கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 January, 2011

ஆடுகளம் - திரைவிமர்சனம்

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு வீர விளையாட்டுகள் தமி‌ழக மக்களால் போற்றி வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது... அதில் பல்வேறு விளையாட்டுகள் இன்றய அளவில் அடியோடு மறக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று மறந்துப்போன ஒரு விளையாட்டு தான் சேவல் சண்டை. அந்த சேவல் சண்டையை மையாமாக வைத்து ‌வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் ஆடுகளம்.

கதை சுருக்கம் :

மதுரை, திருப்பரங்குன்றத்தில் சேவல் சண்டைக்கு  பேர் போனவர் பேட்டைக்காரன் (இந்த கதா பாத்திரத்தில் இலங்கை கவிஞர் வஜ்சா ஜெயபாலன்). இவருடன் தனுஷ், கிஷோர் மற்ற குமபல்கல்கள் இருக்கின்றனர். எதிரணியில் இண்ஸ்பெக்டர் சின்னசாமி டீம் (நடிகர் சம்பத் என்று நினைக்கிறேன்) தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது ஓரு முறையாவது சேவல் சண்டையில் வென்று விட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளர்.

இன்ஸ்பெக்டர் எதிரனியில் உள்ளவர்களை வளைத்து போடமுயன்று முடியாமல் போகிறது.. ஓரு முறை காவல் நிலையத்தில் பேட்டைக்காரனை அவமானம்  செய்யும் சின்னசாமி சேவல் சண்டையின் சவாலை எதிர்கொள்கிறார் தோற்பவர் சேவல் சண்டையை விட்டு விட்டு மொட்டை யடித்து கொள்ளவேண்டும் என்பது பந்தயம்.. இருதரப்புக்கும் சேவல் சண்டையில் பராபரக்கையில்  டாப்ஸியிடம் வாங்கிய கடனுக்காக பேட்டைக்காரன் சம்மதம் இல்லாமல் தன்னுடைய சேவலுடன் களத்தில் இறங்கும் தனுஷின் சேவல் ‌வென்று ‌விட அதோடு இடைவேளை விடப்படுகிறது. வில்லனும் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒதுங்கி விடுகிறார் வில்லனும் இங்கிருந்து காணவில்லை. (கோழிச்சண்டைகள் அதிக காட்சிகள் கிராப்பிக்ஸ் செய்து நிஜம்போல் காட்டியிருப்பது பிரமாதம்)

இப்படியிருக்க பேட்டைக்காரன் தன்னுடன் இருந்த ஒரு சின்ன பையன் தன்னைவிட பெரியாளகி விடுவானோ என்ற வெறியில் தனுஷ்க்கு எதிராக காய் நகர்த்தி எவ்வாறு தனுஷ்-க்கு இடஞ்சல் தருகிறார் என்பதே கதை..

பேட்டைகாரணுடன் சேர்ந்தே வரும் தனுஷ் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டியிருக்கிறார் (ஓவர் ஆக்டிங் இல்லைங்கோ) பேட்டைக்காரன் பேச்சை கேட்காமல் தான் வைத்திருக்கும் ஒரு சேவலுடன் இறங்கும் போதும் ஜெயிக்கும் போதும் தியாட்டர் கதிகலங்குகிறது...  பாடலுக்கு இவர்போடு டான்ஸ் தியாட்டரை ஆட வைக்கிறது.. தன் தாய் இறக்கும் போதும், போட்டியில் ஜெயித்து வந்த பணத்தில் பந்தா பணனும் போதும், காதலியிடம் ஆங்கித்தில் பேச முயற்சிக்கும் போதும், இறுதி கட்ட காட்சியிலும் தனுஷ் எங்கங்கு என்னவேண்டுமோ அதை தந்திருக்கிறார்.

படம் ஆரம்பத்தில் போலீஸ் விரட்டியதால் விட்டுவிட்டுவந்த சேவலை தேடிப்போகும் போதுதான் நாயகி டாப்ஸி சந்தித்து பார்த்த உடனே காதல் வயப்படுகிறார் பிறகு காதல் இல்லையென நாயகி மறுப்பதும்.. மீண்டும் நண்பர்களாகுவதும் படத்தோடு ஒன்றியிருக்கிறது.. இடைவேளைக்கு பிறகு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனுஷ் தன்னுடைய இயல்பான் நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

நாயகி டாப்ஸி ஒரு ஆங்கிலோ-இந்தியா பெண்ணாக நடித்திருக்கிறார் கதையில் இவருக்கு அதிக நடிப்பு வேளையோ தனியே டுயட்டோ இல்லை இருந்தாலும் இவருடைய வேலையை கச்சிதமான நடித்திருக்கிறார்.


