கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 November, 2010

நிலா பெணணே !

சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

Earth image taken by Chandrayan
அந்தக் கவிதை:

வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு 


இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.


புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!


பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!


அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி அடித்து;

அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய
கூட்டமைப்பு நாடுகளின்
அணிவகுப்பில் இணைந்து அருஞ்சாதனை
புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக்கொடியை அம்புலியில்
நாட்டியது;


அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!


- கலைஞர் மு கருணாநிதி

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...