கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 October, 2013

ஆசிரியர் மாணவர்களிடையே நடக்கும் அலப்பறைகள்...!


ஆசிரியர் : நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்.

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா . சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்பகோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்.

ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... ¬ எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: ? ?


**********************************


வாத்தி : ஏண்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?

மாணவன் : டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போடா சொன்னார்...!

வாத்தி... ??????

***********************************

ஆசிரியர் : எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?‌ சிறுவன் :நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?
ஆசிரியர் : நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.
சிறுவன் : நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா? 
************************************

மாணவன் ஆசிரியரிடம்-:sir எந்த மாதத்தில் 28 நாட்கள்
வருகின்றது?


 ஆசிரியர்-:என்னிடமே கேள்விகேட்கிறாயா?பிப்ரவரி மாதத்தில் தான்.

மாணவன்-:இது கூடத் தெரியாமல் ஏன் படிப்பிக்க வாறிங்கள்
எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்.

*************************************


ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் ! 
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
 
************************************

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
 
மாணவன் : இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
*******************************
இதைவிட அலப்பறைகளையெல்லம் வகுப்பறையில் பார்க்கநேரும்
நான் ரசித்த ஆசிரியர் மாணவர் ஜோக்ஸ் -யை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி...

6 comments:

  1. ஹா... ஹா... செம அலப்பறை... இன்றைய ஆசிரியருக்கு சிரமம் தான்...

    ReplyDelete
  2. நீங்களும் படிக்கிற காலத்திலே செய்ஞ்ச அலப்பரைகளை கொஞ்சம் எடுத்து விடுங்க பாஸ் !

    ReplyDelete
  3. ரசிக்க வைத்த ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
  4. ஹாஹா அனைத்தையும் ரசித்தேன். படங்கள் அருமை!

    ReplyDelete
  5. வாய்விட்டுச் சிரித்தேன்.

    ReplyDelete
  6. தமிழ் மனம் வோட்டு + 1

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...