கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 February, 2011

எப்படி பேர் வைச்சிருக்கங்க பாரு..


“ஏங்க... நம்ம பிள்ளைக்கு என்ன  பெயர் வைக்கலாம்?”
 
“‌அதுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்.”
 
“எவ்வளவு நாள் யோசிப்பீங்க.”
 
“அவசரப்படதே. குழந்தை உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”
 
“என்ன சொல்றாங்க?”
 
“சில வகைப் பெயர்களாலே குழந்தையின் ம‌னோபாவம், ஆளுமை மாறிப் போயிடுதாம்...”
 
“அது எப்படி?”
 

“ரொம்பவும்  பழக்கத்துலே உள்ள பொதுவான பெயர்களைச் சூட்டினா குழந்தை தனித்தன்மையை இழந்துடும்ங்கறாங்க..! அதே மாதிரி ஆணா பெண்ணான்னு கண்டுபிடிக்க முடியாத  பேரா வச்சுடறாங்க பருங்க...  அப்படி வைச்சா அவங்க பாலினத் தனித்தன்மை குன்றிவிடும். அப்படிங்கறாங்க!”
 
“பேர் வைக்கறதுலேயும் இவ்வளவு விஷயம் இருக்கா..?”

”ஆமாம்... சினிமாவுலே வர்ற காமெடி நடிகர்கள்... பாத்திரங்களின் பெயர்கள்... வில்லன்கள் பெயர்கள்... அப்புறம்.. மதம்.. சாதி.. இனம்.. இப்படி இனம் காட்டிப்பிரிக்கும் பெயர்கள்.. இதையெல்லாம் வைக்க வேண்டாங்கறது நிபுணர்களின் ஆலோசனை. உச்சரிக்கவும் எழுதவும் சில பெயர்கள் ரொம்பக் கடினமா இருக்கும்... இதெல்லாம் வேண்டாங்கறாங்க!”
 
”ஓஹோ.. இவ்வளவும் யோசிச்சிக்கிட்டுதான் இப்படி உக்கார்ந்திருக்கீங்களா?”
 
“பின்னே... என்ன சும்மாவா உக்கார்ந்திருக்கேன்? இன்னோரு முக்கியமான விஷயம்?”
 
“எனனது..”
 
“சிலருடைய பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட்டா விபரீதமா  போயிடும்.. என்னோட பேர் மாதிரி...! அப்படிப்பட்ட பெயரையும் தவிர்க்கணும்..!”
 
“இருந்தாலும் உங்க  பேரைச் சுருக்கி செல்லமா கூப்பிடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்குது..!”
 
“நீ அப்படிக் கூப்பிடறப் போவெல்லாம் எனக்குக் கோபம் வரும்... ஆனா... உம் பேர்லே இல்லை....!”
 
“வேற யார் பேர்லே?”
 
“ மாடசாமி-ன்னு எனக்கு பேர் வச்ச எங்க அப்பா பேர்லே!”
 

நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்


உண்மைதாங்க குழைந்தை பேர் வைக்கிறப்ப சில பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அப்போது என்ன பேர் அதிக பிரபலமாக இருக்கிறதோ அதை வைத்து விடுகிறார்கள்.. (தற்போது எங்கள் பள்ளியில் ஒரு வகுப்புக்கு 5 விஜய் 4 அஜித், 2 தனுஷ், 4 திரிஷா.)  என சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள்தான் அதிக இருக்கிறது..

தற்போது வைக்கும் பெயர் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி, அந்த குழந்தையின் வாழ்நாள் முழுமைக்கும் அந்த பெயர் பெருந்தகூடியாதா? என்று கொஞ்சம் கூட யோசிப்பதில்லை...

இன்னும் தற்போது.. நாகரீகம் வளர்ந்த போது கூட, தங்களுடைய குல தெய்வம் பெயர்கள், தங்களுடைய முதாதையர்கள் பெயர்கள், என வைத்து எதிர் காலத்தில் அவர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறார்கள்.. ஒரு சபை நடுவே தன்னுடைய பெயரை உரக்க சொல்லக் கூட நிறைய பேர் தயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..

