கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 February, 2011

நிகழ்காலமே நிஜம்...


ன் மாதங்களின் ஆணிவேர்
என்னதான் நிகழ்காலத்தில்
புதைந்து கிடந்தாலும்
என்னின் சிந்தனைச் சிறகுகள்
எதிர் காலத்தையே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது..
 
த்தனையோ என் நிகழ்கால நிமிடங்கள்
கனவு தீயில் கருகிப் போயிருக்கிறது  

இருந்தும்  மீதமுள்ள சாம்பல்களை 
ஓரம் தள்ளி
எதிர்கால சருகுகளுக்காகவே
ஏங்கித்தவிக்கிறேன்...!

நிகழ்காலத்தில் நேரம் நகரும்
நான் நிலைத்துக்கொண்டிருப்பேன்...


 திர் காலம் என்பதில் நேரம் நிலைகொள்ளும்
நான் நகர்ந்துக்‌ கொண்டிருப்பேன்..
 
த்தனையோ முறை சிறகு வெந்தும்
எதிர்கால தீயிலே 
தீக்குளிக்கிறது என் விட்டில் மனம்
 
நான் வடிவமைத்த
நாளைய நிமிடங்கள் 
ஒரு நாளும் ஒத்துப்போனதில்லை 
விடிந்த பிறகு..
 
ருகாலங்களிலுமே 
வசந்தத்தை தேடியே 
வாழ்க்கையை தொலைக்கிறது என் வானம்பாடிகள்...
 
னமே இனியாவது 
உண்மையை உணர்
என்னதான் எதிர்காலத்தில்
மூழ்கிப்போனாலும் 
உன்னை உயிர்பித்துக் கொண்டிருப்பது 
நிகழ்காலமே...


23 comments:

  1. விமர்சனம் போடனுமா? வேண்டாமா?
    ஒழுங்கா எனக்கு ஓட்டு போடு..
    மவனே... நம்ம ஊருதாண்டிதான் போவனும்..

    ReplyDelete
  2. அந்த படத்துக்கும் சோ்த்து கலர் பில் பன்னா நல்லாயிருக்கும்..

    ReplyDelete
  3. உன் காதலிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு
    வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும்
    போலியான புன்னகையை விட ....

    உன் நண்பனுக்கு ஒரு கட்டிங்
    வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும்
    சந்தோஷமே உண்மையான நட்பின் அடையாளம்...!
    மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்....!!!

    ReplyDelete
  4. அட..கலக்கலா இருக்கே கவிதை படம் எல்லாமே சூப்பர்

    ReplyDelete
  5. நான் வடிவமைத்த
    நாளைய நிமிடங்கள்
    ஒரு நாளும் ஒத்துப்போனதில்லை
    விடிந்தப்பிறகு..//

    அருமையான இந்த வரிகள், உண்மையானது மட்டுமல்ல, பலரது வாழ்விலும் நடந்து கொண்டிருப்பது!

    ReplyDelete
  6. @sakthistudycentre-கருன்

    ஓட்டுப்போட சொன்ன போடறேன் அதுக்காக மிரட்டக்கூடாது..

    ReplyDelete
  7. @sakthistudycentre-கருன்
    அதான் நாங்கதான் கவிதை போடறோம் நீங்க கூட இப்படி ஆரம்பிச்சா எப்படி...

    ReplyDelete
  8. @ஆர்.கே.சதீஷ்குமார்

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி..!
    வாருங்கள் தொடருவோம் ...

    ReplyDelete
  9. @மாத்தி யோசி

    சுட்டி கட்டிய வரிகளுக்காக நன்றி

    ReplyDelete
  10. கவிதை சூப்பர்...

    ReplyDelete
  11. //எத்தனையோ முறை சிறகு வெந்தும்
    எதிர்கால தீயிலே
    தீக்குளிக்கிறது என் விட்டில் மனம//

    ஆம் உலகில் எல்லோர் மனமும் விட்டில் மாதிரிதான்

    அருமையான கவிதை..

    ReplyDelete
  12. உங்கள் கவிதை அழகு...இருந்தாலும் நான் சொல்ல விரும்புவது..”நேற்று என்பது திருந்திய பால்..நாளை என்பது மதில் மேல் பூனை..இன்றென்பது கையில் வீணை..”மீட்டு மகிழுங்கள் நண்பரே.

    ReplyDelete
  13. பாஸ் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    என்ன கருண் மிரட்டுறாரு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...