கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 October, 2013

இப்படியும் வாழ்பவர்களை என்ன செய்யலாம்..! பதில் கூற முடியுமா உங்களால்...!


வணிகன் ஒருவன் பெரும் பணம் சேர்த்தான். ஒருநாள் எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது கிட்டதட்ட எட்டு லட்சம் பொன் தன்னிடம் இருந்தது அவனுக்குத் தெரிந்தது.

இதை எதில் முதலீடு செய்தால் ஓரிரண்டு வருடங்களில் அதை இரண்டு மடங்காக்க முடியும் என்று திட்டமிட்டு எழுதுவதற்காக ஓலையையும், தூரிகையையும் எடுத்தான். சுரீரென்று அவனுக்கு நடுமார்பு வலித்தது. அப்படியே பின்னுக்குச் சாய்ந்தான். அவன் கண்ணுக்கு எதிரே மரண தேவதை தோன்றி,

“புறப்படு என்னு‌டன்” என்று அழைப்பு விடுத்தது...

அம்மனிதன் கெஞ்சினான். அழுது முறையிட்டான். தேவதை சற்றும் மனம் இளகவில்லை. “கொஞ்ச காலம் வாழ அருள் செய்” என்று வேண்டிக் கொண்டான். அது அசைந்து கொடுக்கவில்லை.

“ஒரு நாலு நாளாவது அவகாசம் கொடு. என் சொத்தில் பாதி தருகிறேன்..!” என்று பேரம் பேசிப் பார்த்தான்.

அப்போதும் அது நகரவில்லை.....

“ஒருநாள் - ஒரே ஒருநாள் அவகாசம் கொடு” என்று அழுதான் அப்படியும் அது அசையவில்லை.

“எனது ‌எல்லாச் சொத்துக்களையும் தருகிறேன். ஒரு பகல் அவகாசம் கொடு. வீட்டில் என் பந்துக்கள் யாருமில்லை.”

அப்போதும் அது மசியவில்லை. “இதோபார். உன் சொத்துக்கள் எதுவுமே அங்கே பயன்படாது. உன் உறவுகளைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. உனக்கு இரண்டே இரண்டு விநாடிகள் அவகாசம் தருவேன் அவ்வளவுதான்.” என்றது மரணதேவதை கண்டிப்புடன்.

தன் வியாபாரத்தின் கொள்முதல், விற்பனை, வரவு, செலவு, லாபக்கணக்கு இவற்றைப்பற்றிப் பற்றி எழுதுவதற்காகத் தனது ஓலையை எடுத்தவன் அதில் அவகாசமாக இப்படி எழுதினான்....

“இதைப்படிக்கும் எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால் பொருள் சேர்ப்பதில் உங்களது வாழ்நாளை வீணடித்துவிடாதீர்கள். எட்டு லட்சம் பொன் இருந்தும் என்னால் ஒரு நாழிகையைக்கூட அதன் மூலம் வாங்க முடியவில்லை” என்று எழுதி முடித்தார்.

புத்தர் சொல்கிறார்... 

“இந்த நிலம் என்னுடையது... இவர்கள் என் பிள்ளைகள்... என்பதெல்லாம் தானே தனக்குச் சொந்தம் இல்லை என்றுணராத முட்டாள்களின் வார்த்தைகளாகும்...”

ஜென் கூறுகிறது... 

“அவன் எவ்வளவு விட்டுச்சென்றான் என்ற கேள்விக்கு ஒரே பதில் எல்லாவற்றையும் என்பது தான்... இரண்டாவது பதில், எதையும் விட்டுவிட்டு அவன் செல்லவில்லை... அவன் இவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டான் என்பதே...

நான் கூறுகிறேன்...

இந்த உலகம் பொருள்தேடி பொருள்தேடியே நிகழ்காலம் எனும் பொன்னான பொழுதுகளை ஒரு விநாடிகள் கூட அனுபவிக்காமல் கடந்துப்போய் வீணடித்துக் கொண்டுடிருக்கிறது... 

வாழ்க்கை நடத்துவதற்கு பொன்னும் பொருளும் அவசியம் தான் அதற்காக  வீடு, உறவு, சொந்தம் பந்தம் மட்டுமின்றி சிலர் தன்னுடைய குழந்தைகளையும் கூட மறந்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...

சம்பாதியுங்கள் கூடவே வாழ்க்கையை அனுபவியுங்கள்... சின்னசின்ன சந்தோசங்களை விட்டுவிட்டு அப்படிஎன்ன வாழ்க்கை நமக்கு...

17 comments:

  1. வணக்கம்
    அறிவுக்கு விருந்தாக அமைந்த நல்ல கதை பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் .

    ReplyDelete
  3. நான் கூறுகிறேன்...
    >>
    சௌந்தரான்ந்தான்னு பேர் மாத்திடலாமா!? தத்துவமெல்லாம் சொல்லுறீயளே!

    ReplyDelete
  4. உண்மை! முற்றிலும் உண்மை!
    //சின்னசின்ன சந்தோசங்களை விட்டுவிட்டு அப்படிஎன்ன வாழ்க்கை நமக்கு...// அதானே?

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க...

    ReplyDelete
  6. உண்மை 200 சதவீதம் உண்மை...

    ReplyDelete

  7. சம்பாதியுங்கள் கூடவே வாழ்க்கையை அனுபவியுங்கள்... சின்னசின்ன சந்தோசங்களை விட்டுவிட்டு அப்படிஎன்ன வாழ்க்கை நமக்கு..//

    அருமையாகச் சொன்னீர்கள்
    தெளிவூட்டிப்போகும் அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. நல்ல கதை...
    பகிர்வு அருமை...

    ReplyDelete
  9. நிகழ்காலம் மிக அவசியம்...

    ReplyDelete
  10. அருமை ஐயா அருமை
    எதைக் கொண்டு வந்தோம்
    கொண்டு செல்ல

    ReplyDelete
  11. உண்மை, பணத்தினால் காலத்தை வாங்க முடியாது.

    பகிர்விற்கு நன்றி சௌந்தர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...