தற்போது நியூமரலாஜி என்ற பெயரில் இருக்கும் பெயரை சுருக்குவது.. நீட்டுவது.. உடைப்பது.. என்று ஒரு குருப் இரங்கிவிட்டது..

சிலர் தாம் ‌எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற  நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று  தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள் (உதா. பன்னிகுட்டி, கோமாளி,  அஞ்சா சிங்கம்,  ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. ‌சேட்டைக்காரன்.. ஓட்டவடை) இப்படியெல்லாம் பெமஸ் ஆகராங்க.... (இவங்க நம்மாளுஙக..)

எது எப்படியோ நம்பபேர  கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..

இதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே.
இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும் 
வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..

முந்தைய பதிவு :   இவங்க ஜெயிக்க மாட்டாங்க..

87 comments:

 1. படங்கள் மீள பின்னொக்கி கொண்டு சென்று விட்டது... பெற்றோருக்கு அவசியமான பதிவு ஒன்று...

  ReplyDelete
 2. ஃஃஃஃஇதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே..
  இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும்
  வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..ஃஃஃஃ

  இந்த அப்ரோச் ரொம்பவே பிடிச்சிருக்கு.... அதனால.. ஓகே ஓகே

  ReplyDelete
 3. பெயரில் அசிங்கம், அசிங்கம் இல்லன்னு ஒண்ணும் கிடையாது. பெயர் தாய் தந்தையரின் அன்பின் வெளிப்பாடு. எவ்வளவு ப்ரயாசைப்பட்டு அவர்கள் சூட்டி இருப்பாங்க.

  ReplyDelete
 4. ஹா..ஹா.. பட்டாபட்டி என்ற பேரை, காரமடை ஜோசியர், தேர்தெடுத்துக்கொடுத்தார்.. அவரு இப்ப எங்க இருக்காரா?..

  போங்கண்ணே..பேர் வெச்சுட்டு சோறு வைக்காததாலே.. திகாருக்கு இன்பச்சுற்றுலா அனுப்பியிருக்கேன்.. ஹி..ஹி

  ReplyDelete
 5. ,,எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்...,,

  அதுசரி...

  ReplyDelete
 6. என் கல்லூரி வாச்மேன் பெயர் இருளாண்டி அந்த பெயரை கேட்கும் போது மனதுக்குள் இப்படி நினைத்ததுண்டு.
  இவனெல்லாம் இவங்க அப்பன ஏன் இன்னியும் கொலை பண்ணாம இருக்கான்னு ................

  ReplyDelete
 7. நல்ல பெயர் பெற்ற சிறப்பான பதிவு. பேரைக் கேட்டவுடன் சும்மா அதிருதில்ல--- அபடிங்கற மாதிரி வைக்கணும்.

  ReplyDelete
 8. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
  அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. கலக்கல் போஸ்டு.. இனிமேல்லாம் பிள்ளைங்க வளந்தப்புறம் உங்களுக்கு பிடிச்ச பேரை நீங்களே வெச்சுக்கோங்கன்னு சொல்லணும் போலிருக்கு :-)))

  ReplyDelete
 10. ம.தி.சுதா said... [Reply to comment]

  படங்கள் மீள பின்னொக்கி கொண்டு சென்று விட்டது... பெற்றோருக்கு அவசியமான பதிவு ஒன்று...


  நன்றி.. சுதா..

  ReplyDelete
 11. ம.தி.சுதா said... [Reply to comment]

  ஃஃஃஃஇதை படிக்கு அன்பு வாசகர்களே.. பதிவர்களே..
  இது நல்ல பதிவு என்று நீங்கள் நினைத்தால் மட்டும்
  வாக்களியுங்கள்.. பின்னுட்டம் இருங்கள்.. நன்றி..ஃஃஃஃ

  இந்த அப்ரோச் ரொம்பவே பிடிச்சிருக்கு.... அதனால.. ஓகே ஓகே


  நன்றிங்கோ...

