பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்திய வழக்குகளில் ஆஜராகும்படி, பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கு, 34 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில் நடந்த, சித்திரை பெருவிழா நிகழ்ச்சியில், பா.ம.க.,வினருக்கும், மரக்காணம் காலனி மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில், பா.ம.க., தரப்பினர் இருவர் இறந்தனர். இதற்கு, நீதி விசாரணை கேட்டு, விழுப்புரத்தில் தடையை மீறி, ஏப்., 30ல் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியினர் கைதாகினர். இதனால் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
சேலம், திருவண்ணாமலை மாவட்ட ங்களில், பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக, பா.ம.க.,வினர் மீது வழக்கு பதிந்தனர். இதற்காக, 34 சம்மன்களை, நேற்று மதியம், 1:30 மணிக்கு, தைலாபுரம் தோட்டத்தில், டாக்டர் ராமதாசிடம் கொடுக்க, வானூர் தாசில்தார் சென்றார். ராமதாஸ் இல்லாததால், அலுவலக உதவியாளரிடம் கொடுத்தார்.
சம்மனில், சேலம் வழக்கு தொடர்பாக, வரும் 23ம் தேதி, மாலை, 4:00 மணிக்கும்; திருவண்ணாமலை வழக்கு, 24ம் தேதி, மாலை, 3:30 மணிக்கும்; சென்னை எழிலகத்தில் உள்ள முதன்மை செயலர், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், சாலை போடுவதாகக் கூறி முற்றுப் பெறாமல் இருந்த சாலைப் பணிகளை முடித்ததாகக் கணக்கு காட்டி, கணினி கிராபிக்ஸ் மூலம் சாலையை பள பள என பணிகள் முடிந்தது போல் அவற்றின் புகைப்படங்களைக் காட்டி, திட்டப் பணத்தைப் அதிகாரிகள் பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், சாலை போடுவதாகக் கூறி முற்றுப் பெறாமல் இருந்த சாலைப் பணிகளை முடித்ததாகக் கணக்கு காட்டி, கணினி கிராபிக்ஸ் மூலம் சாலையை பள பள என பணிகள் முடிந்தது போல் அவற்றின் புகைப்படங்களைக் காட்டி, திட்டப் பணத்தைப் பெற்றனர். இது தொடர்பாக தெரியவந்ததும், கடலாடி வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கராஜ், உதவிப் பொறியாளர் அருள் பிரசாத், சாலை ஆய்வாளர் அந்தோனிராஜ், ஓவர்சியர் சாதிக் பாட்சா ஆகிய நால்வரும் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடலாடி தாலுகா கடையன் குளம் கிராமத்தில் இருந்து கிடாக்குளம் வரை ரூ.19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான முடிக்காத சாலையை முடித்ததாக முறைகேடு செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை புகைப்படம் எடுத்து இணைத்து, ரூ. 19,30,000 பணம் பெற்றதால், ஆட்சியர் நந்தகுமார் 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
***********************

"எல்லாம்" முடிந்த பிறகு உத்தரவு...! கணினி கிராபிக்ஸ் சாலை நல்லா இருக்கு...!
ReplyDeleteரைட்டு ..
ReplyDeleteஇப்படிதான் டெக்கானலஜியை யூஸ் பண்ணிக்கனும் :-(
ReplyDeleteபோடாத சாலைக்குப் பணமா ! அடக் கடவுளே!
ReplyDeleteகணினி கிராபிக்ஸா... அடேய்...பாவிகளா...
ReplyDeleteகிராபிக்ஸா , போடாத சாலைக்குப் பணமா? ரொம்பத்தான் யோசிக்கிறாங்க
ReplyDeleteஇப்படியுமாமாட்றுவதுி?
ReplyDelete