கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 October, 2011

விஜய் -ன் வேலாயுதம் வில்லு பட சாதனையை முறியடிக்குமா....


தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து தொடர் தோல்விப்படங்களுக்கு பிறகு காவலன் கொஞ்சம் பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர வேலாயுதம் கைகொடுக்குமா அல்லது விஜயின் தொடர் தோல்விகள் இன்னும் தொடருமா என்று படம் வெளிவந்த பிறகு தெரியும். மேலும் விஜய் அரசியலுக்கு வந்தப்பிறகு வெளிவரும் முதல் படம் என்ற எதிர்பார்ப்பையும் ‌வேலாயுதம் படம் பெற்றுள்ளது...

நண்பன் படத்தில் விஜய் நடித்தாலும் அவருக்கென்று தனிப்பட்ட பெயர் அதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதில் பல ஹிரோக்கள் மற்றும் ஷங்கரின் பெயர்களே முன்னிருத்தப்படும். ஆகையால் வேலாயுதம் படமே தற்போதைக்கு விஜய்க்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

அது சரி அது என்ன வில்லு படசாதனையா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.... வில்லு படம் தமிழுக்கு‌ ‌மிகப்பெரிய சாதனையை பெற்றுத் தந்துள்ளது.

அது என்ன தெரியுமா...

வில்லு படம் வெளியான அந்த வாரத்தில் செல்போன் நிறுவனங்கள் வெளியிட்ட ஒரு அறிக்கை.
 
அந்த ஒரு வாரத்தில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் (SMS) பட்டியல்

“காலை /  மாலை வணக்கம்” என 10 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“குட் நைட்” என 15 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“நட்பு சார்ந்த தகவல்கள்” என 22  ஆயிரம் குறுந்தகவல்கள்.

“சர்தார்ஜி ஜோக்ஸ்” என 50 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“கிரிக்கெட் அலார்ட்ஸ்” என 75 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“கமர்சியல்” என 1 லட்சம் குறுந்தகவல்கள்.

ஆனால்
“வில்லு” படத்தை கிண்டல் செய்து 20 லட்சம் குறுந்தகவல்கள்.

பகிர்ந்துக் கொள்ளப்பட்டது என தகவல் வெளியானது

SMS-ல் இவ்வளவு பெரிய சாதனையை எந்த ஒரு படமும் செய்யவில்லை ‌என சர்வதேச சினிமா சங்கங்கள் வில்லு படத்திற்க்கு புகழாரம் சூட்டியது.

தற்போது வெளியாக இருக்கும் வேலாயுதம் படம் அந்த சாதனையை முறியடிக்குமா பெருத்திருந்து பார்ப்போம்...
 

21 comments:

 1. விஜயின் சாதனை தொடர வாழ்த்துவதா... வேண்டாமா...

  ReplyDelete
 2. கி கி கி கி இப்பிடிஎல்லாமா சம்பாதிக்கிராயிங்க அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 3. டாகுட்டருக்கு மறுபடியும் மலையாளம் ரீமேக்குதான் சரிப்படும்....

  ReplyDelete
 4. டாகுத்தரு பாவம்யா............கண்டிப்பா வில்லு பட சாதனையை வேலாயுதம் முறியடிக்கும் அதைவிட பதிவுலகில் அதிகள் கலாய்க்கப்பட்டு புதிய ரெக்காட் கிரியேட் பண்ணினாலும் ஆச்சரியம் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி....

  ReplyDelete
 5. அதுல நம்ம பங்கு எத்தனைங்கோ....

  ReplyDelete
 6. நீங்க டாக்டரை பாராட்டுறிங்களா இல்ல ஓட்டுரிங்களா?

  ReplyDelete
 7. நீங்கள் சொன்னது உண்மை தானா ?? இல்லை நகைச்சுவைக்காகவா ?

  ReplyDelete
 8. என்னங்க தமிழகத்தின் அண்ண ஹசாரேவை இப்படி ஓட்டுறீங்க

  ReplyDelete
 9. சாதனை எல்லாம் எங்களுக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி !!!

  ReplyDelete
 10. ஐயோ...பாவம் !!எத்தனை அடிதான் தாங்குவார் டாக்டர்.

  ReplyDelete
 11. எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு.
  நிச்சயம் இது
  வில்லுவின் சாதனையை முறியடிக்கும். ஆனால் ஒரு நாளைக்கு நூறுக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்பதால் ஒரு வேளை இது அடி வாங்கலாம்.
  என்ன சந்தேகம்னா... விசய் தான் தன செல்வாக்கை பயன்படுத்தி இந்தா மாதிரி குறுஞ்செய்திகளுக்கு ஆப்பு வைத்தாரோ என்னமோ.
  உண்மையா பொய்யா

  ReplyDelete
 12. SMS-ல் இவ்வளவு பெரிய சாதனையை எந்த ஒரு படமும் செய்யவில்லை ‌என சர்வதேச சினிமா சங்கங்கள் வில்லு படத்திற்க்கு புகழாரம் சூட்டியது.

  தற்போது வெளியாக இருக்கும் வேலாயுதம் படம் அந்த சாதனையை முறியடிக்குமா பெருத்திருந்து பார்ப்போம்.../

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. நல்ல சாதனைதான், பொறுத்திருந்து பாப்போம்.

  ReplyDelete
 14. என்னங்க?நம்ம டாக்குட்டரைக் கிண்டலா பண்றீங்க?!

  ReplyDelete
 15. அடப் பாவிங்களா... லட்சக் கணக்கிலஎஸ் எம் எஸ் அனுப்பி வேற தளபதியின் காலை வாருறாங்களா..

  நீங்க எழுதிய விதம் சுவாரஸ்யமா இருந்திச்சு பாஸ்...

  செல்போன் எஸ் எம் எஸ் என்று வித்தியாசமான முறையில் கலாய்ச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 16. படம் வரட்டும் பாப்ப்போம்

  ReplyDelete
 17. சீனா அய்யா சொன்னது போல் படம் வரட்டும் பார்ப்போம்.

  ReplyDelete
 18. இப்படி நம்பி நம்பித்தான்...
  படங்களை கோட்டை வீடுகிறார் விஜய்...
  பார்ப்போம்...இதையாவது....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...