  ReplyDelete
 12. தமிழ் உதயம் said... [Reply to comment]

  பெயரில் அசிங்கம், அசிங்கம் இல்லன்னு ஒண்ணும் கிடையாது. பெயர் தாய் தந்தையரின் அன்பின் வெளிப்பாடு. எவ்வளவு ப்ரயாசைப்பட்டு அவர்கள் சூட்டி இருப்பாங்க.

  உண்மை தாங்க.. ஆனால் இன்றை கனிணி யுகத்தில் நம்ம பிள்ளைங்க மாடர்ன் பேரைத்தான் விரும்பராங்க.. என்ன செய்ய..

  ReplyDelete
 13. இவங்க பேருல மட்டுமில்ல எழுத்திளையும் வித்தியாசமுங்க!

  ReplyDelete
 14. குழந்தைகள் பெயர் பற்றிய உளவியல் நிபுணர்கள் கருத்து ஏற்றுக்கொள்ல வேண்டிய தகவலாகும்...நானும் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete
 15. பட்டாபட்டி.... said... [Reply to comment]

  ஹா..ஹா.. பட்டாபட்டி என்ற பேரை, காரமடை ஜோசியர், தேர்தெடுத்துக்கொடுத்தார்.. அவரு இப்ப எங்க இருக்காரா?..

  போங்கண்ணே..பேர் வெச்சுட்டு சோறு வைக்காததாலே.. திகாருக்கு இன்பச்சுற்றுலா அனுப்பியிருக்கேன்.. ஹி..ஹி


  எப்படியோ செய்யிங்க..

  ReplyDelete
 16. சங்கவி said... [Reply to comment]

  ,,எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்...,,

  அதுசரி...

  நன்றிங்கோ..

  ReplyDelete
 17. இது என் தொழிலுக்கும் பயன்படும் தகவல் நன்றி..ஓட்டு போட்டாச்சி

  ReplyDelete
 18. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

  என் கல்லூரி வாச்மேன் பெயர் இருளாண்டி அந்த பெயரை கேட்கும் போது மனதுக்குள் இப்படி நினைத்ததுண்டு.
  இவனெல்லாம் இவங்க அப்பன ஏன் இன்னியும் கொலை பண்ணாம இருக்கான்னு ................


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 19. ஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....

  ReplyDelete
 20. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply to comment]

  hahaa kalakkal

  நன்றி.. ரமேஷ்..

  ReplyDelete
 21. ////////சிலர் தாம் ‌எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்//////////

  யோவ் பன்னிக்குட்டி ராம்சாமிங்கற மொத்தப் பேருமே புனைப்பேருதான்யா......

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  ஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....


  உங்களை என் தளத்துக்கு வரவக்கிறதுக்கு என்ன என்ன பண்ண வேண்டி இருக்கு பாருங்க.

  உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 23. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  ////////சிலர் தாம் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நன்றாக இருக்கும் பெயரைக்கூட புனைப் பெயரில் என்று தன்பேருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்//////////

  யோவ் பன்னிக்குட்டி ராம்சாமிங்கற மொத்தப் பேருமே புனைப்பேருதான்யா......///////


  அப்ப சொந்த பேர் என்ன எனக்கு மட்டும் ‌சொல்லுங்க..

  ReplyDelete
 24. (உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. ‌சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///

  இப்படி இருந்தால் தன் அது புனை பெயரா இன்னும் நிறைய இருக்கிறது......

  ReplyDelete
 25. ஒரு நல்ல பதிவை எப்படி சூப்பர் ஹிட் ஆக்குவது என்ற டெக்னிக்கை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. குட்...

