ரஜினிக்கு பாராட்டு 
 
                            சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு  இந்திப்படமாக உருவாகிறது. அது சம்பந்தமாக சில்க் நடித்த படக்காட்சிகளை  நஸ்ருதீன் ஷாவுக்கு போட்டுக் காட்டினார்கள். 
ரஜினியுடன் சில்க் ஆடிய நடனக்  காட்சிகள் அந்த கலெக்ஷனில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. ரஜினியின் அசைவுகளை  உன்னிப்பாக கவனித்த நஸ்ருதீன்ஷா கைதட்டி உற்சாகமானாராம். ‘நான் இதுவரை  ரஜினி படங்களைப் பார்க்கவில்லை. எனக்காக ‘ரோபோ’ படம் பார்க்க ஏற்பாடு  செய்யுங்கள் அவரது நடிப்பு எனக்கு உதவி கரமாக இருக்கும்’ என்று சொன்னதோடு,  ரஜினியைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினாராம். 
 ***********************************************************************************
மீண்டும் இயக்கம் : ரேவதி
  
‘மித்ர மை ஃப்ரண்ட்’ படத்தை இயக்கிய ரேவதி, மீண்டும் டைரக்ஷன் களத்தில்  குதிக்க தயாராகிவிட்டார். முழு ஸ்க்ரிப்ட்டையும் முடித்து விட்ட அவர்,  அந்தப் படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அடித்தட்டு மக்களின்  வாழ்க்கையைப் பிரதிபலிப்பதே கதை. மேலும் படத்தில் பணிப்புரிய தொழில்நுட்ப  கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார் ரேவதி.  
 ***********************************************************************************
 கிரிக்கெட்டால் சினிமா பாதிப்பு
கிரிக்கெட் திருவிழா தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், தமிழ் திரையுலகம்  கதி கலங்கியுள்ளது. லீக் ஆட்டம் நடக்கும் போது திரையரங்குகள் காற்று வாங்க  ஆரம்பித்துவிட்டன. இனி வரவிருக்கும் கால் இறுதி  மற்றும் அரை இறுதி  ஆட்டத்திற்குள் என்ன நடக்குமோ என அதிர்ச்சியில் திரையுலகம் மிதந்து  வருகிறது. 
தற்போது வெளி வந்திருக்கும் படங்களான, பயணம், யுத்தம் செய்  போன்றவற்றுக்குக் கூட பகல் காட்சிக்கு 50 பேர் வருவதே அதிசயமாகிவிட்டதாம்.  குறிப்பாக பகலிரவு ஆட்டம் என்றால் திரையரங்கு எல்லாம் காத்து  வாங்குகிறதாம். இந்த நிலையை எதிர்ப்பார்த்தே, 7 முக்கியப் படங்களின் ரிலீஸ்  தேதி ஏப்ரல் 8-க்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி உலகக்  கோப்பைப் போட்டிகள் முடிவடைகின்றன. பாலாவின் அவன் இவன் கூட உலகக் கோப்பை  இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்படுகிறது.                              
***********************************************************************************
படப் பெயர் குழப்பத்தில் விஜய்..!
 
 
இப்போது கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்,   விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் படம். இந்த படத்திற்கு   "தெய்வமகன்" என்று பெயர் வைத்தனர், சில காரணத்தால் அந்த பெயர்   நீக்கப்பட்டுவிட்டது. அதன் பின் "பிதா" என்றனர், அதற்க்கு 
இயக்குனர் விஜய்  கூறும் பதில், இன்னும் பெயர் முடிவு செய்யப்படவில்லை  என்கிறார். விரைவில்  படத்தின் தலைப்பு வெளியாகும் என்று கூறும் விஜய்,  இந்த படத்தின் பதிவு  இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது, மேலும்  இப்படத்தின் ஒளிப்பதிவாளர்  நிரவ் ஷாவும் , ஜி . வி. பிரகாஷும் படத்திற்கு  பக்க பலம்  அதுமட்டுமின்றி  சந்தானம் அவர் திறமையை சற்றும் குறையாமல்  வெளிப்படுத்தி இருக்கிறார்,  என்றார் விஜய்.
***********************************************************************************
பாலிவுட்டுக்கு செல்கிறார் பாலா
 
