1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?
- இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
- எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
- மற்றும் அம்மா.. அம்மா... அம்மா...
2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்
- தன்மானத்தை தாரை வார்த்து இந்த பூமியில் வாழ்வது...
- சாலை விதிகளை மதிக்காதவர்களை சும்மா விடுவது.. (இது பிறர் உயிரோடு விளையாடும் விஷயம்...)
- முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...
3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்
- எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
- உயிர்களை மிரட்டும் இயற்கை சீற்றங்கள்...
- அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்....
4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
- கமலின் அன்பே சிவம்...
- ரஜினியின் பாட்ஷா...
- அஜீத்தின் முகவரி...
5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
- ஒவ்வொறு பூக்களுமே.... (ஆட்டோகிராப்)
- காதல் காயங்களே.... (இரட்டைக்குழல் துப்பாக்கி...)
- கடவுள் தந்த அழகிய வீடு.... (மாயாவி)
6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
- தயிர்ஊற்றிய பழைய கஞ்சி...
- சாம்பார் சாதம்...
- ஞாயிறு மட்டும் மட்டன் பிரியாணி...
7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?
- கிள்ளி, கீறி, வெட்டி, அடித்து, ஒடித்து, நொறுக்கி, செதுக்கி என்னை சிற்பமாக்கும் இந்த சமூகம்...
- முடிந்த வரை நான் கடைபிடிக்கும் உண்மை...
- என் நியாயமான கோவங்கள்...
8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?
- யாருடனாவது சண்டையிட்டபின் அதை மறந்து விட...
- சுந்தரத் தெலுங்கு...
- விதியை வெல்லும் வழி...
9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?
- தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
- அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
- குழந்தையின் அழுகுரல்....
10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று காரியங்கள்...?
- நான் ஆற்றிவரும் கல்விப் பணி...
- பிளாக் எழுதுவது.... உலகத்தமிழர்களிடம் கிடைத்த அறிமுகம் (பதிவுலகம் மூலமாக)
- என் கவிதைகள்....
11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?
- கடவுள் யார் என்பது...
- ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
- காதல்... காதல்... காதல்...
12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?
- நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
- தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
- இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும்...
13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
- 10-ஆம் வகுப்பில் எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்த சகமாணவன் காட்டையன் (இவர் ஒரு இருளர் இன மாணவர்.. தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை...)
- எனக்கு தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்கும் திரு. பூரிவாக்கம் ரமேஷ்
- பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய வேடந்தாங்கல் கருண்...
14) என் தளத்தில் எனக்கு பிடித்த மூன்று பதிவுகள்...?
15) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
யாரை கூப்பிடலாம்...
(யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறட்டும்)
இந்த தகவல்கள் ஏதோ என்னையும் என் நடைத்தையும் பிரபலப்படுத்தவோ அல்லது என்னுடைய வாழ்க்கையை நியாப்படுத்தவோ அல்ல... மனதின் இடுக்குகளில் புழுங்கியவைகள் தற்போது பதிவாய் மிளிர்கிறது.
நன்றி என்னை அழைத்த நுனிபுல் ரியாஸ் அஹமது
நன்றி என்னை அழைத்த நுனிபுல் ரியாஸ் அஹமது
யாரவாது இந்த பதிவை இன்டிலியில் இணைத்து விடுங்கள்...
ReplyDeleteஎல்லா மூணும் மூன் மாதிரி அதுவும் பௌர்ணமி அன்னைக்கு வர்ற மாதிரி
ReplyDeleteஉங்களை பத்தி சுருக்க சொன்னது நல்லா இருக்கு...
இன்ட்லியில் இணைத்து விட்டேன்
/////
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
எல்லா மூணும் மூன் மாதிரி அதுவும் பௌர்ணமி அன்னைக்கு வர்ற மாதிரி
உங்களை பத்தி சுருக்க சொன்னது நல்லா இருக்கு...
இன்ட்லியில் இணைத்து விட்டேன்
////////
வாங்க ரமேஷ்....
நன்றி...
மனதில் உள்ளதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமூன்றில் அடங்கும்
ReplyDeleteவாக்கிய ஜாலங்களும்
உங்களின் எண்ணங்களும்
இனிமை.
சௌந்தர் உங்களுக்கும் எனக்கும் நெறைய விஷயம் ஒத்து போகுது குறிப்பாக சாப்பாட்டு விஷயம் ஹி ஹி
ReplyDeleteமூன்றில் அடங்கிய வாழ்க்கை-அருமையான பகிர்வு!
ReplyDelete//சுந்தரத் தெலுங்கு...
ReplyDeleteஏதாவது காரணம் இருக்கா?
எல்லாமே கவித்துவமா இருக்கு...
முத்தான மூன்று விடயப் பகிர்வுகளை தித்திப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க. கலக்கல்.
ReplyDeleteமாப்ள Super...ரைட்டு!
ReplyDeleteமூணு பேரை கோத்து வேற விட்டுருக்கீங்க. முப்போகம் விளையட்டும்!!
ReplyDeleteநீங்க கரெக்ட் பண்ணூன 3 ஃபிகர் பற்றிய பதிவோன்னு நினைச்சேன்
ReplyDeleteஇது போன்ற பதிவுகளும் வித்தியாசமாகவும்
ReplyDeleteசுவையாகவும்
இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
அன்பின் சௌந்தர்
ReplyDeleteஅருமையான செய்திகள் - 15 ம் நன்றாக இருக்கிறது - தயிர் ஊற்றிய பழைய கஞ்சி - வெங்காயம் வேண்டாமா ? ஒரே ஒரு கிற்று நார்த்தங்காய் / எலுமிச்சை ஊறுகாய் வேண்டாமா ?
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மூன்று..மூன்றுக்கு என்னையும் கூப்பிட்டுட்டாரே.... விரைவில் மூணு மொக்க போடறேன்...
ReplyDeleteதமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...//
ReplyDeleteஅழகான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
உண்மையை வெளிபடுத்தும் மனோபலம்
ReplyDeleteஉண்மையாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ,
அனைவரையும் அரவணைக்கும் குணம் .
உங்களைப்பற்றி நான் கூறிய மூன்று .
நன்றி பகிர்வுக்கு .
அனைத்து விஷயங்களிலும் மிகத் தெளிவாக
ReplyDeleteகுழப்பமின்றி இருப்பதை உங்கள் பதில்கள்
தெளிவாக அறிவுறுத்திப்போகிறது
வாழ்த்துக்கள்
அனைத்து பதில்களும்
ReplyDeleteஉங்களைப் போலவே
நேர்மையாய் கம்பீரமாய்
அற்புதம் நண்பரே
பெருமையாய் நினைக்கும் விஷயம் சூப்பர் பாஸ்@!
ReplyDeleteவித்தியாசமான பதிவு அருமை
ReplyDeleteநல்ல பதிவு..! வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பா ,,
ReplyDeleteஎனக்கும் அழைப்பா..
இந்த பதிவை படிச்சிட்டு நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னன்னா, 'நீங்க சிக்கரம் அரசியவாதி ஆகி விடுவிங்க'. அதுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeletetq bro ,,,,very nice ...
ReplyDeletesorry am late ...not well ..
i will back soon ...
gd post
tq tq
c u soon
ReplyDeleteமூன்றில் அடங்கிய வாழ்க்கை அருமை பகிர்வு வாழ்த்துக்கள்
ReplyDelete