கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 September, 2011

பிரபல பதிவர்களின் வெளிவராத ரகசியங்கள்..கிசுகிசுப்பது பச்சைக்கிளி பாண்டியம்மா....

கிசுகிசு-1
தமிழ்மணத்தில் இந்த வாரமும் தன்னுடைய முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட அந்த பிரபல பதிவர்.. இந்த வாரம் ஏதும் கில்மா படம் வராததில் செம கடுப்பில் இருக்கிறார். சில தமிழ் படம் பார்த்து பல்பு வாங்கிய பின் அதை அட்லீஸ் பதிவையாவது ஹிட் செய்து விடலாம் என்ற முனைப்பில் இருக்கிறார். (விட்டில் வாங்கும் பல்புகளை இங்கு குறிப்பிட விரும்பவில்லை)

கிசுகிசு-2
பறவைகளுக்கு சரணாலையம் அமைத்த இந்த பதிவரின் பதிவை கிண்டலடிக்க யாராவது ஒரு அனானி வந்துவிடுகிறார் ஆகையால் இந்த அனானிகளை அழித்துவிட தற்போது பெரிய ரப்பர் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார். பரபரப்பாக பேசபட பதிவுகளுக்கு எப்படி தலைப்பு வைப்பது என்று தற்போது வகுப்புகள் எடுத்து வருகிறார்.

கிசுகிசு-3
மொக்கை பதிவுபோட்டு பிரபலமான சகதியில் உருளும்  பன்றியை அடைமொழியாக வைத்த இவர் தற்பபோது ‌எல்லா பதிவரும் மொக்கை பதிவை போட ஆரம்பித்தபிறகு அதனை படித்து விட்டு ‌முடியால் செம கடுப்பில் இருக்கிறார். இதை மையப்படுத்தி ஒரு பதிவும் இட்டுள்ளார். இதைவிடுத்து தொடர் கதை எழுத அதற்க்கு வரவேற்பு இல்லாததில் செம கடுப்பில் இருக்கிறார். (இங்கு வந்து என்னத்த பண்ணபோராரோ...)

கிசுகிசு-4
மதுரையில் இருந்து தமிழ் வாசிக்கும் இவர் தன்னுடைய பதிவுகளை எப்படியாவது மகுடம் சூட்டவேண்டும் என்று ஏகப்பட்ட தமிழ்மண கள்ளஓட்டுக்களை கைவசம் வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் முடியாததலால் நல்ல ஜோசியரிடம் யோசனை கேட்டுவருகிறார். (நல்ல நேரம் சதீஷ் கிட்ட இல்லிங்க நல்ல ஜோசியர்கிட்ட அட சதீஷ் ரொம்ப நல்லவருங்க) தன்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்த கடந்த வாரம் ரகசியமாக சென்னைக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார்..

கிசுகிசு-5
நெஞ்சில் மனோரஞ்சிதம் வைத்திருக்கும் இந்த பிரபல பதிவர் தன்னுடைய பழைய காதலை ஞாபகப்படுத்தி பதிவிட்டதில் அன்றிலிருந்து வீட்டில் சேர்க்கமால் விரட்டியடித்திருக்கிறர் அவர் வீட்டு தாய்குலம். தற்போது வேலை செய்யும் இடத்தில் தங்கியுள்ளதாக பக்ரைன் நாட்டு உளவு துறை அறிவித்துள்ளது... (இன்னு‌ம் நிறை காதல் மனதில் வைத்துக்கொண்டும் அதை பதிவிடும் முடிவை மாற்றியிருக்கிறார்)

கிசுகிசு-6
விக்கி விக்கி பேசும் உலகில் இருக்கும் இந்த பதிவர் மும்மூர்த்திகள் பதிவு போட்டதிலிருந்து வியட்நாமில் செம பல்பாம். போகும் வழியெங்கும் இவருக்கு வசையுடன் செமயா ஓடவிடுவதாக தகவல். அதனால்தான் அதைமறைக்க காமெடி வீடியோ படங்களை தன் பதிவில் நிரப்பி பதிவிட்டுவதாக தகவல்.
 
