கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 March, 2018

நாமும் ஒரு காரணம் தான்.....







நிகழ்காலத்தோடு 
ஒட்டமறுத்து
எதிர்காலத்திற்குள் புகுந்து
சிறகிழந்து சிதைகிறது
மனசு...!


பயணிக்கும் வழிகளிலே 
வடிய வைத்துவிட்டோம்
உயிரணுவில் ஒட்டியிருந்த
வாழ்வை ரசிக்கும் 
தன்மையை...!


கோடி ஆண்டுகள் 
வாழப்போவதில்லை
தெரிந்தும் தெளிய மறுக்கிறோம்
இது நிச்சயமில்லாத 
வாழ்க்கை...!

 
 இனத்தை இனமழிக்கும் 
ஈன வரலாறு....
எந்த விலங்கிலும் இல்லை
இதில் விதிவிலக்காய்
மனிதன்...!


ஓடிமுடித்து 
திரும்பிப் பார்த்தால்
நம்மைப்பார்த்து சிரித்துவைக்கிறது
வீணாய் விட்டுவந்த 
தடங்கள்...!

 
சாய்ந்து ஓடும் 
இந்த புவியின் அச்சில்
எதையும் பொறுமையாய் கையாள
கைக்கொடுப்பதில்லை 
காலமும் நேரமும்...!

 
நாகரீகமும் பேராசையும் 
கைகோர்த்து கொண்டு
இன்னும் வேகமாய் 
இயக்குகிறது
இந்த உலகை...!


நினைவில் 
கொள்ளுங்கள்...


இழந்துவிட்டோமென 
கண்ணீர்வடிக்கும்
ஒவ்வொறு தருணங்களும்
நாம்  
உதாசினப்படுத்தியவையே...!

6 comments:

  1. திரும்ப கிடைக்காதா என ஏங்கும்போது கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. போனால் போனதுதான் காலமும் நேரமும்

      Delete
  2. இழந்துவிட்டோமென
    கண்ணீர்வடிக்கும்
    ஒவ்வொறு தருணங்களும்
    நாம் உதாசினப்படுத்தியவையே...!

    உண்மை
    உண்மை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...