கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 October, 2013

நய்யாண்டி சினிமா விமர்சனம் / naiyaandi tamil movie review

இது தனுஷ்-க்கு போராத காலம்போல... ஒரு பெரியா மாஸ் ஹீரோவாகிவிட்ட தனுஷ் எதற்கு இதுபோன்ற ‌சுமாரான மன்னிக்கவும் ரொம்ப சுமாரான கதை‌யை ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.  மரியான் கொஞ்சம் சீரியஸான படம்... அதற்காக கொஞ்சம் மசாலா படம் பண்ணுவோன்னு இறங்கியிருக்கிறார்ன்னு நினைக்கிறேன்.... இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்...

தான் படித்த பூவாளி என்ற ஒரு கிராமத்தில் நடக்குற திருவிழாவுக்கு போகிறார் தனுஷ். அதே திருவிழாவுக்கு தன்னுடைய பாட்டிவீட்டுக்கு வருகிறார் நஸ்ரியா. பரோட்டா சூரியோட சேர்ந்து தனுஷ் அன் கோ நஸ்ரியாவை கவர பல முயற்சி எடுக்குறாங்க. எல்லா முயற்சியிலும் பல்பு வாங்குகிறார்.. எதுக்கு படியாத நஸ்ரியா கடைசியா ஒரு சின்ன செண்டிமென்டுக்கு பிறகு ஓகோ சொல்லிடுறாங்க....

திருவிழா முடிஞ்சி சொந்த ஊருக்கு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட செல்லும் நஸ்ரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிடுகிறது. அன்று இரவு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நஸ்ரியாவீட்டுக்கு சொல்லும் தனுஷ்-க்கு இந்த உண்மைதெரியவர இரண்டுபேரும் அங்கிருந்து ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கிறாங்க.

 
தனுஷ் யாருண்ணா...? கும்பகோணத்தில் குத்துவிலக்கு செய்யும் பிரமீட் நடராஜன் அவர்களின் மகன்.... தனுஷ்-க்கு வயசு 24, ஆனா இவருக்கு 42 வயசு அண்ணனாக நடிகர் ஸ்ரீமான்.. 40 வயது அண்ணனாக சத்யன்... 

இப்படி 40 வயசுக்கு மேல ஆகியும் திருமணமாகாமல் அண்ணன்கள் இருக்கும் நம் வீட்டில் எப்படி தன்னுடைய திருமணத்தை சொல்லுவது என்று புரியாமல்... சூரி மூலமாக நஸ்ரியாவை தன்வீட்டுக்கே கடையில் கணக்கு வேலைக்கு சேர்த்துவிடுகிறார்...  அதிலிருந்து அண்ணனுங்க இரண்டுபேர்ரும் நஸ்ரியாவை ஒருதலையா லுக்குவிடுறாங்க... 

இதற்கிடையில் தனக்கு நிச்சயம் நடந்த பெண் எப்படியாது கண்டுபிடித்து அடைய வேண்டும் என்று வெறிகொண்டு தேடுகிறார் வில்லன்... ‌நஸ்ரியாவின் அப்பாவும் தேடுகிறார்..


தனுஷ் வீட்டில் மயங்கி விழும் நஸ்ரியா 3 மாதம் கர்பமாக இருப்பது தெரியவர... இதற்கு காரணம் யாருன்னு தெரியால் முழிக்கிறார்கள் குடும்பத்தார்கள்... அதே வேளையில் நஸ்ரியாவை வில்லன் குழு கடத்த அவர்களிடம் இருந்து எப்படி நஸ்ரியாவை மீட்டு...  தன் திருமணத்தை அப்பா அம்மாவிடம் சொல்லி குடும்பத்தோடு ஒன்று சேர்கிறார் என்பதை மொக்கையாக சொல்லியிருக்கிறார் சற்குணம்.

களவாணி, வாகைச்சூடவா இயக்குனர் சற்குணம் என்று தெரிந்தவுடன் முதல் படமாக நய்யாண்டிக்கு சென்றேன்... ஆனால் இருந்த சரக்கையெல்லாம் அந்த இரண்டு படத்தோடு முடித்திருக்கிறார் இயக்குனர்... இந்த படத்தில் புதுசா ஒன்றும் இல்லையென்றே எனக்கு படுகிறது..