கிசுகிசு-7

எவ்வளவு சொல்லியும் நம்மை தமிழ்மணத்தில் வார பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லையே என தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். அதற்கு அவர்கள் ஏதும் பதில் சொல்லாததில் செம கடுப்பில் இருக்கிறார் வந்தேமாதரத்தைச் சார்ந்த இவர்.

 இதுதான் பல்பு....

டிஸ்கி-1 : இந்த பதிவிற்க்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இது ஒரு விளம்பரதாரர் பதிவு.

டிஸ்கி-2 : இதையும் மீறி யாராவது பின்னூட்டத்தில் மிரட்டல் விடுத்தால் அவர்களுக்கு தனிப்பதிவிட்டு அவர்களின் அந்தரங்கம் அத்தனையும் அரங்கேற்றப்படும் என்று எச்சரிக்கிறேன்.

டிஸ்கி-3. கிசுகிசுக்கள் தொடரும்.....

57 comments:

 1. இது என்ன வகையான கிசு கிசு ....
  இதுக்கு எல்லார் பெயரையும் போட்டு எழுதி இருக்கலாம் .அவ்ளோ ஈசியா இருக்கு ..
  பன்னிகுட்டி தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கு ............
  மனுஷன் பின்னுராறு .......

  ReplyDelete
 2. யாரு யாரு எந்தெந்தப் பதிவர்னு கண்டுபிடிச்சுட்டோம்ல..
  காமெடியா எடுத்துக்குறாங்களா? இல்ல கண்டனம் சொல்றாங்களானு பாக்கலாம்.

  ReplyDelete
 3. இதுக்கு நேரடியா பேரையே சொல்லியிருக்கலாம்..

  ReplyDelete
 4. யப்பப்பா
  என்ன மிரட்டல்யா......
  இத படிச்சிட்டு யாராவது நல்லாயின்னைனு பின்னூட்டம் போட்ருவாங்க.....
  ம்ம்ம்ம்
  சரிதான்....
  நடத்துங்க..

  ReplyDelete
 5. நம்ம கவிதை வீதி சௌந்தரை 10.28 இல் இருந்து காணவில்லை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு அடி உதை வழங்கப்படும்.

  ReplyDelete
 6. யோவ் மாப்ள மைனஸ் ஓட்டு போட வைட்டிங் தமிழ்மணம் இன்னும் இணையல...சீக்கிரம் ஹிஹி!

  ReplyDelete
 7. யோவ் இதுக்கு பேரையே நேரிடையா போட்டு இருக்கலாம்..

  ReplyDelete
 8. கிசு கிசு எழுத முயற்சியா.. உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 9. பதிவர்கள் பற்றிய கிசு கிசு
  என்று தலைப்பை பார்த்து
  வந்தா எல்லாம் பிசு பிசு
  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. பல்பு பல்பு ந்னு எல்லா சொல்லி தான் பார்த்து இருக்கேன்
  நீங்க தான் முதல் முறையா இதான் பல்புன்னு படத்த போட்டு கான்பித்து இருக்கீங்க போல
  பதிவ படிச்சிட்டு அந்த பல்ப வாங்கிக்கனுமா?

  ReplyDelete
 11. சூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க தல..
  அதுவும் கருண் கண்டு பிடிக்கும் ரப்பர் பற்றிய தகவல்.......பயங்கர காமெடி.

  ReplyDelete
 12. பஹ்ரேன் பதிவர் அப்போ இனிமே நீர் நிலைகளில் குளித்து மகிழ என்றாலும் ஊருக்கு வரமாட்டார் போல இருக்கே....

  ReplyDelete
 13. : இந்த பதிவிற்க்கும் எனக்கும் சம்மந்தமில்லை. இது ஒரு விளம்பரதாரர் பதிவு.

  இதுதான் பல்பு....~~~!!!!

  ReplyDelete
 14. டிஸ்கி-3. கிசுகிசுக்கள் தொடரும்.....//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  இன்னும் சில பேரின் டவுசர் உருவப் போறீங்களா...

  ReplyDelete
 15. அடடா கிசு கிசு என்று விட்டு விக்கிலீக்ஸ் மாதிரி பகிரங்கமாவுல்ல கிடக்குது...

