ஓ.. இளைஞனே...
இன்னும் எத்தனை காலம்
புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியலில் மடியப்போகிறாய்..!
சிற்றின்பத்தில் சிக்குண்டு
எலிகளின் பொறிகளிலா
உன் காலத்தை கடத்தப்போகிறாய்..!
சிங்கத்தின் வம்சம் நீ
பிறகு ஏன்
நரிகளுடன் நட்புறவு...!
ஆலமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..
ஓடிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..
திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...
நண்பனே...
உலகமே உனக்காகத்தான்
அதில் எல்லைகள் பிரிக்க
உனக்கு அதிகாரம் இல்லை...
வேலிகளிட்டா
விருந்தோம்பலை வளர்க்கப் போகிறாய்..!
காற்று வழிப்போ
உன் காலம் தென்றலாய் கிடக்கும்
நாற்று வழிப்போ
உன் காலம் வசந்தமாய் கிடக்கும்..
நம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே...
நாளைகள் எல்லாம் நமக்கே...
ஓடிஓடி களைத்தவனே
ReplyDeleteவட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..
..... அருமையான கவிதையில் மிகவும் ரசித்த வரிகள். ஆழமான அர்த்தத்துடன், நல்ல கருத்து சொல்லும் கவிதை. பாராட்டுக்கள்!
//நாளைகள் எல்லாம் நமக்கே...//
ReplyDeleteஅருமையான கவிதை
///
ReplyDeleteChitra said... [Reply to comment]
ஓடிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..
..... அருமையான கவிதையில் மிகவும் ரசித்த வரிகள். ஆழமான அர்த்தத்துடன், நல்ல கருத்து சொல்லும் கவிதை. பாராட்டுக்கள்!
///
தங்கள் வருகைக்கு நன்றி தோழி..
////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...//
அழகு அழகு அருமையான கவிதை.
///
நன்றி தல..
///
ReplyDeleteசாகம்பரி said... [Reply to comment]
//நாளைகள் எல்லாம் நமக்கே...//
அருமையான கவிதை
//
வாங்க சார்..
கலக்கிட்ட மாப்ள!
ReplyDeleteஅர்த்தபுஷ்டியுடன் அருமையான கவிதை
ReplyDelete//ஓ.. இளைஞனே...
ReplyDeleteஇன்னும் எத்தனை காலம்
புழுக்களுக்கு ஆசைப்பட்டு
தூண்டியலில் மடியப்போகிறாய்..!//
சரியான உவமை.. சூப்பர் சௌந்தர்..
//சிங்கத்தின் வம்சம் நீ
ReplyDeleteபிறகு ஏன்
நரிகளுடன் நட்புறவு...!//
நரி யாருங்க.?
//ஆலமரத்தின் விருட்சம் நீ
ReplyDeleteபிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..//
அட மேட்டருக்கு வாங்க பாஸ்..
//வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..//
ReplyDeleteஅட அருமையான இடம்.. குறியீடுகள் இட்டிருந்தால் இன்னும் பல பலமாக இருக்கும்.. குறியீடுகள் இல்லாததால் அம்மனமாக இருக்கிறது அழகிய சொற்கள்..
//திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
ReplyDeleteமாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்...//
இது சரியாக அமைக்கபடவில்லை என தோன்றுகிறது..
இப்போது சூழ்நிலைக்கு சம்பந்தபடாமல் பொதுவாய் இளைஞனுக்காக.. சில இடங்களில் உவமை அருமை.. சில இடங்களில் குறியீடுகள் இன்றி அந்தரத்தில் தவிப்பு.. கூட்டி கழித்து பார்த்தால்.. ஹி ஹி.. சூப்பரப்பு..
ReplyDeleteவந்தேன்
ReplyDeleteமுன்னேறும் உணர்ச்சியைத் தூண்டும் கவிதை..
ReplyDeleteநல்லதொரு தன்னம்பிக்கை கவிதை
ReplyDelete>>நாளைகள் எல்லாம் நமக்கே...
ReplyDeleteஅப்போ இன்று..?
///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
கலக்கிட்ட மாப்ள!
///
நன்றி விக்கி..
///
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
அர்த்தபுஷ்டியுடன் அருமையான கவிதை
///
நன்றி தமிழ் உதயம்..
தம்பி கூர்மதியான் அவர்களின் அத்தனை கேள்விகளுக்குமான பதில்கள்..
ReplyDeleteஇந்த கவிதை..
என் 2004-ம் டைரியில் மே 26 -ம் தேதி எழுதப்பட்டிருக்கிறது..
அன்று எந்த சூழ்நிலை என்ன மனநிலையில் இக்கவிதை எழுதப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை..
தாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளுக்கு நான் தலை வணங்குகிறேன்...
தங்கள் கருத்துகளுக்கு நன்றி..
///
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
வந்தேன்
//
நன்றி..
