கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 October, 2011

மகனாய் இருக்க வெட்கப்படுகிறேன் நான்....


சிந்தனை சிதறல்கள் சிதறியடிக்க
இரவுத்தூக்கம் கனாவாய் போனது...

காலை உணவில் கால்பாகம் தான்...
செய்தித்ததாளில் தலைப்பு செய்திகளோடு சரி...
அயர்ன் செய்யாத சட்டை....
காலுறை மறந்த காலணி சகீதம்...
பேருந்து நிலையம் வந்து நின்றேன்

காலை நேரம்கழித்து எழுந்ததால்
காலைக்கடன்... அலுவலகம்... என
அத்தனைக்கும் தாமதமாகிக் கொண்டிருந்தது...

தாமதமாக வந்த பேருந்து பிடித்து
எப்படியோ போய் சேர்ந்தேன்...

லுவலகம் முடிந்து வீடு திரும்பி
சாப்பிடும்போதுதான் ஞாபகம் வந்தது
காலையில் அம்மா வாங்கி வரச்சொன்ன
மருந்தை வாங்காமல் வந்தது...

மீண்டும் அவசரகதியில் பயணம்
மருந்து வாங்க...

தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
தற்போது...
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!


31 comments:

 1. திட்டமிடலின் அவசியம் உணர்த்தியமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அதான் பிளான் பண்ணி பண்ணனும்னு சொன்னது.

  ReplyDelete
 3. தாயின் தேவைகளைக்கூட
  தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
  தற்போது...
  வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!


  தகிக்கும் உணர்வுகள்!

  ReplyDelete
 4. ஞாபக மறதியின் நிஜத்தை உணர்த்துகிறது நண்பரே..

  நன்றி நல்லதோர் பதிவிற்க்கு..

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 5. தாய் தானே என்பதால் தாமதப்படுத்துகிறோம்.

  ReplyDelete
 6. சிந்தனைச் சிதறலே அனைத்திற்கும் காரணம்
  என்பதற்காக அதனை முதலில் சொல்லி
  அதனால் தினசரிக் கடமைகளும் முறை தவறுதலும்
  இறுதியாக முக்கியமாக தாய்க்கான கடமை கூட
  மறந்து போகிறது எனச் சொல்லிப் போவது அருமை
  தலைப்பு மட்டும் முதல் கோணல் என்பது மாதிரி
  இருந்திருந்தால் இந்தக் கவிதையின் ஆழந்த பொருளை
  அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்திருக்கும்
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சிந்தனைச் சிதறல்தான் அனைத்திற்கும்
  மூல காரணம் என உணர்த்தும்படியாக முதலில்
  அதைச்சொல்லி அதன் தொடர்ச்சியாய்
  உடல் அளவில் மனத்தளவில் உண்டாகிற
  இடர்பாடுகளைச் சொல்லி முடிவாக மிக மிக
  முக்கியமான கடமை கூட மறக்கச் செய்வது
  கவனச் சிதறலால்தான் என மிக அழகாகச்
  சொல்லிப் போகிறீர்கள்
  தலைப்பு மட்டும் முதல் கோணல் என்பதுமாதிரி
  ஒரு பொதுவான தலைப்பாக இருந்தால்
  அனைவரும் இதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அவசர கதியில்
  உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது உண்மை,
  நல்ல பகிர்வு நண்பரே!

  ReplyDelete
 9. எல்லொரையும் போல் (என்னையும் சேர்த்து) காந்தி ஜெயந்தி கவிதை எழுதிருப்பீங்கன்னு வந்தா.. கலக்கீட்டிங்க‌.. நுண்ணுண‌ர்வுக‌ளை ந‌ய‌மா சொல்றீங்க‌ அருமை !

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு தல !!!

  ReplyDelete
 11. அவசர கதியில்
  உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது உண்மை,
  நல்ல பகிர்வு நண்பரே!

  ReplyDelete
 12. உறவுகளை நினைவுபடுத்தும் அருமையான பதிவு...

  ReplyDelete
 13. முதியோர் தின சிறப்பு இடுயைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் நண்பா..

  http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 14. தமிழ்மணத்தின தரவரிசையில் 5வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...

  http://tamilmanam.net/top/blogs/1

  ReplyDelete
 15. //////
  முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]

  தமிழ்மணத்தின தரவரிசையில் 5 வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...

