சிறு வயதில் குழந்தைகளை பாதிக்கும் சில சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சம்பவங்களால் அவர்களது மனநிலை எந்தவிதம் பாதிப்படைகிறது என்பதை மைய கருத்தை கொண்டு, ஒரு சிறுவனின் சிறு வயதில் எற்பட்ட பதிப்பு அவனது மனநிலையை எவ்வாறு பாதித்தது. அந்த பாதிப்பால் சமூகத்திற்கு ஏற்படும் இன்னல்கள் என்ன என்பதை ஒரு சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கௌதம் மேனன் மிரட்டலாக சொல்லியிருக்கிற படம் தான் நடுநிசி நாய்கள்...
மும்பையில் அம்மாவையிழந்த 6 வயது சிறுவன் சமர். அவனுடைய தந்தை தன்னுடைய வீட்டில் பல பெண்களுடன் உல்லாச இருந்துக் கொண்டு அதை சிறுவனை பார்க்க வைக்கிறார்.. அவனுக்கு 10 வயது ஆகும் போது.. அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துகிறார். இதனை வெறுத்து பயப்படும் அந்த சிறுவனை பக்கத்து வீட்டு மீனாட்சி என்னும் இளம் பெண் காப்பாற்றி தன்னுடன் தங்க வைத்து வளர்க்கிறார். சமர் வளர வளர அவனது சிறு வயது சம்பவங்கள் அவனை ஒரு மன நோயாளியாக மாற்றி அடைக்கலம் கொடுத்த மீனாட்சியையை காதலிக்கவும் கற்பழிக்கவும் தூண்டுகிறது.. (செல்லமே.. பரத் போல..) இதை உணர்ந்த மீனாட்சி தனது காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து திருமணமும் செய்துக் கொள்கிறார்.. ஆனால் முதலிரவில் அவனை கொன்று அந்த அறையையே கொலுத்தி எரிக்கிறார். அதில் அவன் இறக்க மீனாட்சி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தப்பிக்கிறார்...
அவள் மேல் கொண்ட காதலால் மும்பையிருந்து சென்னை வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். உடல் முழுவதும் தீத்தழும்புகளுடன் ஒரே பங்களாவில் வசிக்கிறார்கள்.. தனக்கு ஒரு துணை தேவை என தீர்மானித்து வீராவாக மாறும் சமர்.. தனக்கு சிறு வயதில் அறிமுகமான சிலபெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தங்குகிறார் ஆனால் இதை மீனாட்சி விரும்பாததால் கொலை செய்கிறார்.. சில பெண்களை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்கிறார்.
தன்னுடன் 10 வகுப்பு பயின்ற சமீரா ரெட்டியை சந்தித்து தன்னுடை காதலை சொல்ல முயலும் போது.. அவர் வெறு ஒருவருடன் காதல் என தெரிய இரவில் திரைப்படம் பார்க்க வரும் அவனையும் கொன்று விட்டு சமீராவிடம் காதலை சொல்லி அதை அவள் ஏற்காத போது கொலை செய்ய முயற்சித்து பின் அவளை கடத்தி தன்னுடை வீட்டில் வைக்கிறார்...
தொடர் சம்பவத்திற்கு பிறகு போலிஸ் கைது செய்யும் விசாரிக்கும் போது அவன் சொல்லும கதை படம் பார்க்கு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது....
படத்தின் நாயகன் வீரா.. முதல் பாதியில் சமராகவும். பிற்பாதியில் வீராவாகவும் வந்து மிரட்டுகிறார். சிறு வயதில் மனதில் ஏற்படும் பாதிப்பு அவனை ஒரு கொலை காரணாக மாற்றுகிறது. தனக்கு அடைக்கலம் கொடுக்கும் மீனாட்சி காதலிப்பதாக சொல்லும் போது அவர் சமராகவும்.. அவரை பரிவோடு பார்க்கும் பேர்து வீராவாகவும் இரு வேறு நடிப்பில் அசத்தியிருக்கிறார் .. நடிகர் வீரா
படத்தில் இறுதிகட்ட காட்சிகள் ஒரே இரவில் படமாக்கப்படடுள்ளது. கடைசி 30 நிமிட காட்சிகள் மழை, போலீஸ் துப்பாக்கி சூடு, நாய்கள் துரத்தல், என மிரட்டலாக இருக்கிறது.. கடைசி காட்சிகளில் நாயகன் தன்னுடைய உடலில் சமர் மற்றும் வீரா என்ற இரு கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருக்கிறார். (கிட்டதட்ட அந்நியன் விக்ரம் இறுதி காட்சி போல்) தீக்காயங்களுடன் இருந்த மீனாட்சி இறந்து விட அவர் இருப்பது போன்று நடந்துக் கொள்ளும் வீரா கடைசி காட்சிகளில் பாராட்டைப் பெறுவார்.. பரபரப்புகளுக்கு மத்தியில் போலீஸ் அவரை பிடித்து..... சம்பவங்களை விவரித்தல் என இறுதி கட்ட காட்சிகளை அமர்களப்படுத்தியிருக்கிறார்.
