வீட்டைக்கட்டிப்பார்... திருமணத்தை செய்துபார்... என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த அனுபவம் என்பது ஒரு மனிதன் படிக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம். ஏன்னென்றால் இந்த இரண்டையும் ஒருவன் வெற்றிகரமாக முடித்துவிட்டால் எந்த அனுபவம் வருகிறதோ இல்லையோ பணம் சார்ந்த அனைத்து பக்குவமும் அவனுக்கு வந்துவிடும்.
பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். ஒரு வேலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் தேவைப்படுகிறது. அதை எங்கிருந்து பெருவது போன்ற உலக அனுபவங்கள் அவனுக்கு கிடைத்து விடுகிறது.....
இந்த கதையை படித்தால் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்....
சாதாரண “கார்” ஒன்று வாங்குவதற்காக ஒரு விவசாயி... கார் விற்கும் கடைக்குச் சென்றார். அவர் விரும்பிய மற்றும் கையில் உள்ள 2 லட்சம் விலையில் உள்ள காருக்கு... முடிவில் 3 லட்சம் கொடுத்து வாங்க வேண்டியதாயிகிட்டது.
சாதாரண காருக்கு ஒலிப்பான் போன்ற கூடுதலான சாதனங்களைப் பொருத்தியதால் (Extra fittings) இப்படி விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக பொறுத்தப்பட்டதை அவர் விரும்பினாலும், உண்மையில் அவர் நினைத்திருந்த தொகையைவிட கூடுதலாகிவிட்டது.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, ஓரளவிற்கு தன் இழப்பை சரிக்கட்டக் கூடிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
தனக்கு கார் விற்ற விற்பனையாளர் தன்னிடம் பசு ஒன்று வாங்க வந்தார். பசுக்கள் பலவற்றைப் பார்த்த அவர், ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ”எவ்வளவு விலை..?” என்றார்.
அந்த விவசாயி மகிழ்ச்சியடைந்து, 12 ஆயிரம் என்று சொன்னார். வாங்குபவர் மகிழ்ச்சியடைந்து, தான் அந்த பசுவை வாங்கிக்கொள்வதாகச் சொன்னார். விவசாயி தன் தொழுவத்திற்குள் சென்று, விவரங்களைத் தயாரித்து. வெளியே வந்து, அந்த பசு வாங்க வந்தவரிடம் 23 ஆயிரம் ரூபாய்-க்கான பட்டியலை தந்தார்.
அந்த மனிதர் உணர்ச்சி வயப்பட்டு, ”ஆனால் நீங்கள் அந்த பசுவின் விலை 12 ஆயிரம் என்று சொன்னதாக நினைக்கிறேன்” என்றார்.
அந்த விவசாயி சாதாரண பசுவுக்கு அந்த விலைதான் என்றும், ஆனால் இந்த பசுவானது உண்மையில் வழுவழுப்பாக தோல் உள்ளதால் கூடுதலாக அதற்கு 1500 ரூபாயும், பசுவின் திறமையை அதிகரிக்க கூடுதலான 2500 ரூபாயும், கூடுதலான வயிறு உள்ளே பொறுத்தப்பட்டதற்கு 1000 ரூபாயும்,
இணைக்கப்பட்ட பூச்சிகள் விரட்டும் வாலுக்கு 1500 ரூபாயும், பாலைத்தரும் நான்கு காம்புகளுக்கு 750 ரூபாய் வீதம் நான்கு காம்புகளுக்கு 3000 ரூபாயும், வண்ணம் தீட்டப்பட்ட கொம்புகளுக்கு 1000 ரூபாயும், இயற்கையாக சாணம் போடும்படி உள்ளே ஒரு அமைப்பு பொறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு கூடுதலாக ஒரு ஆயிரமும்... இப்படியாக மொத்தம் சேர்த்து 23 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்றார் விவசாயி.
