கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 July, 2013

மனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...!





ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,

"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"

கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,

"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.

அதுக்குள்ள அந்த பக்கி சொல்லுது,

"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."
*******************************



கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன் ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...

*******************************



பஸ்சில் பயணம் செய்த முதியவர், பஸ் நடத்துனரிடம் தனது சில்லறை காசை கேட்டார்.

நடத்துனரிடம் சில்லறை இல்லாததால், "

இறங்கும் முன் கிடைத்தால் தருகிறேன்" என்றார் …!


முதியவர் கோபப்பட்டு தனக்கு அருகில் இருந்தவரிடம்,


"இந்த பாவங்களைஎல்லாம் எப்படி கழிக்கப்போறாங்களோ..? தெரியல்ல" என்றார் ..!


அருகில் இருந்தவர் ஒரு முதியோர் இல்லம் நடத்தும் ஒரு இயக்குனர். அவர் இந்த பஸ்சில் தினம் தோறும் பயணம் செய்பவர்.

அவர் சொன்னார்,


"ஐயா பெரியவரே அவருக்கு மோட்சம் தான் கிடைக்கும் ... காரணம் மாதம் தோறும் இப்படி கொடுக்க முடியாத சில்லறை காசுகளை சேர்த்து எமது அநாதை இல்லத்துக்கு கொண்டு வந்து தருவார்"


# பஸ்சைவிட்டு இறங்கும் போது நடத்துனரின் கையை முத்தமிட்டு சென்றார் அந்த‌ முதியவர்.
நாமும் ஒரு சபாஷ் போடனும்

####படித்ததில் பிடித்தது####




அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும்
இதை கடைபிடிப்பது குழந்தைகள் மட்டுமே...!

12 comments:

  1. முதல் ஜோக்கும் & கதையும் மிகவும் ரசிக்க கூடியவை

    ReplyDelete
  2. அருமை
    கதையும் நகைச்சுவைத் துணுக்குகளும்
    மிக மிக அருமை,குறிப்பாக இறுதிப் படம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை...
    கதையும் நகைச்சுவையும் அருமை...
    குழந்தையாக இருக்கும் போது எல்லா பொருள் மீதும் அன்பு செலுத்துகிறோம்.ஆனால் வளர்ந்ததும்...?

    ReplyDelete
  4. ரசிக்க வைத்தன . நன்றி !
    .

    ReplyDelete
  5. \\\\கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்... \\\ செம அடி போலிருக்கு....

    ReplyDelete
  6. எல்லாமே நன்றாக இருந்தது....

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. கடைசி படம் சிறப்பு.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...