கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 September, 2013

போதைப்பழக்கம் உடையவரா நீங்கள்..? இது உங்களுக்குத்தான்...தினம்தினம் மதுவின் மயக்கத்தில்
தன்னையே மறந்துப்போனவனே...!

உன் வாலிபம் மரித்துக்கிடப்பது
இந்த மதுக் கோப்பையிலா..!

வேர்பிடித்து அரும்பும் போதே
அறுந்து விடுவதா வாழ்க்கை...

உன் வசந்தத்தின் துவக்க சங்கமம்
வீதியில் கிடக்கும் பலி பீடத்திலா...

எல்லா எதிர்காலமும் எரிந்து போகும் 
முறையற்ற உன் தடுமாற்றத்தில்...

வாழ்க்கையென்ற வாலிபப் பூங்காவில்
நீ பிணங்களோடு பிணங்களா...

உனக்கு மகிழ்ச்சியும் துக்கமும்
ஏன் போதையின் போதனையில்..?

நம்பிக்கையென்ற நாளைய பொழுதின் 
முளைவிடும் இளைய நாற்றே...!

போதையின் சுமையினை 
கொஞ்சம் நிறுத்திவை
நம்பிக்கையின் துடுப்பை பழக்கப்படுத்து
உன் நெடுந்தூர பயணத்திற்கு...

உன் வைகறையை
பூபாளத்தோடு பூக்கவிடு...

அன்று உன் காலடியில் 
காலம் பணியும்...

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

12 comments:

 1. குடி, சிகரெட் போதையெல்லாம் கூட பரவாயில்ல போல!! இந்த இணைய போடைக்கு ஒப்பிடும்போது!!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றதும் சரிதாங்க...

   Delete
 2. தானாக திருந்தினால் தான் உண்டு...

  ReplyDelete
 3. நல்ல பதிவு!

  (தமிழ்மொழி.வலை)
  http://www.thamizhmozhi.net

  ReplyDelete
 4. bchandru2012 kali2013 jojosurya2011 rajiv2020 jaya100 patturasigan saravanan0313@gmail.com bchandru4444@gmail.com oli2013 rasipandi@gmail.com

  // ராஜி said : September 30, 2013 at 10:16 AM
  குடி, சிகரெட் போதையெல்லாம் கூட பரவாயில்ல போல!! இந்த இணைய போடைக்கு ஒப்பிடும்போது!! ///

  மேலே உள்ள போதைக்கு...? /// நீங்க சொல்றதும் சரிதாங்க.../// உண்மை...

  சகோதரி ராஜி சொன்னது உங்களைப் பொருத்தவரை 100% உண்மை... (thooyaraji, kkarun09, dindiguldhanabalan, soundar76rasi@gmail.com இதை தவிர ) அசிங்கம்...!!! ஏனிந்த அல்பத்தனம்... மாறுவீர்களா...? புரிந்து கொண்டால் சரி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே மத்த ஓட்டுகளும் யாருதுன்னு கண்டுபிடிச்சி சொல்லிடுங்கன்னே...

   பாவிபசங்க இப்படி ஓட்டைப்போட்டு
   எனக்கு பழிச்சொல்லையும் இழிச்சொல்லையும் வாங்கிக்கொடுத்துட்டாங்க...

   Delete
  2. அது சரி 5 அல்லது 6 ஓட்டு உங்களுக்கு அறிமுகமில்லாத ஓட்டு விழுந்த உடனே அசிங்கம் அல்பத்தனம் அப்படின்னா....

   சிலபேர் 20, 30 ஓட்டு போட்டுக்கிறாங்களே அங்க போயி அண்ணன் இப்பிடி பொங்கினமாதிரி தெரியல....

   ஒருவேளை அவங்கிட்ட பயமா...?

   Delete
  3. // சிலபேர் 20, 30 ஓட்டு போட்டுக்கிறாங்களே //

   உங்கள் மீது ஒரு மரியாதை இருந்தது... அடுத்தவங்களை பார்க்கிற ஆளா நீங்க... அப்போ சரி.. ///

   Delete
 5. ஏய்.. யாருப்பா அது எனக்கு தெரியாமல் ஓட்டு போட்டது...
  அண்ணன் கோச்சிக்கிறாருள்ள...

  ReplyDelete
  Replies
  1. /// எனக்கு தெரியாமல் ஓட்டு போட்டது ///

   என்னது... இந்த ஜில்பான்சு வேலை எல்லாம் பல பார்த்தாச்சி... வேண்டாம்... நீங்கள் என் தளம் உட்பட பல தளங்களில் இட்ட கருத்துரை வைத்தே சொல்லட்டுமா...? Once Again... புரிந்து கொண்டால் சரி...

   Delete
 6. ஒருநாள் அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...