சமீரா ரெட்டி மாடர்ன் பெண்ணாக வந்து வீராவிடம் மாட்டிக் கொண்டு.. அவரது மிரட்டலையும் அவரோடு சண்டையிட்டுவதும், தன் காதலன் கொள்ளப்பட்டிருப்பதை கண்டு பயப்படும் போதும், தனி அறையில் பூட்டி வைக்கும் போது ஏற்கனவே இரண்டு பேர் அடைக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் போதும்.. நாயுடன் மாட்டிக் கொண்டு நடுங்கும் போதும் பயத்தை கண்களில் வைத்து மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..
பாடல் இல்லை.. பின்னணி இசை பராயில்லை.. இறுதியில் அமர்களப்படுத்தியிருக்கிறார் சிவக்குமார். மனோஜ்ன் ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது... இறுதியில் சமூக சிந்தனையை சொல்லி சபாஷ் வாங்கியிருக்கிறார் இயக்குனர்.. படத்தில் சில காட்சிகள் நெருட வைக்கிறது.. (கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க முடியாது.)
குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து அதில் ஒரு சமுக கருத்தை சொல்லி ஜெயித்திருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.
ஹலோ பாஸ் நீங்க வந்து இப்படி போயிட்டா எப்படி
ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
அப்படியே ஏதாவது ஒரு கவிதை படிச்சிட்டு போங்க..
ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க...
அப்படியே ஏதாவது ஒரு கவிதை படிச்சிட்டு போங்க..
படம் நல்லாயிருக்கோ இல்லியோ உங்க விமர்சனம்தான் டாப் பாஸ்.....
ReplyDeleteஎலேய் அப்போ வடையும் எனக்குதானா ஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteதமிழ் மனம் சப்மிட் பண்ணுங்க...
ReplyDeleteஉங்க விமர்சனத்திற்கும் , சி.பி.எஸ் விமர்சனத்திற்கும் ஆறு வித்தியாசம் இருக்கு...
ReplyDeleteமொத்தத்தில் படம் பார்க்க சொல்றீங்களா? வேணாங்கிறீங்களா?
கவிதை மட்டுமே போடாமல் அவ்வப்போது விமர்சனங்கள் போடுவது உங்கள் வீதியை அழகுபடுத்துகிறது.. தொடரட்டும் உங்கள் பயனம்...
ReplyDeleteபடத்தின் பெயரே பயங்கரமா இருக்கு. கதை அதைவிட பயங்கரமா இருக்கு. எல்லா பதிவர்களின் விமர்சனத்தையும் வாசித்தாலே படம் பார்த்த திருப்தி வந்துடுதே.
ReplyDeleteதமிழ் மனம்வேலை செய்யவில்லை பார்க்கவும்..
ReplyDeleteகௌதம் படம் பார்க்கலாம்னு இருந்தேன். படத்தோட ரிசல்ட் first show முடிந்த உடனே சொல்லிட்டீங்க . நானும் பார்க்கலாம்னு இருக்கேன் தேங்க்ஸ்ண்ணா..
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteபடம் நல்லாயிருக்கோ இல்லியோ உங்க விமர்சனம்தான் டாப் பாஸ்.....
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
எலேய் அப்போ வடையும் எனக்குதானா ஹா ஹா ஹா ஹா....
தங்கள் வருகைகு நன்றி..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteதமிழ் மனம் சப்மிட் பண்ணுங்க...