 
தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அவன் இவன் ஷூட்டிங் படுவேகமாக  நடந்து வருகிறது. அவன் இவனில் விஷால், ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயின் ஜனனி  ஐயர். விஷால் இந்தப் படத்தில் திருநங்கையாக நடிக்கிறார். அவன் இவனுக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 
இந்நிலையில் இந்த படத்துக்கு இந்தியில்  படம் பண்ண பாலா திட்டமிட்டுள்ளாராம். பாலா தற்போது இந்தி படித்து  வருகிறார். இந்தியில் படிக்க, எழுத, பேச எப்போது முடிகிறதோ அப்போது இந்திப்  படத்தை எடுப்பேன் என தெரிவித்துள்ளா 
***********************************************************************************  
ரீ-மிக்ஸ் கண்டிப்பாக கிடையாது
 
 
மிஷ்கினின்  முதலிரண்டுப் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது சுந்தர்  சி.பாபுவின் இசை என்றால் மிகையில்லை. தூங்கா நகரமும் அவர் புகழ் சொல்லும்.
கோடம்பாக்கத்தின்  பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்த பிறகும் தனக்கென சில  கொள்கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் இவர். அதில்  முக்கியமானது வேறொருவரின் பாடலை ரீமிக்ஸ் செய்ய மாட்டேன்.
ரீமிக்ஸ்  இல்லையென்றால் படமே இல்லை என்ற நிலையில்தான் தமிழ் திரையுலகம் உள்ளது.  மங்காத்தா முதல் பாலாவின் அவன் இவன் வரை எல்லாப் படங்களிலும் ரீமிக்ஸ்  பாடல் உள்ளது. ஆனாலும் சுந்தர் சி.பாபுக்கு மட்டும் இது அலர்ஜி.
என்னால்  சிறப்பான டியூன்கள் போட முடியும் எனும்போது அடுத்தவர்களின் டியூனை நான்  ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது இவரது கேள்வி. இதுவரை இருந்தது போலவே  இனியும் நோ ரீமிக்ஸ் என்றுதான் திரையில் தொடரப் போகிறாராம். கீப் இட் அப்.  
***********************************************************************************  
எனக்கு பிடித்த நாட்கள்
69 பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனம்  தயாரிக்கும் புதியபடம் “எனக்கு பிடித்த நாட்கள்”. இப்படத்துக்கு கே.  பன்னீர்ச்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 
 இவர்  ஏற்கனவே தொ(ல்)லைபேசி படத்தை டைரக்டு செய்தவர். நாயகனாக நியூயார்க் பிலிம்  அகாடமியில் நடிப்பி பயிற்சி பெற்ற கேஸ்ட்ரோ நடிக்கிறார். நாயகியாக ஜெயதி  நடிக்கிறார். 
மகேஷ்வர், ஜான்ஸன், சிவதாஸ், கிளாமர்  மாலி ஆகியோரும் அறிமுகமாகின்றனர். மேலும் நான்கு புதுமுக நாயகர்களுக்கான  தேர்வு நடக்கிறது. காலேஜ் முடித்து வெளியில் வரும் நண்பர்கள் சில நாட்களை  சந்தோஷமாக கழிக்க ஊர் சுற்றுகின்றனர். 
அவர்கள்  மத்தியில் நாயகி குறுக்கிட்டு வில்லத்தனம் செய்கிறார். இதனால் ஒவ் வொரு  நாளும் பிடிக்காத நாட்களாகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது  கதை. 
ஒளிப்பதிவு: சீனு ஆதித்யா, இசை: ஜி.எஸ்.  ஷாந்தன், எடிட்டிங்: மகாவிஷ்ணு, பாடல்: நா. முத்துக்குமார், அண்ணாமலை,  நந்தலாலா நடனம்: எஸ்.எல். பாலாஜி, சதீஷ், சண்டைப்பயிற்சி: பவர் பாஸ்ட்,  தயாரிப்பு: எஸ். சிவம், எச். லியாகத், தயாரிப்பு நிர்வாகம்: பாலா. 
***********************************************************************************  
ரஜினிக்கு தங்கை வேடம் வேண்டாம்ராணா படத்தில் ரஜினிக்கு தங்கை வேடம் என்பதால் நடிக்காமல் விட்டுவிட்டேன் என நடிகை மாதுரி தீக்ஷித் கூறியுள்ளார்.