  ReplyDelete
 26. இந்த வார தமிழ்மண டாப் 20 ல நீங்க டாப் 5க்குள்ள வர இந்த பதிவு ஒரு முக்கியமான காரணமா இருக்கும்

  ReplyDelete
 27. ஹி...... ஹி.... ஹி..... இதுல நம்மளோட பேரையும் சேர்த்துருக்கீங்க! ஓட்ட வாடா நாராயணன் னு வைச்சதுக்கு அப்புறம் நான் உங்களோட ரொம்ப நெருங்கி வர்றேன்! நீங்களும் " டேய் ஓட்ட வட நாராயணா " என்று உரிமையோடு அழைக்கலாம்! சொந்தப் பேரில் இருக்கும் பொது ரொம்ப மரியாத தர்றாங்க! நீங்க வாங்க போங்க ங்கிறாங்க! எனக்கு அது புடிக்கல!

  ReplyDelete
 28. எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்..

  ஹ ஹ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  நல்ல பெயர் பெற்ற சிறப்பான பதிவு. பேரைக் கேட்டவுடன் சும்மா அதிருதில்ல--- அபடிங்கற மாதிரி வைக்கணும்.

  ரொம்ப நன்றிங்கோ..

  ReplyDelete
 30. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
  அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
  வாழ்த்துக்கள்....

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 31. அமைதிச்சாரல் said... [Reply to comment]

  கலக்கல் போஸ்டு.. இனிமேல்லாம் பிள்ளைங்க வளந்தப்புறம் உங்களுக்கு பிடிச்ச பேரை நீங்களே வெச்சுக்கோங்கன்னு சொல்லணும் போலிருக்கு :-)))


  உண்மைதானுங்க..

  ReplyDelete
 32. நம்ம பேரை கேட்ட நாலு பேரு அதிரணும்னா நில நடுக்கம்னுதான் வைக்கணும். என் முழு பெயர் பாலசுப்பிரமணியன். நான் படித்த பதினெட்டு ஆண்டுகளில் என் வகுப்பில் ஒருவர் கூட என் பெயரில் இல்லை. இதே போல பல வித்தியாசமான பெயர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடன் முதுகலை படித்த நண்பர் ஒருவரின் பெயர் "பகுத்தறிவு"

  ReplyDelete
 33. விக்கி உலகம் said... [Reply to comment]

  இவங்க பேருல மட்டுமில்ல எழுத்திளையும் வித்தியாசமுங்க!

  நானும் ஒத்துக்கிறேன்..

  ReplyDelete
 34. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  குழந்தைகள் பெயர் பற்றிய உளவியல் நிபுணர்கள் கருத்து ஏற்றுக்கொள்ல வேண்டிய தகவலாகும்...நானும் என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


  நன்றி.. தல..

  ReplyDelete
 35. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  இது என் தொழிலுக்கும் பயன்படும் தகவல் நன்றி..ஓட்டு போட்டாச்சி


  அதுக்கு ஒரு நன்றிங்க...

  ReplyDelete
 36. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  ஆமா பேரு வெக்கறதுக்கு கொஞ்சமாவது மெனக்கெடனும்... உணர்ச்சி வசப்பட்டு வைக்க கூடாது....


  நல்லா சொன்னிங்க..

  ReplyDelete
 37. சௌந்தர் said... [Reply to comment]

  (உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///

  இப்படி இருந்தால் தன் அது புனை பெயரா இன்னும் நிறைய இருக்கிறது......


  உண்‌மைதானுங்க..

  ReplyDelete
 38. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  ஒரு நல்ல பதிவை எப்படி சூப்பர் ஹிட் ஆக்குவது என்ற டெக்னிக்கை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. குட்...


  நன்றி தல..

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  இந்த வார தமிழ்மண டாப் 20 ல நீங்க டாப் 5க்குள்ள வர இந்த பதிவு ஒரு முக்கியமான காரணமா இருக்கும

  எல்லாம் உங்க ஆசீர்வாதம்..

  ReplyDelete
 40. எஸ்.கே said... [Reply to comment]

  நல்ல சிந்தனை!


  நன்றி நண்பா..