ராதாரவியின் டப்பிங்கில் இடைவேளைவரை நாயகராகவும், அதன்பிறகு வில்லனாகவும் தன்னுடைய நடிப்பில் அனைவரின் நெஞ்சிலும் நின்று விடுகிறார். இலங்கை கவிஞர் ‌ஜெயபாலன், படத்தின் இறுதியில் இவர் செய்யும் வில்லவேளைகள் பிரமாதம்.

ஒரு கட்டத்தில் தனுஷின் தாய் மரணமடைந்து விட, தான் மதித்தை நண்பனை தனக்கு எதிராக திருப்பியும், தன்னை நம்பி வரும் நாயகியை மனம் மாற்றி திருப்பி அனுப்பியும், தனுஷ் போட்டியில் ஜெயித்த பணம் தொழில் தொடங்க கேட்கும் போது அந்தப்பணம் திருடுபோய்விட்டது என நாடகம் ஆடியும் இடைவேளைக்கு பிறகு நல்ல வில்லத்தனம் செய்திருக்கிறார் கவிஞர் ஜெயபாலன். தன் குட்டு வெளிப்படும் போது என்ன முடிவெடுக்கிறார் நாயகியை ‌தனுஷ் கைபிடித்தாரா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு பகலையும் இரவையும் மாறிமாறி படம்‌எடுத்த அசத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாசின் இசை, பாடல் (பாடல்களில் ரசிகர்களை ஆட வைத்திருக்கிறார் ) பின்னனி என இரவுப் பொழுதின் சிறுசிறு சப்தங்களுடன் யதார்த்தமாய் இருக்கிறது. தனுசை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வெற்றி மாறன் ‌வெற்றி பெற்றுறிருக்கிறார். சன் பிக்சர்ஸ் மற்றுமொறு வெற்றிப்படமான ஆடுகளம் இருக்கும்.

படத்தில் பிளஸ்
அனைவரின் யாதார்த்த நடிப்பு, குறிப்பாக தனுஷ், இலங்கை கவிஞர் ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
கதையோடு ஒன்றியே வரும் பாடல்கள்
பின்னனி இசை
யதார்த்தமான சண்டை காட்சிகள்
வசனம் (பயம் எங்களுக்கா நாங்க சுனாமிலேயே சும்மிங் போடுரவாங்க, சும்மாபேசிகிட்டே இருந்த கொண்டேபுடுவேன், நாங்கலெல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் பண்றவங்க போன்ற வசங்களில் தனுஷிக்கு தைதட்டல்)

 படத்தின் மைனஸ் :
இடைவேளை வரை விருவிருப்படையும் படம் இடைவேளைக்கு பிறகு வேகம் மிக குறைவு.
வசனங்கள் சரியான உச்சரிப்பில் இல்லாதது (ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவி தான் டப்பிங்)
படம் முழுக்க இரவிலே பயணிப்பது

மற்றபடி வெற்றிமாறன் கூட்டணி மீ்ணடும் ஒரு முறை வென்றிருக்கிறது.

கவிதை வீதியின் இந்த விமர்சனம் பிடித்திருந்தால் பின்னுட்டம் இடுங்கள், வாக்களியுங்கள் பின்பு ஏதாவது ஒரு கவிதையை படித்து விட்டு போங்கள்..

2 comments:

 1. மைனஸ்
  //இடைவேளை வரை விருவிருப்படையும் படம் இடைவேளைக்கு பிறகு வேகம் மிக குறைவு.
  வசனங்கள் சரியான உச்சரிப்பில் இல்லாதது (ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவி தான் டப்பிங்)
  படம் முழுக்க இரவிலே பயணிப்பது//

  பாட்டு பிளஸ்
  அதனால படம்
  சக்சஸ் தான்...

  (கலாநிதிக்கு காசு கொடுக்க,
  இளைஞர்கள் கல்லூரிக்கு போய் படிக்கப் வேண்டியது இல்லை...
  பாலபிஷேகம், குத்தாட்டம் போட்டாலே போதும்)

  ReplyDelete
 2. உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...