கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 July, 2011

சென்டிமெண்ட்.... ரஜினியின் ராணா படத் தலைப்பில் மாற்றம்?


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத் தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ரஜினி அல்லது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர்தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினிதான்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்டிமெண்டாக ராணா தலைப்பு வேண்டாம் என ஒரு சாரார் கருத்து தெரிவி்த்துள்ளார்களாம். ஆனால் ரஜினியோ ராணா தலைப்புதான் மிக ஈர்ப்பாக இருக்கிறது என அபிப்பிராயப்படுகிறாராம்.

அடுத்தவர் கருத்துக்கு எப்போதுமே அவர் மதிப்பளிப்பவர் என்பதால், தலைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாரோ இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.

படையப்பா பெயர்தான் பெரும் அளவு கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது இந்தப் படம்.

எனவே ரஜினி தலைப்பை மாற்றுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

படத்தின் தலைப்பில் என்ன இருக்கிறது. நம்ம தல ரஜினி தோன்றினாலே அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். படத்தலைப்பு குறித்து ஒன்றுமில்லை தல நடித்தாலே போதும்...

படத்தின் தலைப்பு மாற்றப்படுமா பொருத்திருந்து பார்ப்போம்...

17 comments:

  1. //படத்தின் தலைப்பில் என்ன இருக்கிறது. நம்ம தல ரஜினி தோன்றினாலே அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். படத்தலைப்பு குறித்து ஒன்றுமில்லை தல நடித்தாலே போதும்...

    இதைத்தான் நான் சொல்லலாம் என்று நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. அப்ப ரானா கானாவா??

    ReplyDelete
  3. மனுஷன் நல்லா இருந்தா போதும்யா...எதுக்கு உடம்ப அலட்டிக்கறது....குறைஞ்சது ஒரு வருசமாவது ரெஸ்ட் எடுக்கட்டும் மாப்ள!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி சகோ போடவேண்டிய ஓட்டுப்
    போட்டாச்சு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. முத்தான மூன்று
    ( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

    என ஒரு பதிவு தந்திருக்கிறேன்..

    ஓய்விருக்கும் போது வாருங்களேன்.

    நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  6. உங்கள் வாதம் சரி தான்....ஆனால் அவர் ஜோசியத்தை அதிகம் நம்ரபும் மனிதராச்சே....

    ReplyDelete
  7. என்னை கேட்டா ரஜினி ஒய்வு எடுப்பது தான் சரி

    ReplyDelete
  8. எப்படியோ தலைவர் படம் வந்தா சரி..

    ReplyDelete
  9. என்னா நியூஸ்-ப்பா எங்கே புடிக்கிறீங்க எல்லாம்?

    ReplyDelete
  10. //படத்தின் தலைப்பில் என்ன இருக்கிறது. நம்ம தல ரஜினி தோன்றினாலே அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். படத்தலைப்பு குறித்து ஒன்றுமில்லை தல நடித்தாலே போதும்...//

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  11. உஷ் இப்பவே கண்ண கட்டுதப்பா

    ReplyDelete
  12. அப்படியா சங்கதி

    ReplyDelete
  13. எனக்கும் ராணா என்ற தலைப்பு பிடித்திருக்கிறது.......

    ReplyDelete
  14. பொறுத்திருந்து பார்ப்போம் சௌந்தர் - தகவலுக்கு நன்றி - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. இந்த விஷயத்தை உங்களின் பதிவு மூலமே அறிந்தேன். அவர் கூறுவது போல் எல்லாம் இறைவனின் கைகளில்.

    ReplyDelete
  16. ரஜினி என்ன செயரார்னு பாக்கலாம்

    ReplyDelete
  17. அவரு செய்யவேண்டிய நேரத்துல் கரெக்டா செய்வாரு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...