கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 March, 2018

முதல்ல சிஸ்டத்தை சரிபண்ணுங்கடா




மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, 
அதனால போடுறதில்லை...!


மாட்ட, ஆடா மாத்த முடியுமா .?

முடியும் .

ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு

முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... 

AADU அப்படின்னு மாறிடும்.!


Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க


நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,

அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?


வக்கீல்: உங்களுக்குக் கல்யாணம் ஆயிரிச்சா?

குற்றவாளி: ஆமாங்கோ... ஒரு பொம்பள கூட...

வக்கீல்: என்ன ஜோக்கா யாருக்காச்சும் ஆம்பள கூடக் கல்யாணம் நடக்கும்மா?

குற்றவாளி: எங்க அக்காவுக்கு நடந்திச்சே...

வக்கீல் : டாஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய்ய்................


இரண்டு ரெக்கையை வச்சிக்கிட்டு ஒரு காக்கா ஊரெல்லாம் சுத்தி ரவுண்டு போடுது

ஆனா மூன்று ரெக்கை வச்சிருந்தாலும் ரூமை விட்டு பறக்க முடியாம சுத்துற கொடுமை இருக்கே அது அந்த சீலீங் பேன்க்கு மட்டும்தான் புரியும்



நாலுபேரு நாலுவிதமா பேசுனா என்ன அர்த்தம்?''

""பதினாறு விதமா பேசுறாங்கன்னு அர்த்தம்!''






படம் போட்டதும் ஏன் எல்லோரும் தும்புராங்க...

அதான்  சொன்னாங்களே
இது ஒரு மசாலா படம்ன்னு




அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே 
முதல் மாணவனா வந்தாலும், 

ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் 
முட்டை வாங்கித்தான் ஆகணும்....




வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... 
ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... 

ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

***************

சிஸ்டம்மெல்லாம் ரொம்ப மோசமாயிருக்குங்க அதான் சரிபண்ண சொன்னேன்....

1 comment:

  1. சிஸ்டம் என்றவுடன்
    ஏதேதோ நினைவுகள்
    நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...