கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 July, 2013

அன்புள்ள காலனுக்கு...! ஒரு அவசரக் கடிதம்...!

அன்புள்ள காலனே...!
கணக்குகள் பிறகு இருக்கட்டும்
தற்போதைக்கு
என் காற்றைமட்டும் வாங்கிக்கொள்...!

வானம்பாடியாய் வாழ்ந்துகிடக்கிறேன்
ஆனால் பல்லவிகள் மட்டும்
இங்கே பயணப்படமறுக்கிறது...!

நதிப்போல் நாணிக்கிடக்கிறேன்
ஆனால் வளைந்துபோக
வழிகள் மட்டும் இல்லை...!

விறகு மரமாய்
இன்னும் எத்தனைக்காலம்
வீற்றுக்கிடப்பது..?

காளனே...! பசுமைக்காக
இனியும் காத்திருந்ததுபோதும்
வறுமைச்சூரியனால் எரிந்துப்போகும் முன்
உன்னோடு சேர்த்துக்கொள்...!

இடுகாடுகளிலாவது எனக்கு இடம்கொடு
அங்காவது நான்
இடர்பாடில்லாமல் இருந்துவிட்டுப்போகிறேன்...

வாழ்க்கைச்சக்கரம் எனக்கு மட்டும் ஏன்
வறுமை திசை நோக்கியே விரைகிறது...?

ஒவ்வொறு நொடியிலும்
விடியல் இருக்கிறதாமே - அதில்
ஒரு நொடிக்கூடவா எனக்கு சொந்தமில்லை

தோகைகளை எல்லாம் பரிகொடுத்துவிட்டு
பரிதவிக்கும் கானகத்து மயில் நான்...
இருந்த மேகங்கலெல்லாம் இறங்கி‌போனப்பின்
வருந்திக்கொண்டிருக்கும் வானம் நான்..

பூமியில் விழுந்துவிட்டேன்
முளைப்பதற்காக
ஆனால் ஈரப்பதத்தை எதிர்பார்த்து
சுருங்கிப்போகிறது என்சுயநினைவு...!


தற்போது
சோலைகள் பூக்காத என் நந்தவனம்
நறுமணத்தை எதிர்பார்த்து...
தூரல்கள் பார்க்காத என் வயற்காடுகள்
பசுமையை எதிர்பார்த்து..!


பற்பல எதிர்பார்ப்புகளோடு
என்னுடைய விழிகளின் ரசம்
வியர்த்ததுதான் மிச்சம்...!

இதோ உன் புவியீர்ப்பு
திசைநோக்கி புறப்பட்டாயிற்று என் ஜீவன்...
உன் பா‌சலையில் விழுவதற்காக
காத்துக்கொண்டிருக்கிறது என்காலம்...!

அன்புள்ள காலனே ..!
கணக்குள் பிறகு இருக்கட்டும்
தற்போதைக்கு
என் காற்றை(உயிரை) மட்டும் வாங்கிக்கொள்...!வறுமையின் உச்சத்தில் இருக்கும்
ஒரு சாமானியனின் மனநிலையில் இருந்து...!


(“என்பேர் பிரம்மன்“ என்ற என்னுடைய கவிதை நூலிலிருந்து..)

13 comments:

 1. /// என்னுடைய விழிகளின் ரசம் - வியர்த்ததுதான் மிச்சம் /// உட்பட வறுமையின் எண்ணங்கள் உண்மை...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. காளனே! என்பது சரியா?! அல்லது காலனே! என்பது சரியா?!

  ReplyDelete
 4. அழகான விளக்கமும், வரிகளும் அருமை...

  ReplyDelete
 5. அழகான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அருமையான கவிதை...

  ReplyDelete
 7. //////
  ராஜிJuly 9, 2013 at 10:19 AM

  காளனே! என்பது சரியா?! அல்லது காலனே! என்பது சரியா?!/
  ////////
  காலனே... இதுதாங்க சரி...
  என்னுடைய நூலிலும் இப்படித்தான் இருக்கிறது
  நான்தான் தட்டச்சு செய்யும்போது தவறு செய்திருக்கிறேன்

  ReplyDelete
 8. மனதில் தங்கிவிடும் நல்ல கவிதை.

  ‘காளன்’ என்பதைக் ‘காலன்’என்று திருத்திவிடுங்களேன்.

  ReplyDelete
 9. பூமியில் விழுந்துவிட்டேன்
  முளைப்பதற்காக
  ஆனால் ஈரப்பதத்தை எதிர்பார்த்து
  சுருங்கிப்போகிறது என்சுயநினைவு." அருமையான கவிதை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...