கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 July, 2013

இதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...!

 
 
தமிழக போக்குவரத்துக் கழகத்தில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்கள், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன, அவற்றில், 1.5 லட்சம் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அடிக்கடி உயரும், டீசல் விலையால், கழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனினும், தனியார் பஸ் நிறுவனங்கள், புதுப்புது பஸ்களை இயக்கி, தொழிலாளர்களுக்கு ஓரளவு ஊதியமும் கொடுத்து, தாமும் வளமாக வளர்ந்து வருகின்றன.
 
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள, மேல்மட்ட அதிகாரிகளான, மேலாண் இயக்குனர்கள், நிலைமைகளை அடிக்கடி ஆராய்ந்து, தக்க நடவடிக்கைகளை, காலா காலத்தில் எடுத்தால், பெரும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். முதற்கண், பழைய பஸ்களை ஆராய்ந்து, டீசல் குடித்து, அடிக்கடி பிரேக் டவுன் ஆகும் நிலையில் உள்ளவற்றை, முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 
 
ஆரம்பத்தில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை, அவ்வப்போதே சரி செய்ய வேண்டும். டீலக்ஸ் பஸ், சொகுசு பஸ் மற்றும் டவுன் பஸ்களைத் தவிர உள்ள, அனைத்து பஸ்களையும், சாதாரண அல்லது விரைவு வண்டிகள் என்று தரம் பிரிக்காமல், ஒரே சீரான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
 
 
 
உதாரணத்துக்கு சொல்லப் போனால், ஒருசில இடஙக்ளில் சாதாரணமாக 30 கி.மீ., தொலைவுக்கு, அரசு பஸ்களில், 21 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 15 ரூபாய் என, டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மக்களின் வெறுப்பைப் பெறுகிறது. இதை, ஒரே கட்டணமாக 15 ரூபாய் என்று, நிர்ணயம் செய்யலாமே! 
 
தனியார் பஸ்களில், இதே 30 கி.மீட்டருக்கு 17 ரூபாய் மட்டுமே, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பெட்ரோல் "பங்க்' களில், டீசல் முதலானவற்றை வாங்கவும், தடை விதிக்க வேண்டும். தமிழக அரசோ, மத்திய அரசோ எரிபொருள்களின் விலையை ஏற்றினாலும், இறக்கினாலும் அது, ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும், மக்களின் சுமையே என்பதை உணர வேண்டும். 
 
தனியாரையும், ஒரு சில முறைகேடுகள் செய்யும் ஊழியர்களையும், மனதில் கொண்டு, தனியாரிடம் டீசல் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
****************************\

"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''

"வெரி குட்.....அப்புறம்?''

"அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்''
*************************
 அப்புறம் இந்த சொம்பு எப்படியிருக்குன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா...! 

12 comments:

  1. அரசு 'கவனித்துக்' கொள்ள வேண்டிய ஆலோசனைகள்... ஊறுகாய்க்கு செம்பு...? ஹிஹி...

    ReplyDelete
  2. ஊறுகாய் நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய ஆலோசனை.... ஆனால் கவனிக்குமா?

    கொலுசு சிரிப்பு கலக்கல்... சொம்பு தனியா இருக்கு... ஆல மரத்தையும் காணோம் நாட்டாமையையும் காணோம்...

    ReplyDelete
  4. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் படும் கஷ்டத்தை கீழே உள்ள லிங்கை கிளிக்கி தெரிந்து கொள்ளலாம் !சொம்பைப் பார்த்தால் ...யோக்கியன் வர்றான் சொம்பை தூக்கி உள்ளே வை ...பழமொழி நினைவுக்கு வருகிறது !http://ttsftnstc.blogspot.in/2013/06/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ,Bagawanjee KA ,
      டீசல் விலை உயர்வு -
      மேலும் படிக்க http://ttsftnstc.blogspot.in/2013/01/blog-post.htm
      by-praban chan
      www.santhierode.blogspot.com

      Delete
  5. கொலுசு சிரிப்பு கலக்கல்..

    ReplyDelete
  6. அடடா கால்ல விழுறானென்னு பெருமையா நினைச்சேனே இப்பிடி கவுத்துட்டானேன்னு அந்த சொம்பால் மொத்தி இருப்பாளோ ?

    ReplyDelete
  7. சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கு போல.

    அரசு போக்குவரத்து கழக நிலை ரொம்ப மோசம்.

    ReplyDelete
  8. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் மக்களுக்கு சிரமம் குறையும்! நல்ல பதிவு நன்றி!

    ReplyDelete
  9. அரசு போக்கே தவிர வரத்து இல்லை!

    ReplyDelete
  10. நிதிநிலைமைஅவ்வளவுமோசமா

    ReplyDelete
  11. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்,இப்போது ஓய்வு பெற்றால் சால்வை போட்டு கைகுலுக்குவதோடு சரி. கூடுதலாக அரை கிலோ இனிப்பு, அரை கிலோ காரம் ஒரு கைகடிகாரம் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
    by ; Prabanchan
    http://santhierode.blogspot.in/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...