கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 July, 2011

பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்! அதிர்ச்சி தகவல்...


தூக்கம் என்பது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் ஓடிக் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!. அதுபோலத்தான் தூக்கமும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்கள்

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதயக் கோளாறு

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நான் தட்ஸ் தமிழில் வாசித்தேன் அதை தங்களோடு: பகிர்ந்துக் கொள்கிறேன்.

43 comments:

 1. தூக்கம் கூட கொல்லும்...

  நல்ல பயனுள்ள செய்தி

  ReplyDelete
 2. தகுந்த அளவு சாப்பிடவேண்டும் .........தகுந்த அளவு தூங்கவேண்டும் .....

  ReplyDelete
 3. தூங்கனாலும் திட்றீங்க, சீரியல் பார்த்தாலும் திட்றீங்க பாவம்யா அவுங்க என்ன பண்ணுவாங்க ஹி ஹி

  ReplyDelete
 4. //50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.//

  அப்ப 50 வயசுக்கு கீழ இருக்கறவங்க நிறைய நேரம் தூங்கலாமா #டவுட்டு

  ReplyDelete
 5. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. தூக்கத்தைல் கூட இவ்வளவு பிரச்சினையா/

  ReplyDelete
 7. ////////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  தூக்கம் கூட கொல்லும்...

  நல்ல பயனுள்ள செய்தி
  ///////////

  வாங்க ரமேஷ்...

  ReplyDelete
 8. //////
  koodal bala said...

  தகுந்த அளவு சாப்பிடவேண்டும் .........தகுந்த அளவு தூங்கவேண்டும் .....//////

  அளவுக்கு மீறாமல் இருந்தால் அத்தனையும் அழகுதான்...

  ReplyDelete
 9. //////
  சசிகுமார் said...

  தூங்கனாலும் திட்றீங்க, சீரியல் பார்த்தாலும் திட்றீங்க பாவம்யா அவுங்க என்ன பண்ணுவாங்க ஹி ஹி/////

  அது அப்படித்தாங்க..
  எதுவும் செய்யாம இருந்தாலும் திட்டுவோம்..

  ReplyDelete
 10. பெண்களைத் தூங்க விட மாட்டீங்களே,பாவம்!

  ReplyDelete
 11. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 12. அருமையான கருத்து நண்பரே

  மயில் தொகையே ஆனாலும் அளவுக்கு மீறி ஏற்றினால்
  வண்டியின் அச்சு முறியும் என்ற வள்ளுவன் வாக்குப்படி

  மிகினும் குறையினும் பாதிப்பே எதிலும்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  thulithuliyaai.blogspot.com

  ReplyDelete
 13. பகல்ல தூக்குறதே பொழப்பு

  ReplyDelete
 14. பலரின் தூக்கத்தை கெடுத்த , தடுத்த பதிவு
  நல்ல பயனுள்ள பகிர்வு நண்பரே ...........
  நன்றி

  ReplyDelete
 15. பயனுள்ள தகவல்,

  ReplyDelete
 16. பயனுள்ள தகவல். . .

  ReplyDelete
 17. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்
  எனபதற்கு சரியான உதாரணம்.
  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 18. ///////
  மதுரன் said... [Reply to comment]

  தூக்கத்தைல் கூட இவ்வளவு பிரச்சினையா/
  ///////


  உலகத்தில் இருக்கும் அத்தனையும் பிரச்சனைக்குரிய விஷயம்தான்...

  ReplyDelete
 19. thoongu moonchi pengale iniyaavathu pin thoongi mun eluveer ,,,,,ha ha ha

  ReplyDelete
 20. நல்ல தகவல் நண்பரே

  ReplyDelete
 21. நல்ல பதிவு........

  ReplyDelete
 22. நல்ல பதிவு இப்போது எல்லாம் எங்கள் தூக்கம் களவாடப்பட்டுவிட்டது நண்பா!

  ReplyDelete
 23. அருமையான நல்லதொரு தகவல்.
  ஆனா யார்க்கிட்டயும் சொல்லாதீங்க
  இந்த பதிவு போடுற நோய் வந்ததில இருந்து நான் இரண்டுமணிநேரம் தூங்குவதும் அரிது....ஹி ...ஹி...ஹி...
  நன்றி சகோ பகிர்வுக்கு.

  ReplyDelete
 24. நல்ல பயனுள்ள தகவல் சகோ

  ReplyDelete
 25. பகிர்வுக்கு நன்றி. அதென்ன தூங்கினா பெண்களுக்கு மட்டும் நோய் வரும்? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை என்று யாராவது கொடிய தூக்கிட்டு வந்துட போறாங்க... ஏதோ நம்மால முடிஞ்சது.

  ReplyDelete
 26. இதை மைக் போட்டு சொல்லணும். அப்ப தான் இந்த பொண்ணுங்க திருந்துவாங்க.

  ReplyDelete
 27. அளவற்ற தூக்கம் ஆயுளை கொல்லும் என்பதை உங்கள் பதிவில் உணர்ந்தேன்

  ReplyDelete
 28. அளவான தூக்கம் போதுமானதே. அதிக தூக்கம் துக்கத்தில் முடியும் என்று சொல்லூங்கள்

  ReplyDelete
 29. நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
  என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

  ReplyDelete
 30. நல்ல பகிர்வு, பெண்களுக்கு இயல்பாவே ஆண்களை விட தூக்கம் குறைவுதான்...

  ReplyDelete
 31. நல்லதொரு தகவல்!

  ReplyDelete
 32. நல்ல பதிவுதான்.பெண்களை தூங்கவும் விட மாட்டீங்க,உங்களுக்கு வேண்டிய நேரங்களில். எழிலன்

  ReplyDelete
 33. உடல் நலங்காண இது போன்ற
  கட்டுரைகள் தேவை இவ்வாறு
  வெளியிடுவது நல்லதொரு சமூக
  சேவை என்றே நான் கருதுகிறேன்
  மேலும் தொடர விரும்புகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. உங்கள் பதிவிற்கு நன்றிகள்..
  வாழ்த்துக்கள் உங்கள் அக்கறைக்கு,,,


  !!!ஆகா இனி நித்திரையே கொள்ள மாடேன்,,hahahaha

  ReplyDelete
 35. இதைத்தானோ நம் பெரியவர்கள் பெண்கள் பின் தூங்கி முன் எழுவது நல்லது என்றார்கள் !

  ReplyDelete
 36. தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை இனி ததூங்காதே பாப்பா தூங்காதேன்னு பாட வேண்டியதுதான்

  ReplyDelete
 37. வணக்கம் பாஸ், தூக்கம் பற்றி நாம் படித்து, உணர்ந்து விழிப்படைய வேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள் அடங்கிய பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...