கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 November, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?


வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!



**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்... (Repost)

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..! 

31 comments:

  1. விரும்பிய ஒருத்தரை மட்டும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
    விரும்பிய அனைவரையும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!//

    சும்மா புல்லரிக்குதுய்யா...!!!!

    ReplyDelete
  2. கண்ணில் ஒரு மின்னல்...
    முகத்தில் ஒரு சிரிப்பு...
    சிரிப்பில் ஒரு பாசம்...
    பாசத்தில் ஒரு நேசம்...
    நேசத்தில் ஒரு இதயம்...
    அந்த இதயத்தில்
    என் இனிய நண்பன் நீ...//

    அடடடடடடடடடா....!!!!

    ReplyDelete
  3. உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
    அது என் உயிர் பிரியும் வரை...!//

    நட்புக்கு மரியாதை...!!!

    ReplyDelete
  4. இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில்
    குறுந்தகவல்களாக வந்தவைகள்...
    இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...//

    எழுதினவன் அனுபவிச்சு உணர்ந்து எழுதி இருக்கான்ய்யா அவனை[[ளை]] பாராட்டனும்...!!!

    ReplyDelete
  5. ////விரும்பிய ஒருத்தரை மட்டும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
    விரும்பிய அனைவரையும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!////

    என்ன அழகான வரிகள்....பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. வாசத்தை ஓவியமாக்க முடியாதே! - அருமை.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. கவிதை

    கவிதை

    மாதிரி

    குறுஞ்செய்தி

    நான்கு

    வரிகளில்

    அட

    எல்லாமே

    நல்லா

    இருக்கே...!

    ReplyDelete
  9. மெயில்ல வந்தா பதிவு போடுற காலம் மாறி இப்ப SMSல வந்தாலே பதிவா... கலக்குய்யா நீ..

    ReplyDelete
  10. sms எல்லாம் நல்ல இருக்கு சௌந்தர்

    sms எல்லாம் forward தான் பண்ணி இருக்கேன் ஆனா பதிவு தேத்தலாம்ன்னு இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  11. நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
    ஆனால் முடியவில்லை..!
    ஏன் தெரியுமா..?

    ரோஜாவை வரைந்து விடலாம்
    அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

    கலக்கல் கவிதைகள்

    கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )

    ReplyDelete
  12. வணக்கம் சகோ;
    எஸ் எம் எஸ் வடிவில் நறுக்குகளாய் மனதில் ஒட்டிக் கொள்ளும் கவிதைகளைத் தந்திருக்கிறீங்க.

    ரோஜாவின் மணத்தை ஓவியமாக வரையலாமா? சூப்பர் டச்சிங் வரிகள்.

    பீனிக்ஸ் பறவை என்பது ஓர் கற்பனை மிருகம். சாம்பலில் இருந்து எழுகின்ற நிஜமான பீனிக்ஸ் உயிரினம் உலகில் இல்லையாம்.

    சிறு கவிகளை ரசித்தேன் சகோ.

    ReplyDelete
  13. இப்போதெல்லாம் எஸ்‌எம்‌எஸ் கவிஞர்கள் பெருகி விட்டார்கள். நன்றாகவும் எழுதுகிறார்கள்.

    ReplyDelete
  14. // ரோஜாவை வரைந்து விடலாம்
    அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!//


    மனதைத் தொட்ட வரிகள்!
    எழுதியவர் வாழ்க!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. என்ன தலைவரே,.. ஒரே ரீபோஸ்டா போட்டு கிட்டு.. புதுசா போடுங்க தலைவரே...

    ReplyDelete
  16. வெல்லும் வரை தோல்வி..!
    சிரிக்கும் வரை கண்ணீர்...!
    உதிரும் வரை பூக்கள்...!
    மறையும் வரை நிலவு...!
    மரணம் வரை நம் நட்பு...!

    எனக்கு பிடித்தவரிகள்.

    ReplyDelete
  17. விரும்பிய அனைவரையும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!//


    அருமையான வரிகள் நண்பரே

    ReplyDelete
  18. நல்லாத்தானே இருக்கு!

    ReplyDelete
  19. ///விரும்பிய ஒருத்தரை மட்டும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
    விரும்பிய அனைவரையும்
    சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
    ///

    கலக்கல் வரிகள்..

    உண்மையும் கூட..

    ReplyDelete
  20. சில குறுஞ்செய்தி மிகவும் ரசிக்கும் படியிருக்கும் தொகுப்பு அருமை...

    ReplyDelete
  21. //இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?//

    இப்பிடி ஒரு பதிவை போட்டு பெயர் தெரியாத அந்த கவிஞரை பெருமைப்படுத்தலாம்.

    ReplyDelete
  22. //வெல்லும் வரை தோல்வி..!
    சிரிக்கும் வரை கண்ணீர்...!
    உதிரும் வரை பூக்கள்...!
    மறையும் வரை நிலவு...!
    மரணம் வரை நம் நட்பு...!//

    கவிதைகள் ரொம்ப நல்லாருக்குது.

    ReplyDelete
  23. sms படைப்புக்கள் நாட்டார் பாடல்கள் போல் அற்புதக் கலைவடிவங்கள் அவற்றின் படைப்பாளிகளைக் கண்டறிவது கடினம்....

    ReplyDelete
  24. அன்பின் சௌந்தர் - ஏன் இப்படி ஒரு தலைப்பு ? அனைத்துக் குறுங் கவிதைகளும் நன்றாகத் தானே இருக்கின்றன.

    விரும்பிய ஒருத்தரை - ஒருவரை என இருப்பின் நன்றாக இருக்குமோ ...

    ரோஜாவின் வாசம் - நல்ல கற்பனை

    அனைத்துமே நன்று

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  25. //ரோஜாவை வரைந்து விடலாம்
    அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!//

    உணர்ந்து எழுதிய வரிகள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...