உன்னோடு சேர்ந்து நனைந்த
ஒரு மழைகாலத்திற்கு பிறகு
நான் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்....
ஒரு மழைகாலத்திற்கு பிறகு
நான் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்....
மழைக்கு பயந்து ஓடி ஒளிந்த
நாட்களை நினைத்து...!
********************************
ஒரு மழைக்காலத்தில்
யாரும் பார்க்காத தருணத்தில்
ஈரத்தோடு ஈரமாய் ஒரு முத்தம்
பதித்துவிட்டுச்சென்றாய்...
உண்மையில் அன்று
என்னை நனைத்தது மழையல்ல...
உன் உதட்டின் ஈரம்தான்...!
இந்த பிரபஞ்ச மழையை விட
அதிகம் அதிசயம் செய்கிறது
உன் முத்தம்...!
யாரும் பார்க்காத தருணத்தில்
ஈரத்தோடு ஈரமாய் ஒரு முத்தம்
பதித்துவிட்டுச்சென்றாய்...
உண்மையில் அன்று
என்னை நனைத்தது மழையல்ல...
உன் உதட்டின் ஈரம்தான்...!
இந்த பிரபஞ்ச மழையை விட
அதிகம் அதிசயம் செய்கிறது
உன் முத்தம்...!
********************************
எல்லா மழைக்காலமும்
ஒன்றுபோல் இல்லை...
உன்னோடு ஒரு முறை
சேர்ந்து நனைந்தப்பின்..
தற்போது
உன்னை நினைத்துக்கொண்டு
மழையில் நனைகிறேன்..
வெளியே மழையடிக்கிறது
உள்ளே அனலடிக்கிறது...!
ஒன்றுபோல் இல்லை...
உன்னோடு ஒரு முறை
சேர்ந்து நனைந்தப்பின்..
தற்போது
உன்னை நினைத்துக்கொண்டு
மழையில் நனைகிறேன்..
வெளியே மழையடிக்கிறது
உள்ளே அனலடிக்கிறது...!
********************************
நீ நனைகிறாய் என்று நானும்...
நான் நனைகிறேன் என்று நீயும்...
குடையைவிட்டு
ஒதுங்கியே நடக்கிறோம்...
யாரை காப்பது என்ற குழப்பத்தில்
நனைந்துக்கொண்டிருக்கிறது குடை....
நான் நனைகிறேன் என்று நீயும்...
குடையைவிட்டு
ஒதுங்கியே நடக்கிறோம்...
யாரை காப்பது என்ற குழப்பத்தில்
நனைந்துக்கொண்டிருக்கிறது குடை....
********************************
என் மழைக்கால கவிதைகள்..!
என்னை நனைத்தது மழையல்ல...
ReplyDeleteஉன் உதட்டின் ஈரம்தான்...!///
ஆஹா அருமை
//வெளியே மழையடிக்கிறது
ReplyDeleteஉள்ளே அனலடிக்கிறது...!// அருமை!
//யாரை காப்பது என்ற குழப்பத்தில்
நனைந்துக்கொண்டிருக்கிறது குடை.... // பாவம் குடைக்கும் குழப்பமா!!
சில்லிடும் வரிகளை ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வெளியே மழையடிக்கிறது
ReplyDeleteஉள்ளே அனலடிக்கிறது...!
>>
சரக்கடிச்சா இப்படிதான் இருக்குமாம் சகோ!
வெளியே மழையடிக்கிறது
ReplyDeleteஉள்ளே அனலடிக்கிறது...!//
அருமையான .கவிதை பாஸ்.
மழைக் கவிதைகள் அந்தி நேரத்துச் சாரலாய்...
ReplyDeleteகடைசிக் கவிதை அருமை....
நீ நனைகிறாய் என்று நானும்...
ReplyDeleteநான் நனைகிறேன் என்று நீயும்...
குடையைவிட்டு
ஒதுங்கியே நடக்கிறோம்...
யாரை காப்பது என்ற குழப்பத்தில்
நனைந்துக்கொண்டிருக்கிறது குடை....
எளிமையான வார்த்தைகளில் மிக அருமையான கவிதையிது... சூப்பர் சௌந்தர்...
உன்னோடு சேர்ந்து நனைந்த
ஒரு மழைகாலத்திற்கு பிறகு
நான் வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்....
மழைக்கு பயந்து ஓடி ஒளிந்த
நாட்களை நினைத்து...!
வித்தியாசமான கோணம்... மிக அருமை...
எனக்கு பிடிச்சது வெட்கமும், முத்தமும் தாங்க...
ReplyDeleteமழைக்கவிதைகள் அனைத்தும் சிறப்பு! கடைசி கவிதை மிகவும் ஈர்த்தது! நன்றி!
ReplyDeleteகுளிரும், வெம்மையும் காதலர்கண்ணே உள!
ReplyDeleteமழைக்காலத்து கவிதைகள் எப்பொழுதுமே மனதை ஈர்ப்பவையே...
ReplyDelete///எல்லா மழைக்காலமும்
ஒன்றுபோல் இல்லை... /// இந்த கவிதை மிகவும் சிறப்பு நிறைய அர்த்தங்களை கொண்டுள்ளது
ReplyDeleteவணக்கம்!
மழைக்கால முத்தம் மனத்துக்குள் என்றும்
குழைத்துாட்டும் இன்பம் குவித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் 8
அச்...அச்...
ReplyDeleteஅந்த கவிதையால்
எனக்குப் பிடித்ததே.. ஜலதோசம்.
ஆஆஆஆஆஆஆஆஆஆச்.
மழையுடன் காதலும் சொட்டுகிறது. அருமை.
ReplyDelete