  ReplyDelete
 41. ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]

  ஹி...... ஹி.... ஹி..... இதுல நம்மளோட பேரையும் சேர்த்துருக்கீங்க! ஓட்ட வாடா நாராயணன் னு வைச்சதுக்கு அப்புறம் நான் உங்களோட ரொம்ப நெருங்கி வர்றேன்! நீங்களும் " டேய் ஓட்ட வட நாராயணா " என்று உரிமையோடு அழைக்கலாம்! சொந்தப் பேரில் இருக்கும் பொது ரொம்ப மரியாத தர்றாங்க! நீங்க வாங்க போங்க ங்கிறாங்க! எனக்கு அது புடிக்கல!


  உங்க ஆதரவுக்கு நன்றிங்கோ..

  ReplyDelete
 42. ரேவா said... [Reply to comment]

  எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்..

  ஹ ஹ வாழ்த்துக்கள்


  நன்றி தோழி..

  ReplyDelete
 43. பாலா said... [Reply to comment]

  நம்ம பேரை கேட்ட நாலு பேரு அதிரணும்னா நில நடுக்கம்னுதான் வைக்கணும். என் முழு பெயர் பாலசுப்பிரமணியன். நான் படித்த பதினெட்டு ஆண்டுகளில் என் வகுப்பில் ஒருவர் கூட என் பெயரில் இல்லை. இதே போல பல வித்தியாசமான பெயர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடன் முதுகலை படித்த நண்பர் ஒருவரின் பெயர் "பகுத்தறிவு"


  நன்றி..!

  ReplyDelete
 44. இதுக்கே இப்படின்னா....இதோட....டெர்ரரான பேருல்லாமிருக்குங்க....

  ReplyDelete
 45. எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..


  ...Hello, My name is Chitra. :-)

  ReplyDelete
 46. உண்மைதான்.. எவன் ஒருவன் தன் பெயர் சரியில்லை என்று நினைக்கிறானோ அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து கவனம் சிதற வாய்ப்பு உள்ளது!

  ReplyDelete
 47. பேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா..
  அருமையான பதிவு..
  தொடருங்கள்..

  ReplyDelete
 48. எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..


  நான் பாட்டு ரசிகனுங்க..

  ReplyDelete
 49. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

  இதுக்கே இப்படின்னா....இதோட....டெர்ரரான பேருல்லாமிருக்குங்க....


  என்ன பாஸ் நம்ம பக்கம் ஏப்பவாவது ஒரு முறை தான் வற்றீங்க..

  ReplyDelete
 50. Chitra said... [Reply to comment]

  எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..


  ...Hello, My name is Chitra. :-)


  நன்றி சி்தரா..

  ReplyDelete
 51. வைகை said... [Reply to comment]

  உண்மைதான்.. எவன் ஒருவன் தன் பெயர் சரியில்லை என்று நினைக்கிறானோ அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து கவனம் சிதற வாய்ப்பு உள்ளது!


  நன்றி வைகை..

  ReplyDelete
 52. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  பேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா..
  அருமையான பதிவு..
  தொடருங்கள்..

  நனறி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 53. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்... அது சரி.. உங்க பேரை சொல்லிட்டு போங்க..


  நான் பாட்டு ரசிகனுங்க..

  ஆகட்டும்.. ஆகட்டும்..

  ReplyDelete
 54. பேரு விளங்குற மாதிரியான தகவல் சொல்லியிருக்கிங்க.... பகிர்வுக்கு என் நன்றி.

  ReplyDelete
 55. நல்ல பதிவு
  எனது தளத்திலும் இணைப்பு தந்திருக்கிறேன்
  நல்ல சிந்தனை!
  நன்றி நண்பா

  ReplyDelete
 56. பேர்ல இவ்வளவு இருக்கான்னு ஆச்சர்யப்பட வைத்த பதிவு இது..:))

  ReplyDelete
 57. இந்தப் பதிவு உங்களுக்கு ரொம்ப நல்ல ’பேரை’த் தரும்!

  ReplyDelete
 58. ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....