  ReplyDelete
 16. எல்லாம் சரி படிக்க விடமால் குறுக்க மறுக்க வந்து நிக்கும் இந்த குருவி கட்டாயம் தேவைதானா?

  பயங்கரக் கடுப்பேத்ததுப்பா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

  ReplyDelete
 17. ////////
  ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

  எல்லாம் சரி படிக்க விடமால் குறுக்க மறுக்க வந்து நிக்கும் இந்த குருவி கட்டாயம் தேவைதானா?

  பயங்கரக் கடுப்பேத்ததுப்பா...
  ////////////


  இந்த குருவியை போடுறப்ப பந்தாவா போட்டுட்டேன்...


  எப்படி எடுக்குறதுன்னு தெரியலிங்க...

  எப்படி எடுக்கனும்ன்னு சொல்லுங்க எடுத்துடுறேன்...

  ReplyDelete
 18. எலேய் சிபி அந்த வீச்சறுவாளை இங்கே தூக்கி போடுலேய், ரொம்பநாளா அருவாளுக்கு வேலையில்லாமல் இருக்கேன்னு பார்த்தேன் இன்னைக்கு சௌந்தர் மாட்டிகிட்டான்....

  ReplyDelete
 19. நானா காதலிச்சேன்...?? பாவி, அவதானே காதலித்தாள் அவ்வவ்வ்வ்வ்....

  ReplyDelete
 20. நான் என்னய்யா பாவம் பண்ணுனேன், ரஞ்சிதா மனோ ரஞ்சிதான்னு, மைனஸ் ஒட்டு கன்பாம்னு சிபி சொல்றான் ஹி ஹி...

  ReplyDelete
 21. உமக்கு மேட்டர் தெரியாதா...?? சிபி டைரக்டில், கில்மா படம் ஒன்னு எடுத்துட்டு இருக்கானாம் வீட்டுக்கு தெரியாமல்....

  ReplyDelete
 22. கிசு கிசு பிசுபிசுத்துப் போச்சு......

  ஆமா...அடுத்த கிசு கிசு எப்போ????

  ReplyDelete
 23. கிசு கிசுவா இது?.ஆமா, கவிதை வீதியிலிருந்து கிசுகிசு என்ற கிணற்றுக்குள் விழுந்தாச்சா?

  ReplyDelete
 24. தலைவா....

  கிசு கிசு எங்கே....அதான் எல்லாத்தையும் பகீரங்கமா வெளிச்சம் போட்டு காட்டிடீன்களே,
  ஓ இதுக்கு பேருதான் கிசு, கிசுவா....

  ReplyDelete
 25. சூப்பர்பாஸ்....நானும் கொஞ்ச நாளைக்கு முன்பு இப்படி.....பதிவர்களை பத்தி கிசு..கிசு போட்டேன்.............உடனே..பல இனையதளங்கள் காப்பி பன்னி..அந்த பதிவை செம பேமஸ் ஆக்கிட்டாங்க............அதனால் உங்கள் இந்த பதிவையும்...காப்பி பன்னினாலும்.பன்னிடுவாங்க..கவனம்...

  நல்லா சிரிப்பு வருது.......சூப்பர்...

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா. செம பல்பு.

  ReplyDelete
 27. @MANO நாஞ்சில் மனோ

  கிளம்பிட்டாய்யா...
  கிளம்பிட்டாய்யா..

  ReplyDelete
 28. அவரே அது போன்ற படத்துக்கு விமர்சனம் எழுதாம இருந்தாலும் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விடுரீங்களே....

  ReplyDelete
 29. பதிவு சூப்பர்....

  எப்பேர்பட்ட கிசு கிசு...
  வீட்டில் தாய்க்குலத்திடம் இப்படி அநியாயமா போட்டுக் கொடுத்தீறே....

  ReplyDelete
 30. கிசு கிசு கேட்பதிலேயே ஒரு சுகம் இருக்கிறது. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 31. வெளம்பரத்துக்கு நன்றிண்ணே.....

  ReplyDelete
 32. அப்புறம் அண்ணே நான் மொக்கை போடுறதை தாக்கி எந்த பதிவும் போடல...... எதுக்கும் மறுக்கா வந்து அந்த பதிவ படிச்சு பாருங்கண்ணே....

