கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 October, 2013

விடுமுறை தின வேதனையும்... சில நகைச்சுவைகளும்...


நாளுக்கொன்றாய்
உன் கடிதத்தை எதிர்பார்க்கிறது மனசு...

உதயத்தில் துவங்கிய எதிர்பார்ப்பு
முடிகிறது அஸ்தமனத்தில்...
 
என்வீட்டு தபால் பெட்டி 
கடிதம் இல்லாததை உறுதி செய்ய
ஏமாற்றத்தோடு முடிகிறது நாள்...
 
மறுநாள் நம்பிக்கையில்
மூச்சுவிடும் மனசு
இன்றாவது கடிதம் வருமென்று....
 
இதற்கிடையில் ஞாயிறும்...
தபால்துறை இயங்காத 
அரசுவிடுமுறையும்...
இன்னும் கொடுமைதான்...

***********************************





ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.
டாக்டர் எழுந்து "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.
 
 வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, "இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்" என்கிறான்.
 
டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.
 
 ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். 
 
டாக்டரைப் பார்த்து, "உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?" என்றான்.
 
டாக்டர்,"நூறு ரூபாய்" என்றார்.
 
உடனே அவன் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, "மிகவும் நன்றி 
டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் முன்னூறு ரூபாய் கேட்டான்" என்றான்.

***********************************




1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு.


அப்போது நேரு,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார்.

உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து, ''இதோ, என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''

நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்


***********************************

 

இன்று உலக உணவு தினம் (அக்டோபர் 16)
 
உணவு பொருளை வீணாக்குவதை தவிர்ப்போம்...
 
அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கான 
வழியை உறுதிசெய்ய துணைநிற்போம்...
 
பசியில்லாத உலகம் செய்வோம்...!

16 comments:

  1. வணக்கம்
    நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதையும் மூன்று சுவாரஸ்யமான
    பகிர்வுகளும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிரித்தேன்...

    கருத்துகளும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நகைச்சுவை அருமை

    ReplyDelete
  5. டாக்சிக்காரன் ஜோக்கும், பயனில்லாத இடமும் படிச்சு சிரிச்சேன். உலக உணவு தினம் பற்றியும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. கவிதை அருமை... உலக உணவு தினம் குறித்த தகவலுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  7. டாக்டர் ஜோக் அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  8. பாவம் அந்த டாக்டர் :)
    உலக உணவு தினமா? தகவலுக்கு நன்றி. இறுதி கருத்துகள் அருமை!

    ReplyDelete
  9. எனக்கு டாக்டர் நண்பர் இருக்கிறார். மறக்காம அவரிடம் இந்த ஜோக்கைச் சொல்லி எச்சரிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வலைதளத்தில் ஏன் கருத்து பெட்டியை வைக்கவில்லை தலைவரே...

      ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா..?

      Delete
    2. கடவுளையும் மதங்களையும் விமர்சிக்கும் [வேறொரு வலைப்பதிவில், உண்மைப் பெயரில் முன்பு நிறைய எழுதினேன்] என் பதிவுகளுக்கு, மிகவும் அநாகரிகமாக [தாயையும் உடன் பிறப்புகளையும் சம்பத்தப்படுத்தி] எழுதப்படும் பின்னூட்டங்களே காரணம்.

      மட்டுறுத்தல் செய்யலாம்தான். படிப்பதற்கே மனம் கூசுகிறதே. என்ன செய்ய?

      Delete
    3. //சம்பத்தப்படுத்தி//
      ‘சம்பந்தப்படுத்தி’ என வாசிக்கவும்.

      Delete
    4. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளகூடிய மனசு சிலபேரிடம் இல்லை..
      அதனால் வரும் பிரச்சனைதான் இது... திரும்பவந்ததற்கு நன்றி....

      Delete
  10. பகிர்வு அருமை.

    கவிதையும் நகைச்சுவையும் நன்று.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...