  ReplyDelete
 59. பாஸ் பேசாம நம்மளுக்கு கொழந்த பிறக்கேக்க உங்கள்ட ஐடியா கேக்கலாம்ன்னு இருக்கேன்...சொல்லுவீங்கள்ளே?

  ReplyDelete
 60. ///////சி.கருணாகரசு said... [Reply to comment]

  பேரு விளங்குற மாதிரியான தகவல் சொல்லியிருக்கிங்க.... பகிர்வுக்கு என் நன்றி.

  ////////

  மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 61. /////யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

  நல்ல பதிவு
  எனது தளத்திலும் இணைப்பு தந்திருக்கிறேன்
  நல்ல சிந்தனை!
  நன்றி நண்பா
  //////


  தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தலைவா..

  ReplyDelete
 62. ////தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]

  பேர்ல இவ்வளவு இருக்கான்னு ஆச்சர்யப்பட வைத்த பதிவு இது..:))
  ///////

  நன்றி அம்மையாரே..

  ReplyDelete
 63. //////சென்னை பித்தன் said... [Reply to comment]

  இந்தப் பதிவு உங்களுக்கு ரொம்ப நல்ல ’பேரை’த் தரும்!
  //////

  நன்றி சார்..

  ReplyDelete
 64. /////////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....
  /////


  என்னங்க ரொம்ப லேட்டு..

  ReplyDelete
 65. மைந்தன் சிவா said... [Reply to comment]

  பாஸ் பேசாம நம்மளுக்கு கொழந்த பிறக்கேக்க உங்கள்ட ஐடியா கேக்கலாம்ன்னு இருக்கேன்...சொல்லுவீங்கள்ளே?
  ////

  கன்டிப்பாக உங்களுக்கு நான் உதவிசெய்வேன் நண்பரே..

  ReplyDelete
 66. பேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா????
  நல்ல பதிவு

  ReplyDelete
 67. தோழி பிரஷா said... [Reply to comment]

  பேர் வைக்கிறதல இவ்வளவு இருக்கா????
  நல்ல பதிவு

  நன்றி தோழி..

  ReplyDelete
 68. குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் இவளவு விஷயம் இருக்கிறது என்பதை இன்றுதான் . அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . இறுதி நகைச்சுவை துணுக்கும் கலக்கல் .

  ReplyDelete
 69. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....//
  பேர்-னு சொன்னாலே முதல் ஞாபகம் வர்ரது இந்த பேர் தானா? நம்மூர் புத்திய காட்டீங்களே.

  ReplyDelete
 70. இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 71. பெயர் பெற போகும் பெயர் பற்றிய பதிவு
  பெயர் வைக்குரதுல இம்புட்டு இருக்க ....நேற்று நான் போட்ட பதிவு கூட எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு facebook என்று பெயர்வைத்தது ....காலம் எம்புட்டு மாறி போச்சி

  http://qaruppan.blogspot.com/2011/02/facebook.html

  ReplyDelete
 72. நீங்க கூட அந்தமாதிரி ஏதாவது புனைப்பெயர் முயற்சி பண்ணலாமே செளந்தர்...

  ReplyDelete
 73. ///////♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... [Reply to comment]

  குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் இவளவு விஷயம் இருக்கிறது என்பதை இன்றுதான் . அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . இறுதி நகைச்சுவை துணுக்கும் கலக்கல் .
  ///////

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. சங்கர்...

  ReplyDelete
 74. கே. ஆர்.விஜயன் said... [Reply to comment]

  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  ஷக்கீலா'ன்னு அப்போ பேர் வச்சவங்க இப்போ முழிச்சிட்டு இருக்காங்கப்பா....//
  பேர்-னு சொன்னாலே முதல் ஞாபகம் வர்ரது இந்த பேர் தானா? நம்மூர் புத்திய காட்டீங்களே.

  ஏதோ தெரியாம சொல்லிட்டாரு விட்டுங்க..

  ReplyDelete
 75. T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]

  இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..


  சார் எங்க இருக்கிங்க..

