கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 November, 2011

குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?

ஒரு குறிப்பிட்ட அமைச்சரைக் கூப்பிட்டு அச்சமயம் அங்கு அழைக்கப்பட்டிருந்த தொழில் நிபுணர்களிடம் தொழில் நுணுக்கம் பற்றிய சில விவரங்களை எடுத்துச் சொல்லச் சொன்னார் சர்ச்சில்.

அந்த அமைச்சரும் வழவழ-கொழ கொழவென்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். சர்ச்சிலுக்கு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

அமைச்சர் பேச்சை முடித்தவுடனே சர்ச்சில் அவரைப் பார்த்து அரசியலின் அடிப்படை விதியை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

அமைச்சர், சர்ச்சில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் விழித்தார்.

நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? என்று கேட்டார் சர்ச்சில்.

புரிய வில்லை என்றார் அமைச்சர்..

நீங்கள் விளக்கவந்த விஷயம் உங்களுக்கே புரியாவிட்டாலும், எவ்வளவு குழப்பமாக அதை எடுத்துக் சொல்ல முடியுமோ அப்படி  எடுத்துச் சொல்வது தான் ஓர் அரசியல்வாதியின் இலட்சணம் என்று சொன்னார் சர்ச்சில்.


விஜயகாந்த் அவர்களுக்கு முழுமையான அரசியல் தெரியாது என்று தமிழகமக்களும் நன்று அறிவார். ஆனால் குறைந்தபட்ச தகுதியான, ஏதாவது அறிக்கைகள், தேரியாவிட்டாலும் பேசிக்குழப்பக்கூடிய வேலையாவது செய்யலாம். அதற்குகூட வாய்திறக்காமல் மௌனம் காத்துக்கொண்டு அம்மாவின் உண்மை விசுவாசி என்று நிறுபித்துவிட்டார்.

தற்போதுதான் ஞானம் வந்ததுபோல்  பஸ் கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு நான் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்திடம், ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்று கேட்டதற்க்கு உடல்நிலை சரியில்லைஎன்று பதில் அளித்துள்ளார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் என்பதை அடிக்கடி ஞாபகம் படுத்த வேண்டும் போல.

இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

28 comments:

 1. உண்ணாவிரதம் இருந்தால் குண்டாசில் உள்ளே தூக்கி வச்சிருவாங்களே ஹி ஹி அப்புறம் ஓல்ட்மங் ரம் எப்பிடி குடிப்பாராம்...?

  ReplyDelete
 2. என்னே அரசியலோ போய்யா....

  ReplyDelete
 3. யாரப்பா அது எங்க கேப்டனை பற்றி தப்பா பேசரது? அண்னன் மப்புல இருக்காரு, அதனால தப்பிச்சீங்க. ஹி ஹி

  ReplyDelete
 4. சர்ச்சில் கதை சூப்பர் மாப்ஸ்

  ReplyDelete
 5. //சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  யாரப்பா அது எங்க கேப்டனை பற்றி தப்பா பேசரது? அண்னன் மப்புல இருக்காரு, அதனால தப்பிச்சீங்க. ஹி ஹி//

  அப்பா நாங்க எப்பவுமே தப்பிசிக்கிட்டே கிட்டேன் தான் இருப்போம்... கேப்டன் எப்பவுமே மிதந்து கிட்டு தானே இருப்பார்...

  ReplyDelete
 6. மாற்றம் ஏற்படுத்துமா?
  இதென்ன கம்பெனில புதுசா இருக்கு?

  :)

  ReplyDelete
 7. உண்ணாவிரதம் என்பதே மிக லேட்டாக வந்த அலார்ட்தான். அதனால் எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.

  ReplyDelete
 8. கேப்டனுக்கு இந்த மாற்றம் போதாது இன்னும் நிறைய மாறவேன்டும்!

  ReplyDelete
 9. கேப்டன் இது தானா உங்க டக்கு?

  ReplyDelete
 10. //இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.//

  எந்த மாற்றமும் வராது.

  ReplyDelete
 11. அவர் காமடி பீசாகி நெடு நாட்களாகி விட்டது

  ReplyDelete
 12. /////////
  வெளங்காதவன் said... [Reply to comment]

  மாற்றம் ஏற்படுத்துமா?
  இதென்ன கம்பெனில புதுசா இருக்கு?

  :)

  //////////////


  வாங்க நண்பரே...

  ஏன் என்று தெரியவில்லை தாங்கள் கருத்து மட்டும் எப்போதும் Spam க்கு சென்று விடுகிறது...

  பார்த்து Publish கொடுத்தால் தான் இணைகிறது..

  ReplyDelete
 13. இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்................/////////////////
  /////////////////////////////////////////

  அட போங்கப்பா இவரு பெரிய புளியங்கொட்டை ...மாற்றத்தை ஏற்ப்படுத்த ..அம்மா எலைட் பாரே இவருக்காக தான் திறக்குறாங்க .இதுல சட்டசபைக்கு வேற வரணுமாம் .............உங்களுக்கு ரொம்பதான் பேராசை ...............

  ReplyDelete
 14. குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?//

  அதை எதிப்பார்ப்பது
  எதிபார்ப்பவ்ரின் தவறல்லவா!!???

  ReplyDelete
 15. எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகிட்டாரே

  ReplyDelete
 16. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 17. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 18. வேறு ஏதாவது பண்ணி வைச்சுட போறார் ...
  பாவம்ங்க சத்தியமா அவர் இல்லை நம்பிய மக்களும் தொண்டர்களும்...தான் ...
  நல்லாத்தான் பேசுறாரு ஆனா ஒண்ணுமே புரியமாட்டேங்குது...
  இவரும் ஒரு எதிர்கட்சி தலைவர் ...

  ReplyDelete
 19. வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 20. ஓ... உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் தினமும் மருந்து சாப்பிடுறாரா? ரைட்டு.


  நம்ம தளத்தில்:
  ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்

  ReplyDelete
 21. த.ம.9
  என்னத்த உண்ணா என்னத்த விரதம்!

  ReplyDelete
 22. விஜயகாந்த் பக்கா அரசியல்வாதியா மாறிட்டார் போல வேறென்ன சொல்ல.

  ReplyDelete
 23. கேப்டன் காமெடி பண்றாரு..

  ReplyDelete
 24. இவர் என்ன ஸ்டன்ட் பண்ணாலும், இனி மேல் மக்கள் இவரை நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை.

  ReplyDelete
 25. இது என்ன உண்ணா விரதமா - குடிக்கா விரதமா

  ReplyDelete
 26. சர்ச்சில் கதை டாப்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...