க்‌கு தன்‌னை‌ மா‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌கி‌றா‌ன்‌.

இவருடைய நடிப்பு ஒரு ஆக் ஷன் கதாநாயகனுக்கு தேவையான அனைத்து அம்சமும் அடங்கியுள்ளது. கார்க்கி என்ற கதாபாத்திரத்தில்  கலைஞரின் வீர வசனங்களை பேசி முற்போக்கு‌ இளை‌ஞனாக அதி‌கா‌ர வர்‌க்‌கத்‌துக்‌கு சம்‌மட்‌டி‌ அடி‌க்‌கி‌றா‌ன்‌. வஞ்‌சி‌க்‌கப்‌பட்‌டவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌வி‌ல்‌ பு‌துச்‌சி‌றகு பூ‌ட்‌டி‌னா‌ன்‌.  

நாயகி ரம்யா ரம்பீசன் கதைக்கு தேவைபடவில்லை செட்டியார் மகள் என்ற கேரட்டரில் நாயகனை சுற்றிவரும் இவர் டுயட் பாடல்களுடன் இவ்ர் வேலை முடிகிறது..

வில்லனாக சுமன் படம் முழுக்க மிரட்டியிருக்கிறார் இவரின் அடியாட்களுடன் இவர் செய்யும் அட்டகாசம் சூப்பர்.

கதைக்கேற்றவாறு அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமான பொருந்தியிருக்கிறார்கள். சுமனி‌ன்‌ கா‌தலி‌யாக சே‌னா‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ நமீதா. படத்‌தி‌ல அவர்‌ கவர்ச்சி காட்டி வி‌ல்‌லத்தனம் செய்திருக்கிறார் 

கா‌மெடி தேவையில்லை என்பதால் வடிவேலை சரியாக பயன்படுத்த வில்லை. ஒரு மிகபெரிய நடிகப்பட்டாளமே நடித்திருக்கிறது.
 
தோட்டா தரணி கலை ஒரு முழுநீள கப்பலையும், 50 ஆண்டுகளுக்கு முன்னைய கலாச்சாரத்தையும் கண்முன்னே காட்டியிருக்கிறது வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் பா.விஜய். மூன்று பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர்.
 

சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கம் இந்த இடத்தில் படத்தை தோய்வில்லாமல் கொண்டுச் சென்றிருக்கிறார்.


இறுதியாக கலைஞரின் வீர மற்றும் புரட்சி வசனங்கள் அனைவரையும் கைத்தட்ட வைத்திருக்கிறது. தன்னுடை 75-வது படத்திலும் தன்னுடைய 80-வது வயதிலும் இன்னும் வீரியம் குறையால் எழுதியிருப்பது பாரட்டுக்குரியது. ‌கலைஞருக்கு ஒரு வணக்கம் வைத்தே ஆகவேண்டும்.
 

இந்த இளைஞன் அனைவராலும் பேசப்படுவான்
 

நண்பர்களே இந்த விமர்சனம் படித்த கையோடு அப்படியே ஒரு பின்னுட்டம் இடுங்களேன்.. 

6 comments:

  1. ஒருமுறை பார்க்கலாம் என தோன்றுகிறது உங்கள் விமர்சனம் பார்த்தால், சௌந்தர்!! தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. SUPER...விமர்சனம் நன்று

    ReplyDelete
  3. இளைஞன் - பாராட்டி மன்னன்
    பா.விஜய் -IN கெட்டிக்காரத்தனம் !
    கலைஞருக்கு 87 வயசாச்சு பாஸ்
    அவர் வசனம் எழுதாத ஒரே கேரக்டர்
    இந்த ஆகாய மனிதனுக்கு தான்..

    ReplyDelete
  4. கடலோர மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு.

    "இளைஞன்" படம் பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளான தமிழர்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயல்வதால் , அபாயத்தை குறிக்கும் கூண்டு எண் 6 ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கடலுக்கு போகும் மீனவர்கள் இப்படம் பார்ப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...