இதைப்படிக்கும் பொழுது, விவசாயி என்ற ஒரு நபர் கற்பனையாக உருவகப்படுத்தப்பட்டவர் என்று கருத இடமிருக்கிறது. இக்கதையைப் படித்தால் நீங்கள் புன்னகைக்கிறீர்கள். இந்த கதையில் உள்ளர்த்தத்தை நாம் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகிவிடும்..
உண்மையில் இதில் உள்ள உள்ளர்த்தத்தை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு பொருளை வாங்கும்போது நாம் எவ்வளவு ரூபாயில் வாங்க வேண்டும். அதனைசார்ந்து வரும் செலவுகள் எவ்வளவு, அதனை நாம் தாங்க முடியுமா என்றெல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இருக்கும் 5 லட்சத்துடன் ஒன்றிரண்டு லட்சம் கடன்வாங்கி வீட்டை கட்டிவிடலாம் என்று ஆரம்பிப்போம். ஆனால் அது 10 தாண்டியும் முடியாமல் இருக்கும். 3 லட்சத்தில் திருமணத்தை முடித்து விடலாம் என்றால் அது 6 லட்சத்தில் தான் முடியும்...
நம்மிடம் 100 ரூபாய் இருக்கிறது என்றால் நாம் 50 அல்லது 60 க்குள்ளான செலவை தீர்மானிப்போம்... அப்போதுதான் அதை 100 ரூபாய்க்குள் முடிக்க முடியும்.... 100 ரூபாய் இருக்கிறதே என்று 100 ரூபாய் செலவு தீர்மானித்தால்.. அவ்வளவுதான்... தேவையில்லாத பிரச்சனைகளை தவிப்போம்.. சிக்கனமான செலவு செய்போம்....
இன்றைக்கு வீடும் சரி, திருமணமும் சரி இரண்டும் சிரமம் தான்... எதிர்ப்பார்க்காத செலவுகளும் வரும்... தீர்வு : சரியான திட்டமிடல்...
ReplyDeleteஎவ்வளவு தான் திட்டமிட்டாலும் கண்டிப்பாக நாம் எதிர்பார்க்காம செலவுகள் வந்த நம்மை திக்குமுக்காடச்செய்துவிடும்...
Deleteகருத்துக்கு மிக்க நன்றி
வீடு, கல்யாணத்துக்கு மட்டுமல்ல எல்லாத்துக்குமே முறையான திட்டமிடல் வேண்டும்
ReplyDeleteஎதையும் பிளான் பண்ணி செய்யனும்...
Deleteஅப்படித்தானே....
பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...... வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார் என்று. மனிதனின் ஆசைக்கு அளவேது......
ReplyDeleteபெரியங்கனுடைய அனுபவமே அனுபவம்தாங்க....
Deleteதன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் பழமொழியா எழுதி வச்சிட்டு போயிட்டாங்க
சௌந்தர் மிகவும் யதார்த்தமான உண்மை. எந்த செலவு வந்தாலுமே ஒரு பத்து அல்லது இருபது விழுக்காடுகள் கூடுதல் செலவு இருக்கவே செய்யும். அதுவும் கல்யாணம், வீடு போன்ற திட்டங்களுக்கு பணவீக்கத்தால் செலவு பன்மடங்கு அதிகரிக்கும்.
ReplyDeleteஉண்மைதான் கும்மாச்சி...
Deleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
கதையும் அது சொன்ன நீதியும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஎதுவுமே எதிர்பார்த்ததற்கு மேல்தான் வந்துவிடுகிறது .
ReplyDeleteதாங்கள் சொல்வதும் உண்மை...
Deleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வாழ்விற்குத் தேவையான விசயம் சொல்லும் அருமையான கதை..பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!
ReplyDeleteLink : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
சரியாக சொன்னீர்கள்... திட்டமிடலே அனைத்திலும் அவசியம்
ReplyDeleteஎல்லாத்துக்கும் யோசிக்க வேண்டும் என்பது சரியே
ReplyDelete