மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.
அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.
துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.
"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".
கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.
"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன்.
அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".
முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.
"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".
இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".
கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.
என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...
கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.
கடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.
"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார்.
உன்மைதான் மதங்கள் நம் மூளையை, மனதை, சலவைசெய்து ஒற்றுமையை குலைத்துவிடுகிறது. அந்த ஒற்றுமை குலையும் சமுதாயத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்வது என்பது இயலாதகாரியம்.
சமயங்களும், சமயம்சார்ந்த பற்றுகளும் மனிதனை பக்குவப்படுத்தாதவரை அந்த சமயம் உண்மையானதாக இருந்துவிடாது.
மனிதனுக்கு வாழ்க்கையில் எந்த நேரத்திலும் தேவை தன்னம்பிக்கைதான் மதங்களில்லை...
என்னைக்கேட்டிருந்தால்,
ReplyDeleteநான் ஐம்பது வருடங்கள் முன்னே
என் அன்றைய காதலி, இன்றைய கிழவிக்கு
எழுதிய காதல் கடிதங்களை,
அவள் எழுதிய கடிதங்களை,
என்னுடன் எடுத்துச் சென்று இருப்பேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogpot.com
buffalo, niagara falls, USA 9 a.m. 20 jul 13
எதையும் துறக்கலாம். தன்னை நேசித்தவர்களின் அன்பு இதயங்களைத் துறக்க இயலுமோ ?
/////
ReplyDeleteஎதையும் துறக்கலாம். தன்னை நேசித்தவர்களின் அன்பு இதயங்களைத் துறக்க இயலுமோ ?
///
உண்மையான வார்த்தை ஐயா..!
அன்பிற்கு இணை உலகில் ஏதும் இல்லை.!
அட்ரா சக்க... அட்ரா சக்க... (ஐயா கருத்து சூப்பர்...!)
ReplyDeleteநல்லது தலைவரே....
Deleteஉண்மைதான்... மதங்கள் மனிதர்களை பண்படுத்துவது இல்லை என்பதே தற்போதைய உணமை.
ReplyDeleteஉண்மைக்கு மாறாகத்தான் நடக்கிறது உலகம்....
Deleteநம்ம பகுத்தறிவாளர்கள் என்னென்ன அப்படி கண்டுபுடிச்சாங்களோ தெரியலையே??
ReplyDeleteஎதையும் கண்டுபிக்காமத்தாங்க இன்னும் இருந்துக்கிட்டு இருக்கோம்...
Deleteபக்தி இருக்ககூடாதுன்னு சொல்லவில்லை...
அது வெறியாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...
மதங்கள் நம் மூளையை, மனதை, சலவைசெய்து ஒற்றுமையை குலைத்துவிடுகிறது.//உண்மைதான்
ReplyDeleteஅதிலிருந்து மனிதன் விடுபடவேண்டும்
Deleteமதமும் சாதியும் உள்ளவரை மனிதம் வேற்றி பெற இயலாது!
ReplyDeleteஉண்மைதான் ஐயா...!
Deleteபகுத்தறிவை பயன்படுத்தினால் மதம், சாதி எல்லாம் வீண்மாயை என்பதை உணரலாம். இன்றை மதங்கள் எதாவது நன்மையுண்டா? தினம் தினம் மரணங்கள், பிரச்சனைகள், கற்பழிப்புகள், அடக்குமுறைகள், இது தான் மதங்கள் செய்த சாதனைகள்.
ReplyDeleteஇன்றைய நேரத்திற்கு சரியான பதிவு... பகுதரிவுன் முக்கியதுவத்தை உணர்த்தி செல்லும் விதமாய்
ReplyDelete