  ReplyDelete
 76. FARHAN said... [Reply to comment]

  பெயர் பெற போகும் பெயர் பற்றிய பதிவு
  பெயர் வைக்குரதுல இம்புட்டு இருக்க ....நேற்று நான் போட்ட பதிவு கூட எகிப்தில் ஒருவர் தன் குழந்தைக்கு facebook என்று பெயர்வைத்தது ....காலம் எம்புட்டு மாறி போச்சி

  அதை அப்பவே படிச்சிட்டேன் பாஸ்..

  ReplyDelete
 77. Philosophy Prabhakaran said... [Reply to comment]

  நீங்க கூட அந்தமாதிரி ஏதாவது புனைப்பெயர் முயற்சி பண்ணலாமே செளந்தர்...


  வலைசரத்தில் பிஸியோ..

  ReplyDelete
 78. //எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்//
  அதிரனும்னா "பூகம்பம்"னு வையுங்க.
  வாழ்த்தனும்னா "வாழ்த்து"ன்னு வைச்சிகிடுங்க.இதெல்லாம் பதிவுலகில சகஜமப்பா.

  ReplyDelete
 79. சேக்காளி said... [Reply to comment]

  //எது எப்படியோ நம்பபேர கேட்ட நாலு பேரு அதிரனும்.. இல்லன்னா வாழ்த்தனும்//
  அதிரனும்னா "பூகம்பம்"னு வையுங்க.
  வாழ்த்தனும்னா "வாழ்த்து"ன்னு வைச்சிகிடுங்க.இதெல்லாம் பதிவுலகில சகஜமப்பா.

  நல்லாயிருக்கே உங்க ஐடியா..

  ReplyDelete
 80. உண்மைதாங்க ., பெயர் வைக்கும்போது கண்டிப்பா கொஞ்சம் யோசிக்கணும் .. ஏன்னா அது வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருப்பது .. அருமயான பதிவு.

  ReplyDelete
 81. அப்புறம் நான் கோமாளி அப்படின்னு வச்சுதுக் காரணம் பிரபலம் ஆகணும்னு கிடையாது .. ஆனா என் ப்ளாக் பெற எங்க சொன்னாலும் நாம என்ன எழுதுரோமோ இல்லையோ ஆனா சிரிக்கிறாங்க .. இத நான் நாலஞ்சு தடவ பார்த்திருக்கேன். முதல்ல கொஞ்சம் காமெடியா வைக்கனும்னு வச்சதுதான் .ஆனா எல்லோரும் சிரிக்கும்போது சந்தோசமா இருக்கு .. ஹி ஹி

  ReplyDelete
 82. கோமாளி செல்வா said... [Reply to comment]

  உண்மைதாங்க ., பெயர் வைக்கும்போது கண்டிப்பா கொஞ்சம் யோசிக்கணும் .. ஏன்னா அது வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருப்பது .. அருமயான பதிவு.

  தேங்ஸ்பா..

  ReplyDelete
 83. கோமாளி செல்வா said... [Reply to comment]

  அப்புறம் நான் கோமாளி அப்படின்னு வச்சுதுக் காரணம் பிரபலம் ஆகணும்னு கிடையாது .. ஆனா என் ப்ளாக் பெற எங்க சொன்னாலும் நாம என்ன எழுதுரோமோ இல்லையோ ஆனா சிரிக்கிறாங்க .. இத நான் நாலஞ்சு தடவ பார்த்திருக்கேன். முதல்ல கொஞ்சம் காமெடியா வைக்கனும்னு வச்சதுதான் .ஆனா எல்லோரும் சிரிக்கும்போது சந்தோசமா இருக்கு .. ஹி ஹி


  உண்மையில் புனைப்பெயர் நம்மை அடையாளம் காட்டும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 84. அன்பின் சௌந்தர் - இப்பல்லாம் பேரு வைக்கறது ஸ்டைலா இருக்கு - பிள்ளைகளுக்குப் பிடிக்கற மாதிரி எல்லாம் வைக்கிறாங்க - ம்ம்ம்ம் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...