எல்லாக்காலத்திலும் சினிமா என்பது அனைத்துவித மக்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு மாயவலையாக திகழ்ந்து வருகிறது... என்னதான் நம்மமுடியாத காட்சிகளாக இருந்தாலும்... முழம் பூவை காதில் சுற்றினாலும் அதை ரசித்துவிட்டு வரும் ரசிகர்களை கொண்டுள்ளதால்தான் இன்று வரை யாராலும் அசைக்க முடியாத சக்தியாக திராவிட சினிமாக்கள் அமைந்துவிட்டது...
சினிமாவை விரும்பி... ரசித்து... பார்க்கும் ஒருவரால் ஒரு படத்தையோ அல்லது ஒரு காட்சியை பார்த்தவுடன் அது எந்தமொழிக்கு உரியது என்று எளிதில் சொல்லிவிடலாம்.... திரைப்படங்களில் வரும் சில காட்சிகளை என்னதான் கழுவி கழுவி ஊற்றினாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை எல்லாபடத்திலும் வஞ்சனையில்லாமல் வைப்பதில் திராவிட படங்களுக்கு நிகர் திராவிட படங்கள் தான்...
உதாரணத்துக்கு ஒரு சீன்... ஜீப்பில் தப்பித்து ஓடும் வில்லனை.... வண்டியின் எதிரில் நின்று... ஹீரோ கண்ணாடியை உடைத்து கொண்டு வில்லனை மட்டும் வெளியே கொண்டு வந்தால் அது தமிழ் படம்... அதே ஹீரோ... உதைத்து ஜீப்பையே பறக்க வைத்தால் அது தெலுங்கு படம்... அந்த வில்லனை ஹீரோ அடிப்பாரு... அடிப்பாருன்னு... காத்திருந்து அவர் அமைதியா போக விட்டுட்டாருன்னா அது மலையாளப்படம்.... அந்த ஜீப்பை ஒரு துப்பாக்கி குண்டால சுட்டு வெடிக்க வச்சார்ன்னா அது ஹிந்தி படம் அவ்வளவு தான் வித்தியாசம்....
இப்ப நான் சொல்லப்போறது தமிழ் சினிமாவில இருக்கிற ஒரு சீன் பத்திதான்....
சினிமா ஆரம்பிச்சி இப்பவரைக்கும் ஒரு சீன் மாறாம இருக்கிறது.... இந்த சீனை எப்படித்தான் யோசிக்கிறாங்களோ தெரியல...
கிளைமாக்ஸ்ல கண்டிப்பா ஒரு சேசிங் காட்சி இருக்கும்... வில்லன்கள் தப்பிச்சி போவாங்க... இல்லன்னா ஹீரோயினை வில்லன் கடத்திகிட்டு போயிடுவாங்க அவங்களை விரட்டிப்பிடிச்சி அவங்கள பந்தாடி... படத்தை பந்தாவ முடிச்சி வைப்பாரு நம்ம ஹீரோ..
இதுமாதிரி தான் அனைத்து தமிழ் சினிமாவும் இருக்கிறதே நீ எந்த காட்சி பத்தி சொல்ல வற்ர அப்படித்தானே கேக்குறீங்க...
வில்லன் தப்பிச்சி போறதுக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டி, ஸ்கூட்டர், கார், ஜீப், வேன், ஏன் ஹெலிகாப்டர் வரைக்கு கொடுப்பாங்க ஆன நம்ம ஹீரோக்கு அப்படி ஒன்னும் சொந்தமா இருக்காது.... அவங்க எதுல தப்பிச்சோ அல்லது கடத்திகிட்டு போறப்ப இவர் பல நாடுகள் கடந்து ஆலமர விழுதுகளை பிடித்தோ... வேகமா ஓடியே போய்கிட்டு இருப்பாரு....
அப்பத்தான் டைரக்டருக்கு யோசனை வரும்... எவ்வளவு நேரம் கார் பின்னாடியே ஓடிபோய்கிட்டு இருப்பாருன்னு... ஹீரோவுக்கும் ஏதாவது செய்யனுன்னு முடிவுப்பண்ணி ஒரு சீன் வைப்பாரு பாருங்க.... ஹீரோவுக்கு என்ன வண்டி வேணுமோ அந்த வண்டியை ஒருத்தர் புல்லா பெட்ரோல் போட்டு, ஆன் பண்ணி விட்டுட்டு... மரத்துப்பின்னாடி நின்னு “சுச்சுஊ“ போயிட்டு இருப்பாரு... நம்ம ஹீரோ அந்த வண்டியை எடுத்துகிட்டு போய் வில்லனை பிடிப்பாரு...
நான் தெரியாமத்தான் கேக்குறேன் அது எப்படி... ஹீரோவுக்கு வண்டித்தேவைப்படுகிற அதே நேரத்தில யாருக்காவது சுச்சுஊ வந்தடுதுன்னு தெரியல... சரி அப்படி இருந்தாலும் வண்டியை ஸ்டார்பண்ணி விட்டுட்டா சுச்சுஊ போவாங்க.... கார், ஸ்கூட்டர், குதிரை இப்படி யாரையாவது ஏமாத்திட்டு எடுத்துகிட்டு போறாங்களே இது நியாயமா..?
இதுவே வண்டி திருடுற கேஸாச்சா... இது எப்படி நியாயம் ஆகும்... அப்போ வண்டியை பறிகொடுத்த அந்த அப்பாவிங்க மனநிலையை ஏன் இந்த டைரக்டர்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கராங்கன்னு தெரியல..... நமக்கு அவசரத்துக்கு ஒரு வண்டி தேவைப்படுகிற போது இப்படி ஒரு சீன் நம்ம வாழ்க்கையில... எது எப்படியோ இன்னைக்கு வரை அந்த காட்சிகளை நாமும் பார்த்துகிட்டுதான் இருக்கோம்...
உண்மை
ReplyDeleteஇது மட்டுமா...?!
ReplyDeleteஇந்த கருமத்துக்குதான் நான் சினிமாவே பார்க்குறதில்லை
ReplyDeleteநாமெல்லாம் ரொம்ப புத்திசாலிங்கன்னு அவங்களுக்குத் தெரியும் சௌந்தர்.
ReplyDeleteமுன்ன காலத்துலயே, எங்க பசங்க, சொல்லுவாங்க, இந்தப்பூவெல்லாம் ஆடுகிறதா. அந்த
பொண்ணு வாமிட் பண்ணும்னு ஹாஹாஹா.