பூக்களை அறுப்பது
பாவம் என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
கோயிலுக்கு செல்கையில்
சப்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
காலில் கொலுசு அணிந்து செல்கிறாய்...!
இது எப்படி நியாயம்...?
கடவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?
இரவு வான்நிலவை
அதிகம் நேசிப்பேன் என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிவிடுகிறாய்..!
இது எப்படி நியாயம்..?
கவிதை எனக்கு பிடிக்கும் என்று
கண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?
காதல் தவறு என்று
எனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?
படங்கள் : நண்பர் இளையராஜாவின் ஓவியங்கள்
வருகைப்புரிந்த
அனைவருக்கும் என் நன்றிகள்...!
கவிதையின் வரிகள் அருமை...
ReplyDeleteஅருமை .
ReplyDeleteஅழகிய கவிதை .முரண்பாடு நியாயம் ஆகுமா என கேட்டு ! அருமை கவிதை
ReplyDeleteத.ம 2
நல்லா இருக்கு நண்பா.. எல்லாம் இங்கே முரண் தானே ??
ReplyDeleteஓவியங்களும் கவிதை...
ReplyDeleteசூப்பர் மச்சி...
ReplyDelete////காதல் தவறு என்று
ReplyDeleteஎனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?
////
சூப்பர் பாஸ்
நல்ல கவிதை
ReplyDeleteநல்ல கேள்விகள்!!
கவிநயம் அருமை!
த ம ஓ 3
புலவர் சா இராமாநுசம்
வலைப் பக்கம் வருவதேயில்லை
ReplyDeleteகோபமா!?
புலவர் சா இராமாநுசம்
நல்ல வரிகள் ........
ReplyDeleteSuper kavithai..
ReplyDeleteKavithai nalla iruku sago
ReplyDeleteகுட் ஒன்
ReplyDeleteஎன்னாது காதல் தவறா...?
ReplyDeleteசம்திங் ராங்கா இருக்கே.....
கவிதை கலக்கல் நல்ல ரசிக்கும் கேள்விகள்...!!!
நீங்கள் கேட்கும் நியாயங்கள்
ReplyDeleteநியாயமாகத்தான் படுகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 11
காதல்
ReplyDeleteசொ
ட்
டு
கி
ற
து
@NIZAMUDEEN
ReplyDeleteஅட... உங்கள் சித்திர கவிதை அருமை.
@ரசிகன் ஓ... நன்றி ரசிகன்...
ReplyDelete//பூக்களை அறுப்பது
ReplyDeleteபாவம் என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!//
நானும் உங்கள் கட்சி தான். சூடிக்கொள்கி"றார்" வார்த்தையை எச்சரிக்கையாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
பூவிலும் நீ இருப்பதால் தான் பூவை பறித்து உனக்கு நான் பூஜை செய்வதில்லை, "பார்க்கின்ற மலரூடு நீயே இருந்தி.." என தாயுமானவர் பாடுகிறார்.
//கடவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?//
கண்ணன் கருப்பு தானே...
அழகான வரிகள் நண்பா...
ReplyDelete//பூக்களை அறுப்பது // பூக்களை "அறுப்பதை" இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
ReplyDelete//////////
ReplyDeleteஅமர பாரதி said... [Reply to comment]
//பூக்களை அறுப்பது // பூக்களை "அறுப்பதை" இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
///////////
உண்மைதான் நண்பரே...
சொ்ல்லாட்சியில் பறிப்பது என்பது யதார்த்தமானது...
”பறிப்பது“ என்று சொல்லும்போது பூவை கொடுமைப்படுத்துவது போல் ஆகாது.
கிள்ளுவது... என்ற வாய்ர்த்தையும் மலரை ஓரளவுக்கு காயப்படுத்தும் சொல்போல் தெரிகிறது.
ஆகையாலே அறுப்பது என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.
அறுப்பது என்ற வார்த்தை பூ கொலை செய்வதற்க்கு ஈடாககொள்ளப்படும் என்பதால் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.
தாமரை, அல்லி, சாமந்தி போன்ற மலர்களை ஒரு சிறிய கத்திக்கொண்டுதான் அறுப்பார்கள் நண்பரே...
தங்கள் வருகைக்கு நன்றி...
அழகிய கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDelete>கவிதை எனக்கு பிடிக்கும் என்று
ReplyDeleteகண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?
ஓஹோ, அப்படிப் போகுதா? :-)
அன்பின் சௌந்தர் - அருமை அருமை - கவிதை அருமை - சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பதை அழகாக நயமாகச் சுட்டிக்காட்டுவது நன்று.
ReplyDeleteசூடிக் கொள்கிறார் - சூடிக் கொள்கிறாய் என வர வேண்டுமா ....
வருகைப்புரிந்த - வருகை புரிந்த என இருக்க வேண்டும்
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துகள்...
ReplyDeleteநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு