மனித வாழ்வின் பெரிய துயரம் ஏதுவென்றால் அது இயற்கையை விட்டுப் பிரிந்து, செயற்கையில் மூழ்கி இருப்பதே ஆகும். இயற்கை போட்டுத் தந்த பாதையை விட்டு விலகி செல்ல செல்ல நோய்கள் நம்மை நெருங்கி கொண்டே வரும் அவ்வாறு நேருங்கி வரும் நோய்களை உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம்.
முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும். நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது.
உடலில் தோன்றும் நோயை உடலைக் கொண்டே தீர்க்கத்தான் உடற்பயிற்சிகள் இந்த பயிற்சிகள் உடலைச் சிற்சில முறைகளில் வளைத்தும், நெளித்தும், முறுக்கியும்,நெகிழ்த்தியும் செய்வதால் உடலில் உள்ள நாளமில்ல சுரப்பிகள் நன்கு சுரக்க ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு தூங்கி எழுந்தவுடன் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சோம்பலை போக்க நெளிப்பு விடுவோம் அப்படி நெளிப்பு விட்டபிறகு ப்ரஸ்சாகி விடுவோம் இப்படி நெளிப்பு விடுவது கூட ஒருவகையான உடற்பயிற்சிதான்.
இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாக வழங்கியிருக்கிறான். அதிகமான உடலுழைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு கஷ்டமான வேலை செய்தாலும் முழு உடலும் வேலை செய்யாது சிலர் கைகளுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள்,
சிலர் கால்களுக்கு மட்டும் அதிகமான வேலை கொடுப்பார்கள் இப்படி ஒரே உறுப்புக்கு அதிகமான வேலைப் பளு கொடுப்பதால் ஏற்படுகின்ற தீமைகளில் இருந்து உடற்பயிற்சி நம்மை பாதுகாக்கும்.
நெளிப்புடன் உடற்பயிற்சியும் செய்வோம்...!
ReplyDeleteசிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோ .முடிந்தால் இதையும் கொஞ்சம் பாருங்கள் .
ReplyDeletehttp://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_13.html
seivome....
ReplyDeleteஉடற்பயிற்சியுடன்மனப்ப பயிற்சியும் செய்தால் இன்னும் நல்லது
ReplyDelete