கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"
மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!
கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
கணவன் : “உனக்குத்தான்
2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”
மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”
மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
அடி பலம்தான் போல!
ReplyDeleteரொமுப பெரிசுன்னும் சொல்லமுடியாது...
Deleteஅதே சமயம் சின்னதுன்னும் சொல்ல முடியாது....
தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in
ReplyDeleteகண்டிப்பாக....
Deleteஎல்லா சிரிப்'பூ'க்களையும் படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஎன்னதான் இப்படிப்பட்ட கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் வாரிவிடும் ஜோக்குகள் வந்தாலும், இருவருகுள்ளும் இருக்கும் பரஸ்பர அன்பு என்றும் மாறது என்றே நினைக்கிறேன்.