கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 November, 2011

உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை...


பாவம் அவர்கள்
பக்கத்து வீட்டில் பூத்த
ரோஜாவை அதிசயிக்கிறார்கள்...

இங்கே ஒரு பூ
பேசுகிறது என்று தெரியாமல்...


வார்த்தைகள் வசமிருந்தும்
என் காதலிக்காக
ஒரு “காதல் கவிதை” கூட எழுதவில்லை

அவளுக்கு “கவிதை” பிடிக்காது....


காதலைச் சொல்ல
நானும் தயங்கிக்கொண்டிருந்தேன்...
நீயும் தயங்கிக்கொண்டிருந்தாய்..

பிறகு எப்படி தெரிந்தது
ஊராருக்கு மட்டும்...


தையாவது இழந்து
எதையாவது கொடு என்றாள்..

நேரத்தை வீணடித்து
நேர்த்தியாய் ஒரு கவிதை தந்தேன்....


ன்னால் மட்டும் எப்படி முடிகிறது
தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...

உன்னிடம் இருந்துதான்
தெரிந்துக்கொண்டேன்
காதல் கூட நோய்தான் என்று...

என் இனிய கொடியவளே
என்னோடு நிறுத்திவிடு
உன் கருணைகொலையை...!

கூகிலில் கிடைத்த படங்களுடன் என் காதல் கவிதைகளும்...

19 comments:

 1. உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
  தூரத்தில் இருந்தே கொள்வதற்கு...////

  இங்கு கொல்வதற்கு என்று வரவேண்டும். மாற்றிக்கொள்ளுங்கள் அய்யா....

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. ////////
  புரட்சிக்காரன் said... [Reply to comment]

  உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
  தூரத்தில் இருந்தே கொள்வதற்கு...////

  இங்கு கொல்வதற்கு என்று வரவேண்டும். மாற்றிக்கொள்ளுங்கள் அய்யா....

  ///////////

  முதல் முதலாய் கவிதைவீதிக்கு வருகைத்தந்த புரட்சிக்காரனை வருக.. வருக என வரவேற்கிறேன்...

  பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்

  ReplyDelete
 4. கவிதை அருமை சௌந்தர்

  அது சரி வதையும் வாதையும் இல்லாத காதல் சுவாரசியமா இருக்குமா?

  ReplyDelete
 5. என் இனிய கொடியவளே. விளிப்பு அருமை சௌந்தர் சார்... கவிதைகள் எல்லாம் (வழக்கம்போல்) ரசிக்க வைத்தன.

  ReplyDelete
 6. வார்த்தைகள் வசமிருந்தும்
  என் காதலிக்காக
  ஒரு “காதல் கவிதை” கூட எழுதவில்லை

  அவளுக்கு “கவிதை” பிடிக்காது....//

  என்னாது கவிதை பிடிக்காத காதலியா, அப்போ அதுக்கு சரிப்பட்டு வராது விட்டுடுங்க....!!!

  ReplyDelete
 7. MANO நாஞ்சில் மனோ said...
  வார்த்தைகள் வசமிருந்தும்
  என் காதலிக்காக
  ஒரு “காதல் கவிதை” கூட எழுதவில்லை

  அவளுக்கு “கவிதை” பிடிக்காது....//

  என்னாது கவிதை பிடிக்காத காதலியா, அப்போ அதுக்கு சரிப்பட்டு வராது விட்டுடுங்க....!!!
  same feeling hahahha

  ReplyDelete
 8. நல்லா இருக்கு மச்சி....

  ReplyDelete
 9. ////உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
  தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...

  உன்னிடம் இருந்துதான்
  தெரிந்துக்கொண்டேன்
  காதல் கூட நோய்தான் என்று...

  என் இனிய கொடியவளே
  என்னோடு நிறுத்திவிடு
  உன் கருணைகொலையை...!
  /////

  அட அட அற்புதமான வரிகள் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது

  ReplyDelete
 10. பிடிச்சிருக்கு கவிதை பாராட்டுக்கள்

  ReplyDelete
 11. //உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
  தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...
  உன்னிடம் இருந்துதான்
  தெரிந்துக்கொண்டேன்
  காதல் கூட நோய்தான் என்று...//

  அனுபவித்து எழுதிய காதல் வரிகளா நண்பரே..

  ஒவ்வொரு வரியும் அருமை

  ReplyDelete
 12. கவிதை பிடிக்காது என்று சொல்வதற்கு ஒரு கவிதையா?

  இந்த படங்களை எல்லாம் எங்கே இருந்து புடிக்கிறீங்க? அருமை/

  ReplyDelete
 13. எல்லாமே மனதைத் தொட்டதாய் இருக்கு சௌந்தர் !

  ReplyDelete
 14. //அவளுக்கு “கவிதை” பிடிக்காது....//

  அவள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கவில்லையோ?


  //காதலைச் சொல்ல
  நானும் தயங்கிக்கொண்டிருந்தேன்...
  நீயும் தயங்கிக்கொண்டிருந்தாய்..

  பிறகு எப்படி தெரிந்தது
  ஊராருக்கு மட்டும்...//

  அற்புதம்.

  ReplyDelete
 15. காதலின் வாதையைக் கச்சிதமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன வரிகள். இது ரொம்ப அழகு.

  //காதலைச் சொல்ல
  நானும் தயங்கிக்கொண்டிருந்தேன்...
  நீயும் தயங்கிக்கொண்டிருந்தாய்..


  பிறகு எப்படி தெரிந்தது
  ஊராருக்கு மட்டும்...//

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...