கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 September, 2012

பொய் சொல்லும் இயந்திரமும்.. கட்டிய மனைவியும்...


மணி : சார்..! நான் பெரியவன் ஆனதும் விண்வெளி வீரனாக ஆவேன். அப்படியே விண்வெளிக்கு சென்று அங்கேயே தங்கிடுவேன்... இந்தப் பூமிக்கே திரும்ப மாட்டேன்.

ஆசிரியர் : ஏன் அப்படிச் சொல்கிறாய்..!


மணி : என்னுடைய அப்பா என்னைப் பார்த்து அடிக்கடி “இந்த உலகத்தில் வாழ்வதற்கே நீ லாயக்கி இல்லை” என்று திட்டறார் அதான் சார்...!************************************************

வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.

நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர்கள்..?


வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...


நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?


வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!************************************************


புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் பெண்கள் சங்கத்தில் சொற்பொழிவு செய்து விட்டு அமர்ந்தார்.. “நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்பதாக இருந்தால் கேட்கலாம்“ என்றார்..


பெண்மணி ஒருத்தி, “விஞ்ஞானி ‌ அவர்களே..! பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் இயந்திரத்தைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இயந்திரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?” என்று கேட்டார்..


“பார்த்திருக்கிறேனா..? நான் திருமணமே செய்து கொண்டு குடும்பமே நடத்திக்கொண்டிருக்கிறேன்...”

************************************************
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மக்களே..!

14 comments:

 1. http://en.vikatan.com/article.php?aid=24299&sid=689&mid=31

  வாழ்த்துக்கள் பாஸ்...விகடனில் இடம் பிடித்ததற்கு...

  ReplyDelete
 2. முதல் ஜோக்காக மட்டும் தெரியவில்லை. சிந்திக்க வேண்டிய விஷயமாகவும் தெரிகிறது.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. சூப்பர்.....விஞ்ஞானி செமையா சொல்லியிருக்காரு.

  ReplyDelete
 4. குட் ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. அன்பின் சௌந்தர் - நகைச்சுவை என்பது இது தான் - மிக மிக இரசித்தேன் - இங்கே இருக்க லாய்க்கில்ல எனறதனை நேர் மறைச் சிந்தனையால் விண்வெளிக்குச் செல்வேன் என முயல்வது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...