இதுவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...
தோழர்களோடு தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...
முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..
என் அன்புள்ள எதிரியே..
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..
நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
அடுத்தமுறை அதை அடைந்து விட...
நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது
உன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
அதிகமாய் போராடவும் கற்றுக் கொடுத்திருக்கிறது...
என் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!
என் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும் தான் காரணம்
காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!
என்னோடு போரிட நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை
ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீழ்ந்து விடும் தருணம் வரும்போது
தேர்ல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..
அதுவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...
என்றும் போராட்ட களத்தில்
சௌந்தரபாண்டியன்...
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...
என்றும் போராட்ட களத்தில்
சௌந்தரபாண்டியன்...
எதிரியை முத்தமிடதுடிக்கும் தோழா...
ReplyDeleteஉன் பயனமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்...
நல்ல படைப்பு நண்பரே!!
ReplyDelete>>>>அதிகமாய் அயத்தப்படவும்..
ReplyDeleteஆயத்தப்படவும்
>>>ஓ... அன்புள்ள எதிரியோ
எதிரியே..
>>>அதிகாமய் முயற்சிக்கவும்..
அதிகமாய்
திருத்தவும்.
கவிதை நல்லாருக்கு. வித்தியாசமான சிந்தனை
எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டய நண்பர் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி..!
ReplyDeleteபிழைகள் திருத்தப்பட்டு விட்ட்து..
மீண்டும் பிழைகள் வராமல் பார்த்து கொள்கிறேன்..
மிகவும் அருமையான கவிதை..
ReplyDeleteஎதிரிகளையும் நேசிப்பதற்கு நன்றி..!