பாடல் ஒன்றும் கேட்கிறமாதிரி இல்லை.... பிண்ணனி சுமார்... எதுக்கு இந்த பாட்டுக்கெல்லாம் பாரீன் போனாங்கன்னு தெரியல...

நஸ்ரியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு... படத்துல அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை... தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்... கவர்ச்சி காட்டாத நடிகைகள் பட்டியலில் கண்டிப்பாக இவருக்கும் இடமுன்டு.... (ஆனா தொப்புளை காட்டிட்டாங்கன்னு எதுக்கு ஒருவாரமா இந்த விளம்பரம்ன்னு தெரியல..)

படம் முதல்பாதி தனுஷ்... பரோட்டா சூரி, சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி என கொஞ்சம் கலகலப்பாக செல்கிறது.... சூரியிடமும் இதில் சொல்வதற்கு ஏதும் இல்லை... சுமார் நகைச்சுவைதான்..

கல்யானமாகத ஏக்கம்... அதன்பிறகு நஸ்ரியாவை பார்த்து இவர்கள் லுக்குவிடுவது என ஸ்ரீமான், சத்யன் செய்யும் சேட்டைகள் சகிக்கல... படத்தில் நிறை நகைச்சுவை பட்டாளங்கள் இருந்தும் நல்லதொரு நகைச்சுவைகாட்சியென்று ஏதும் இல்லாதது ஏமாற்றம்..


சின்னவண்டு என்ற கேரட்டரில் தனுஷ்... நடிப்பதற்கு தேவையான கதை இல்லாத படம்.. சும்மா அப்படியே பொழுதுபோக்குக்கு வந்துபோவது போல் தெரிகிறது... (அய்யா சற்குணம் ஒரு தேசிய விருதுபெற்ற இரண்டு பேரும் சேர்ந்து இப்படி பண்ணிபுட்டிங்களே..) பாடல்களில் கொஞ்சம் ஸ்டைலீஷாக காட்டியிருக்கிறார்கள்.... ஆனால் தனுஷ்-க்குதான் எடுபடவில்லை.. (தனுஷ்க்கு குத்துபாட்டுதான் பொருந்தும் ஆனால் இதில் சரியான குத்துபாட்டு ஏதும்இல்லை)
நிறைய எதிர்பார்ப்புகளோடு சென்றேன்.. ஆனால் படத்தில் ஒன்றுமில்லை... இதுக்குமேல் இந்த படத்தைப்பத்தி நான் என்ன சொல்வது... 

படத்தலைப்புக்கு ஏற்றவாறு கலகலப்பு படம்போல் கொஞ்சம் நகைச்சுவையோடு செய்திருந்தாலாவது படம் கொஞ்சம் சூடிபிடிச்சிருக்கும்.... நய்யாண்டின்னு எதுக்கு பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை...

11 comments:

  1. நான் படம் பார்க்க போகவே இல்ல. படம் நல்லா இல்லாம போகவேதான் ஒரு வாரமா விளாம்பரம் தேடிக்கிட்டாங்களா!?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க படத்தை விளம்பரப்படுத்துறதுக்கு தான் இந்த ராவடி....

      தனுஷ்க்கு வந்த நிலைமையை பாருங்க

      Delete
  2. ஓஹோ ! ! அதான் “தொப்புளை” பிரச்சனையாக்கி ஒரு பப்ளிசிட்டி தேடிகிட்டாங்களா ????

    கதையை விலாவாரியாக சொன்னதிற்கு தேங்க்ஸ்...

    ReplyDelete
  3. படம் மொக்கையானாலும் தனுஷிற்காக பார்க்கலாமுல்ல....

    ReplyDelete
    Replies
    1. தனுஷின் எந்த பார்முலாவும் இந்த படத்தில் இல்லை.. அதான் இந்த ஏமாற்றம்...

      Delete
  4. எதிர்பார்த்தமாதிரி இல்லை ,'நஹி 'யாண்டின்னு சொல்லலாமா சௌந்தர் ஜி ?

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - நையாண்டி நையாண்டிதான் - அதுக்கெல்லாம் விமர்சனம் எதுக்கு .... சரி பசங்க வாத்தியார் - நகைச்சுவை சூப்பர் - மிக மிக இரசிச்சேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. எட்டாவது பிளஸ் வோட்டு என்னுடையது!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...