தமிழ்மணம் சரியா வேலை செய்ய வில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்..
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
ReplyDeleteஎலேய் அப்போ வடையும் எனக்குதானா ஹா ஹா ஹா ஹா....
வடை உங்களுக்கே..
sakthistudycentre-கருன் said... [Reply to comment]
ReplyDeleteஉங்க விமர்சனத்திற்கும் , சி.பி.எஸ் விமர்சனத்திற்கும் ஆறு வித்தியாசம் இருக்கு...
மொத்தத்தில் படம் பார்க்க சொல்றீங்களா? வேணாங்கிறீங்களா?
படத்தில் தியாட்டர்ல பாருங்க பாஸ்..
sulthanonline said... [Reply to comment]
ReplyDeleteகௌதம் படம் பார்க்கலாம்னு இருந்தேன். படத்தோட ரிசல்ட் first show முடிந்த உடனே சொல்லிட்டீங்க . நானும் பார்க்கலாம்னு இருக்கேன் தேங்க்ஸ்ண்ணா..
நன்றிப்பா..
நல்லதொரு விமர்சனம். நன்றி.
ReplyDeleteஅன்புடன் சாதாரணன்.
படம் நல்லா இல்லைன்னு சிலபேரு சொல்றாங்க யாரை நம்புவது ............
ReplyDeleteசுவையான விமர்சனம்..
ReplyDeleteவிமர்சனம் கலக்குதையா
ReplyDeleteநன்றி
கவுதம் படங்களுக்கு நல்ல தரமானவர்கள் தான் முதல் காட்ச்சிக்கு செல்வார்கள் என நினைத்தேன் .நிரூபித்து விட்டீர்கள் இது தான் விமர்சனம் ... :)
ReplyDeleteசில நாதாரி தமிழ்ப்படங்களை வரவேட்ப்பவர்கள் கமெண்ட்ஸ் தாங்க முடியேல்ல :(
பின்னணி இசை பராயில்லை.
ReplyDeleteபடத்தில் பின்னணி இசை கிடையாது. ஒலிச்சேர்ப்பு மட்டுமே...
ரசனை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். உங்களுக்கு படம் பிடிச்சிருக்கு போல.. ம் ம்
ReplyDeleteபாசிட்டிவான விமர்சனம்.
ReplyDeleteபடத்தில் உள்ள பலங்களை நீண்ட பட்டியல் போட்டுவிட்டு,பலவீனத்தை ஒரே வரியில் (குடும்பத்துடன் பார்க்க முடியாது)கூறிய விதம் அருமை நண்பரே!
எனது தளத்தில் இணைந்ததற்கும் மிக நன்றி நண்பரே!
ஏன் பாஸ், உண்மையிலேயே இந்தப் படம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா..
ReplyDeleteநறுக்குன்னு தெளிவா இருக்கு உங்க திரை கண்ணோட்டம்.
ReplyDeleteசாதாரணன் said... [Reply to comment]
ReplyDeleteநல்லதொரு விமர்சனம். நன்றி.
அன்புடன் சாதாரணன்.
thanks
அஞ்சா சிங்கம் said... [Reply to comment]
ReplyDeleteபடம் நல்லா இல்லைன்னு சிலபேரு சொல்றாங்க யாரை நம்புவது ............
கொஞ்சம் அமைதியா உட்கார்ந்து பார்த்துட்டு
சமுக கண்ளோட்டத்தோடு உணர்ந்தால் படம் புரியும்..
பாரத்... பாரதி... said... [Reply to comment]
ReplyDeleteசுவையான விமர்சனம்..
நன்றி பாரதி..
யாழ். நிதர்சனன் said... [Reply to comment]
ReplyDeleteவிமர்சனம் கலக்குதையா
நன்றி
நன்றி நிதர்சனன்..
S.Sudharshan said... [Reply to comment]
ReplyDeleteகவுதம் படங்களுக்கு நல்ல தரமானவர்கள் தான் முதல் காட்ச்சிக்கு செல்வார்கள் என நினைத்தேன் .நிரூபித்து விட்டீர்கள் இது தான் விமர்சனம் ... :)
சில நாதாரி தமிழ்ப்படங்களை வரவேட்ப்பவர்கள் கமெண்ட்ஸ் தாங்க முடியேல்ல :(
நன்றிங்கோ..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteபின்னணி இசை பராயில்லை.