//ஆலமரத்தின் விருட்சம் நீ
ReplyDeleteபிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..//
ரசித்த வரிகள்..!! வாழ்த்துகள்!!
//நாளைகள் எல்லாம் நமக்கே...//
ReplyDeleteஆம்!அதுவே தாரக மந்திரம்!
பொருள் செறிந்த கவிதை சௌந்தர்!
///
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
முன்னேறும் உணர்ச்சியைத் தூண்டும் கவிதை..
///
நன்றி கரண்..
///
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை
////
நன்றி ரஹீம் கஸாலி
//ஓடிஓடி களைத்தவனே
ReplyDeleteவட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..//
ஆமாம் மக்கா சம்பளத்துக்கு வேலை செய்வதை விட்டுட்டு இனி சொந்தமா பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறேன். ஆம் நிஜமாகவே வட்டத்தை விட்டு வெளியே வர போகிறேன்...
//நம்பிக்கையோடு புறப்படு
ReplyDeleteநாளைகள் எல்லாம் நமக்கே//
புறப்படடா தம்பி புறப்படடா....
///திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
ReplyDeleteமாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்.../// நல்ல வரிகள்
ஆலமரத்தின் விருட்சம் நீ
ReplyDeleteபிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..
**** உன் கவிதை உலகின் கற்பனை.... அழகு... ****அருமை ****
////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
>>நாளைகள் எல்லாம் நமக்கே...
அப்போ இன்று..?
////
இன்றும் நமதே...
///
ReplyDelete! சிவகுமார் ! said... [Reply to comment]
//ஆலமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..//
ரசித்த வரிகள்..!! வாழ்த்துகள்!!
/////////
நன்றி சிவா..
ஆரம்ப வரிகள் அசத்தல். கவிதை திறமையில் உங்கள் ஆளுமையைக்காட்டுகிறது.
ReplyDeleteமிக ரசித்த வரிகள்...
ReplyDelete//சிற்றின்பத்தில் சிக்குண்டு
எலிகளின் பொறிகளிலா
உன் காலத்தை கடத்தப்போகிறாய்..!//
///
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//நாளைகள் எல்லாம் நமக்கே...//
ஆம்!அதுவே தாரக மந்திரம்!
பொருள் செறிந்த கவிதை சௌந்தர்!
////
நன்றி சார்...
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//ஓடிஓடி களைத்தவனே
வட்டத்திற்குள் ஓடியது போதும்
வெளியில் வா இங்கோ கோணங்கள் பலஉண்டு..//
ஆமாம் மக்கா சம்பளத்துக்கு வேலை செய்வதை விட்டுட்டு இனி சொந்தமா பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறேன். ஆம் நிஜமாகவே வட்டத்தை விட்டு வெளியே வர போகிறேன்...
////
உங்கள் முயற்சி வெற்றியடை வாழ்த்துகள்..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//நம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே//
புறப்படடா தம்பி புறப்படடா....
////
நன்றி மனோ...
///
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
///திரிகளாகவே இன்னும் எத்தனைக்காலம் கருகிக்கொண்டிருக்கப்போகிறாய்..
மாறுதலுக்காக இன்றுமுதல்
தூண்டுகோல்களை கொளுத்துங்கள்.../// நல்ல வரிகள்
////
தங்கள் வருகைக்கு நன்றி..
./////
ReplyDeleteMUTHARASU said... [Reply to comment]
ஆலமரத்தின் விருட்சம் நீ
பிறகு ஏன் அரளிகளுடன்
ஆலாபனை..
**** உன் கவிதை உலகின் கற்பனை.... அழகு... ****அருமை ****
/////////
நன்றி..
////
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
ஆரம்ப வரிகள் அசத்தல். கவிதை திறமையில் உங்கள் ஆளுமையைக்காட்டுகிறது.
/////
நன்றி பாரத்
வேலிகளிட்டா
ReplyDeleteவிருந்தோம்பலை வளர்க்கப் போகிறாய்..!
காற்று வழிப்போ
உன் காலம் தென்றலாய் கிடக்கும்
நாற்று வழிப்போ
உன் காலம் வசந்தமாய் கிடக்கும்..
நம்பிக்கையோடு புறப்படு
நாளைகள் எல்லாம் நமக்கே....
கவிதை அருமை வாழ்த்துகள்..
அன்பின் சௌந்தர் - இது இது தான் வேண்டும் - தன்னம்பிக்கை - முயற்சி - மகிழ்ச்சி - எது வந்தாலு எதிர் கொள்வோம் என்ற கொள்கை - சிந்தனை - அனைத்தும் அருமை சௌந்தர் - திறமை பளிச்சிடும் ஒரு நாள் - உன் கவிதைகள் குடத்திலிட்ட விளக்காக இருந்தது குன்றிலிட்ட விளக்காக மாறி விட்டது சௌந்தர். நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete