கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 November, 2011

நான் ஒத்துக்கொள்கிறேன்.. என் கவிதைகள் அனைத்தும் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது..!


வாடிப்போன பூக்களை 
அவள் கூந்தலிலிருந்து களையும் போது ‌
அறுந்து போகும் அந்த ஒற்றை முடி...!

வள் சாப்பிடும்போது
சிதறி கீழே விழும் 
சில சோற்றுப் பருக்கைகள்...!

வள் நடந்துபோக 
கூந்தலில் இருந்து உதிரும் 
ரோஜா இதழ்கள்...!

வள் பேசும் போது 
ஒட்டித்திறக்கும் 
அந்த பொன்னிதழ்கள்...!

வளின் ஸ்பரிசத்தை 
தடவிப்பார்க்கும் அந்த கடைசி 
மழைத் துளிகள்...!

வளின் கால்கள் ‌மோதி 
அவிழ்ந்து கிடக்கும் 
அந்த கொலுசு சலங்கைகள்...!

வற்றையெல்லாம் விட 
அவள் நடக்கும்போது 
வீதிகளில் படியும் அழகிய
காலடித்தடங்கள்...!

வையெல்லாம் 
அவள் எனக்காக விட்டுச்செல்லும் 
புதுக்கவிதைகள்...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

36 comments:

 1. ஆஹா அப்படியா சேதி
  கவி தரும் மூலத்தையே ஒரு அருமையான கவிதையாக்கி
  தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 1

  ReplyDelete
 2. இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?

  ReplyDelete
 3. //////
  பாலா said... [Reply to comment]

  இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?

  /////////


  இரண்டுக்காக இரண்டும்...

  ReplyDelete
 4. அனுபவித்து எழுதிய சொற்கள்...
  அதிகப்படியான அன்பு
  பார்ப்பவைஎல்லாம் கவிக்கருவாய்
  சமைத்திருக்கிறது...
  அருமை அருமை..

  ReplyDelete
 5. கவிதை எங்கெல்லாம் இருக்கிறது!நன்று!

  ReplyDelete
 6. இங்க பார்ரா! சூப்பர்! :-)

  ReplyDelete
 7. இவையெல்லாம்
  அவள் எனக்காக விட்டுச்செல்லும்
  புதுக்கவிதைகள்...!//

  தலைப்புக்கும், இந்த வரிகளுக்கும் செம பொருத்தமா இருக்குய்யா வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 8. விக்கியுலகம் said...
  கவிதை....கவிதை//

  ஆமா புதுசா சொல்ல வந்துட்டான்....!!!

  ReplyDelete
 9. பாலா said...
  இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம். தலைப்புக்காக எழுதிய கவிதையா இல்லை கவிதைக்காக வைத்த தலைப்பா?//

  ஹா ஹா ஹா ஹா நான் கேக்கனும்னு நினைச்சேன் நீங்க கேட்டுட்டீங்க...!!!

  ReplyDelete
 10. நல்லாருக்குங்க கவிதை.
  //அவள் பேசும் போது

  ஒட்டித்திறக்கும்

  அந்த பொன்னிதழ்கள்...!//
  இந்த வரிகள் தவிற மீதி எல்லாமே அந்த பெண்கிட்டேருந்து விழுந்துகொண்டே இருக்கு.

  தப்பா எடுத்துக்காதிங்க.மனதில் டக்னு தோன்றியதை சொன்னேன்.

  ReplyDelete
 11. இவையெல்லாம்
  கவிதை கரு(வூ) மூலங்கள்
  அருமை! மிக அழகாகச் சொல்லிவிட்டீர்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. ////இவையெல்லாம்
  அவள் எனக்காக விட்டுச்செல்லும்
  புதுக்கவிதைகள்...!
  ////

  மிக எளிமையான உரை நடையில் அழகான கவிதை

  பாலா அண்ணன் கேட்டது போல தலைப்பு...........ஹி.ஹி.ஹி.ஹி....

  ReplyDelete
 13. கவிதையின் ஊற்றுக் கண்ணை நீங்கள் கவிதையின் மூலமே அறிமுகப்படுத்தி இருந்தது பிரமாதம். தலைப்பைப் பார்த்ததும் என்னமோ ஏதோ என்று நினைக்க வைத்து ஏமாற்றிய உம்மை... இன்னும் இதுபோன்ற கவிதைகள் நிறையப் படைக்கும்படி சபிக்கிறேன்...

  ReplyDelete
 14. எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...

  ReplyDelete
 15. அருமையான இலகு மொழி நடையில் கவிதை உள்ளது.

  ReplyDelete
 16. என் வலையின் பிழை சரி செய்யபட்டுவிட்டது

  ReplyDelete
 17. அருமை சௌந்தர்..

  இப்போ தெரிஞ்சுக்கிட்டோம் கைவதை எங்கே இருந்து வருதுன்னு :P

  ReplyDelete
 18. மிகவும் அருமை..

  நல்லா இருக்கு மைண்ட்ல வச்சுருக்கேன், நான் படம் எடுக்கும்போது கண்டிப்பா நீங்களும் அம்பாளடியாளும் தான் பாட்டு எழுதனும்...

  சும்மா...

  ReplyDelete
 19. மனதை வருடும் புதுக்கவிதை அருமை

  ReplyDelete
 20. அசத்தலான காதல் 'புதுக்'கவிதைகள்..

  ReplyDelete
 21. கவிதை நல்லா இருக்கு.

  ReplyDelete
 22. கவி மிகவும் நன்றாக உள்ளது.உங்களது ரசனை மிகவும் பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள் கவிஞரே.

  ReplyDelete
 23. காதல் ஒருவனை கவிஞனாக்கும்!
  காதலியின் அழகு ஒருவனை மாகாகவிஞனாக்கும்!!

  ReplyDelete
 24. ஆஹா.. அருமையான கவிதைச்சந்தர்ப்பங்கள் :-)

  ReplyDelete
 25. கலக்கல் கவிதை நண்பா

  ReplyDelete
 26. அவளுக்கு இப்புதுக் கவிதை எப்படி?

  ReplyDelete
 27. உங்க கவிதை சூப்பர்! இலையோடு பூ பூத்திருக்கிற கொடியை அப்படியே அழகான பெண்ணா மாத்தியிருக்காரே! யார் அந்த ஓவியக் கவிஞர்?.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...