படத்தில் பின்னணி இசை கிடையாது. ஒலிச்சேர்ப்பு மட்டுமே...
நல்லது தலைவா..
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ReplyDeleteரசனை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். உங்களுக்கு படம் பிடிச்சிருக்கு போல.. ம் ம்
என்ன பண்றது கடைசியா ஏதோ ஒரு கருத்து சொல்லி படத்தை முடிச்சிடறாங்க..
அதுக்காவது படத்தை நல்லாயிருக்கு சொல்ல வேண்டியிருக்கு..
TAMIL 007 said... [Reply to comment]
ReplyDeleteபாசிட்டிவான விமர்சனம்.
படத்தில் உள்ள பலங்களை நீண்ட பட்டியல் போட்டுவிட்டு,பலவீனத்தை ஒரே வரியில் (குடும்பத்துடன் பார்க்க முடியாது)கூறிய விதம் அருமை நண்பரே!
எனது தளத்தில் இணைந்ததற்கும் மிக நன்றி நண்பரே!
தங்கள் வருகைக்கும் நன்றி நண்பா..
செங்கோவி said... [Reply to comment]
ReplyDeleteஏன் பாஸ், உண்மையிலேயே இந்தப் படம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா..
கண்டிப்பா நாட்டில் நடக்க கூடிய விஷயம் தாங்க..
பெண் சிசு பாலியல் பலாத்காரம்..
அது மனரீதியாக பாதிக்க செய்யும் என்கிறது படம்
ஆகாயமனிதன்.. said... [Reply to comment]
ReplyDeleteநடு நிசி (இசி) நாய்கள் !
இதுக்கு, இந்தக் கதை தேவலை
http://writervisa.blogspot.com/2011/02/blog-post.html
உங்க கதையும் படிச்சேன் அருமை..
படபிடிப்பு எப்போ..
சி.கருணாகரசு said... [Reply to comment]
ReplyDeleteநறுக்குன்னு தெளிவா இருக்கு உங்க திரை கண்ணோட்டம்.
வாழ்த்துக்கு நன்றி தலைவா..
ok, "movies to avoid" list la serththaachchu!
ReplyDeleteவிமர்சனம் நல்லாயிருக்கு, ஆனா முழு கதையயும் சொல்லிட்டீங்களே பாஸ்
ReplyDeleteChitra said... [Reply to comment]
ReplyDeleteok, "movies to avoid" list la serththaachchu!
நன்றி தோழி..
இரவு வானம் said... [Reply to comment]
ReplyDeleteவிமர்சனம் நல்லாயிருக்கு, ஆனா முழு கதையயும் சொல்லிட்டீங்களே பாஸ்
நான் சொன்னதை விட படத்தில் இன்னும் நல்லாயிருக்கும்..
பொதுவா நான் விமர்சனம் படிப்பதில்லை. அவை கதையை போட்டு உடைத்து விடுவதால். உங்களின் விமர்சனம் கூட மேலோட்டமாகத்தான் படித்தின். படம் நல்ல இருக்கு என்று சொல்லி இருக்கிறீர்கள். பார்க்கலாம். எங்கள் ஊரில் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.
ReplyDeleteவிமர்சனம் அருமை..
ReplyDeleteபாலா said... [Reply to comment]
ReplyDeleteபொதுவா நான் விமர்சனம் படிப்பதில்லை. அவை கதையை போட்டு உடைத்து விடுவதால். உங்களின் விமர்சனம் கூட மேலோட்டமாகத்தான் படித்தின். படம் நல்ல இருக்கு என்று சொல்லி இருக்கிறீர்கள். பார்க்கலாம். எங்கள் ஊரில் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.
நன்றி பாலா..
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
ReplyDeleteவிமர்சனம் அருமை..
நன்றி பாட்டு ரசிகன்..
பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது..குடும்பத்துடன் பார்க்க முடியாது)கூறிய விதம் good.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
ReplyDeleteபிரம்மிப்பில் ஆழ்த்துகிறது..குடும்பத்துடன் பார்க்க முடியாது)கூறிய விதம் good.
உண்மை..