பாலிவுட்டின்  கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். திருமணத்துக்கு பிறகு  சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்ட அவர், தற்போது தனக்குப்  பிடித்தமான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு வந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. 
இதுகுறித்து  டுவிட்டர் இணைய தளத்தில் மாதுரி தீட்சித் கூறியதாவது: ராணா படத்தில்  ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அது அவருடைய  தங்கை வேடம். அந்த வேடம் எனக்கு ஏற்றதாக இல்லாததால் மறுத்து விட்டேன்.
ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். ஆனால் சரியான வேடத்துக்காக காத்திருக்கிறேன் என்றார் அவர். 
***********************************************************************************  
இசை அமைப்பாளர்கள் சங்க பொன்விழா 
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் 5-ம்  தேதி நடக்கிறது. இதுபற்றி இச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர்  சங்கரன், பொருளாளர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திரைப்பட இசைக்  கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ம் தேதி காலை தொடங்கி  இரவுவரை நடக்கிறது. 
விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்,  பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள்  கலந்துகொள்வார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல்  ஜி.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இதில் கலந்து  கொள்கிறார்கள். இவ்விழாவுக்காக, 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. 
*********************************************************************************** 
கதக்களி பயிற்சியில் டாப்ஸி
“வந்தான் வென்றான்” படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியது: பிடிவாதமான ஒரு  வாலிபனும் இளம்பெண்ணும் தங்கள் லட்சியங்களை, வாழ்க்கையில் எதையுமே  இழக்காமல் எப்படி அடைக்கின்றனர் என்பதுதான் கரு.  ஜீவா, டாப்ஸி ஜோடி. இதன்  ஷூட்டிங் இப்போது மைசூர் மேல்கோட்டை காட்டுப் பகுதியில் நடக்கிறது. இதற்கு  வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறோம். மரம் வெட்டக்கூடாது, 
தீ  மூட்டக்கூடாது என்று நிறைய நிபந்தனைகளுடன் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக  கேரளாவிலிருந்து பெண் நடன கலைஞர்கள் அடங்கிய கதகளி மற்றும் களறி குழுவினர்  20 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் மாஸ்டர் அமைக்கும் இந்த நடன காட்சி  பேசப்படுவதுடன், படத்துக்கு ஹைலைட்டாக இருக்கும். 
கேரள பெண்கள் ஆடும்  பாரம்பரிய நடனமும் இடம்பெறுவதால், அதற்காக பயிற்சி பெற கேரளா செல்கிறார்  ஹீரோயின் டாப்ஸி. தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் முறைப்படி கதகளி பயிற்சி பெற்ற  பிறகே ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதையடுத்து மும்பையில் பாந்த்ரா, ஒராளி  பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம் அருகில் செட் அமைத்து  ஷூட்டிங் நடக்கிறது.                               
 
*********************************************************************************** 
நல்லாயிருந்தா சத்தமா வாழ்த்துங்க..
இல்லாயா அமைதியா திட்டிட்டு போங்க.. இது எப்படி இருக்கு..