  ReplyDelete
 33. கிசு கிசு எழுதியவருக்குத் தானே அந்த பல்பு. (எல்லோரும் இந்த குண்டு பல்பை ஒழிக்கணும்னு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதை மிகப் பெரிதாக வேறு போட்டிருக்கிறீர்களே)

  ReplyDelete
 34. செம்ம பல்பு.. எல்லார்ட திருவுசர்கள கலட்டிரதோட நின்னுடுங்க சார்...

  ReplyDelete
 35. //////////
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  வெளம்பரத்துக்கு நன்றிண்ணே.....

  /////////////

  நமக்குள்ள எதுக்குங்க நன்றி.....
  உங்க புகழை இந்த தரணியெங்கும் பரப்புவது என் கடமை....

  ReplyDelete
 36. ///////
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  அப்புறம் அண்ணே நான் மொக்கை போடுறதை தாக்கி எந்த பதிவும் போடல...... எதுக்கும் மறுக்கா வந்து அந்த பதிவ படிச்சு பாருங்கண்ணே....
  //////////

  தலைப்பார்த்து ஒரு பதிவு போட்டீங்களே..

  நீங்க பதிவுல மொக்கை போடுறீங்க..
  நாங்க தலைப்பிலே மொக்கை போடுவோம்...

  ReplyDelete
 37. ///////
  வைரை சதிஷ் said... [Reply to comment]

  எங்க கிசு கிசு

  ////////

  அடுத்த ரூட்ல வருதுங்க...

  ReplyDelete
 38. தமிழை வாசிக்கிற அந்த பதிவரோட முக்கியமான கில்மா மேட்டரை போடாமல் விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்......

  ReplyDelete
 39. /////
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  தமிழை வாசிக்கிற அந்த பதிவரோட முக்கியமான கில்மா மேட்டரை போடாமல் விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்......
  ///////////

  அதுக்கு என்ன அடுத்த கிசுகிசு -வுல போட்டுட்டா போச்சி

  நல்லதை போடச் சொன்னாதான் யோசிக்க வேண்டியிருக்கும்....

  போட்டு கொடுக்கிறது நமக்கு கைவந்த கலையாச்சே...

  ReplyDelete
 40. எது மாதிரியும் இல்லாமா புது மாதிரியா இருக்கே!!! முதல் கிசுகிசுல சொன்ன பதிவர் வீட்ல பல்பு வாங்குறத எல்லாம் மோப்பம் புடிச்சி எழுதி இருக்கீங்களே இதுல ஏதும் சட்ட சிக்கல் வந்துடாதா?

  ReplyDelete
 41. ////கிசுகிசுக்கள் தொடரும்.....///
  இன்னும் என்னா என்ன கருமாந்திரம் எல்லாம் வெளிவர போகுதோ?

  ReplyDelete
 42. நீங்க கிசு கிசு எப்படி எழுதனும்னு பாடம் படிச்சுட்டுவாங்க இப்படி வெளிப்படையா எல்லாரையும் கண்டு பிடிக்கும் படியா போடுவீங்க?

  ReplyDelete
 43. கிசு கிசு கலக்கல்

  ReplyDelete
 44. நீ திருந்தவே மாட்ட போல!
  பதிவு எழுத மேட்டர் இல்லீன்னா
  இப்பிடில்லாமா பண்ணுவ?
  அடங்கிடியோவ்!...

  ReplyDelete
 45. டிஸ்கி:3- செம முன்னெச்சரிக்கை.

  ReplyDelete
 46. //டிஸ்கி-2 : இதையும் மீறி யாராவது பின்னூட்டத்தில் மிரட்டல் விடுத்தால் அவர்களுக்கு தனிப்பதிவிட்டு அவர்களின் அந்தரங்கம் அத்தனையும் அரங்கேற்றப்படும் என்று எச்சரிக்கிறேன்.//

  சீக்கிரம் வெளியிடுங்கள் பாஸ்.

  tamil manam 17

  ReplyDelete
 47. கலக்கிட்டிங்க போங்க.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...