  //////

  தகவலுக்கு நன்றி நண்பரே....

  ReplyDelete
 16. அதான் சொல்றது எதையும் ப்ளான் பன்னி பன்னனும்னு

  ReplyDelete
 17. அவசர உலகத்தில் நாம் நம்மையே மறந்துதான் விடுகிரோம்.

  ReplyDelete
 18. அவசர உலகில்/வாழ்வில் நாம் உறவுகளை கவனிக்க மறந்துவிடுகிறோம்... யதார்த்தத்தை மிக அழகாக கவிதையாக்கிவிட்டீர்கள்... நன்றி..

  தமிழ்10- 13. இண்ட்லி-6

  ReplyDelete
 19. தாயின் தேவைகளைக்கூட
  தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
  தற்போது...
  வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!

  தாயின்மீது கொண்ட அன்பை வெளிக்காட்டும் அழகிய கவிதை வரிகள் .இத் தவறை அனைத்து
  உறவுகளும் புரிந்துகொள்ள எடுத்துக்காட்டாய் உங்கள் கவிதைவரிகள் அமையட்டும் வாழ்த்துக்கள் இனி என்ன ....தயவு செய்து சிரியுங்க சகோ........

  ReplyDelete
 20. உறவுகளின் உன்னதம் உணர்த்தும்
  அருமையான படைப்பு,
  தெறித்து ஓடும் மணித்துளிகளில் நாம் இழந்துகொண்டிருக்கும்
  உறவுகளை அழகாய் புனைந்திருக்கிறீர்கள் நண்பரே.
  அருமை.

  ReplyDelete
 21. அருமையான கவிதை...

  உண்மையில் காலையில் எழுந்திருப்பது...அன்றையை நாளை சுறுசுறுப்பாக மாற்றும்...
  உற்சாகத்தையும் கொடுக்கும் என்பது பொய்யல்ல...

  ReplyDelete
 22. //தாயின் தேவைகளைக்கூட
  தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
  தற்போது...
  வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்//!

  அருமையான கவிதை...

  என்னப்பத்தி எழுதின மாதிரியே இருக்கு...
  ஒருமுறை இரண்டு முறை அல்ல...நிறைய முறை இப்படி நடந்திருக்கிறது....

  ReplyDelete
 23. // தாயின் தேவைகளைக்கூட
  தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
  தற்போது...
  வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்//

  இவர்கள் தான் நல்ல மகன்கள்!
  வாழ்க!
  சரி, இங்கே ஒரு தந்தையின் வீதி

  வழி பலநாள் வாராதிருப்பது நீதியா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. @தாயின் தேவைகளைக்கூட
  தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
  தற்போது...
  வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!////

  பலபேர் இப்ப இப்படித்தான் பாஸ் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்

  ReplyDelete
 25. நம் மறதியையும் மன்னிக்கும் தாயுள்ளம் இருக்கிறது!
  இது மனையிடம் பழிக்குமா?
  மறதிதான் வருமோ!

  ReplyDelete
 26. தாய்க்கு மனம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவதால் வரும் விளைவு..... மனைவிடம் இப்படி நடக்குமா?

  ReplyDelete
 27. அருமை பாராட்டுக்கள்

  தாங்களின் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்கவிடலாமே... தமிழ்த்தோட்டம் போட்டியிலும் கலந்துக்கொள்ளுங்களேன் நண்பரே

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 28. நல்லதோர் கவிதை, அன்னையின் உணர்வுகளை எம அவசர நிலையில் புறக்கணித்து விட்டுப் பின்னர் ஆற மர யோசிக்கும் போது தான் அவரின் அன்பின் மகத்துவம் எம் மனதில் ஆற்ற முடியாத வலியினைத் தரும் என்பதனை உரைத்து நிற்கிறது இக் கவிதை

  ReplyDelete
 29. துரித கதியில் இயங்கும் அவசர வாழ்வில் தெரிந்தே மறுக்கப்படுகின்றன சில அத்தியாவசியத் தேவைகள். காலதாமதத்தால் மறக்கப்படுகின்றன சில அவசரத் தேவைகள். அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உறவுகளைப் பேணவிரும்பும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...