கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 April, 2011

இயக்குனர் பாலா கொலை செய்தது யாரை..?


தமி்ழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வளர்ந்துவிட்டவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலும‌கேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின்பு தனியாக படங்களை இயக்க ஆரம்பித்தார். இதுவரை இவர் இயக்கிய படங்கள். சேது (1999),  நந்தா (2001), பிதாமகன் (2003), நான்கடவுள் (2009) ஆகிய படங்கள். பாலா படம் என்றாலே கண்டிப்பாக தேசிய விருது வாங்கிவிடும் என்ற நம்பிக்கையை தமிழ் திரைஉலகில் வளர்த்து விட்டவர். அவருக்கும் அவருடைய படங்களுக்கும் தமிழ் திரைஉலகம் என்றும் சிகப்பு கம்பளம் விரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாலாவின் முதல் படம் சேதுவில் விக்ரம், அபிதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்தனர். அந்தப்படத்தின் கதைப்படி இறுதிகாட்சிகளில்  நாயகி இறந்து விடவது போலவும், நாயகன் விக்ரம் மனநலம் பாதிக்கப்பட்டவராக  மாறிவிடுகிறார். டி.ஆர்.க்கு பிறகு இது போன்று சோகமான முடிவை இவருடைய படம் கொடுத்ததால் பார்ப்பவர்களை கலங்கவைத்தார். இருந்தும் சபாஷ் வாங்கினார்.

இவரது இயக்கத்தில் வந்த அடுத்தப்படம் நந்தா இந்தப்படமும் தமி‌ழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டபடம். இலங்கை அகதிகளை மையப்படுத்தி எடுத்தப்படம். இந்தப்படத்தில் நாயகனாக சூர்யாவும், இலங்கை அகதியாக நாயகி லைலாவும் நடித்தனர். இந்தப்படத்திலும் இயக்குனர் படத்தின் இறுதிமுடிவை சோகமாகவே முடித்திருந்தார். நாயகன் சூர்யா இறந்துவிடுகிறார்.

பாலாவின் அடுத்தப்படம் பிதாமகன். தனித்தனியாக தன்படங்களில் நடித்த விக்ரம், சூர்யாவை இந்தப்படத்தில் ஒன்றாக நடிக்க வைத்தார். கதைப்படி விக்ரம் இடுகாட்டு பணியாளர் போன்று வசனம் இல்லாமல் நடித்தார். விக்ரம் கலகல பேர்வழியாக வந்து கலக்கினார். இறுதி காட்சிகளில் நாயகன் சூர்யா கொலையுண்டு போவது போலவும், விக்ரம் வில்லனை அகோரமாக கொல்வது போலவும் வைத்து இறுதிகாட்சிகளில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

அடுத்தப்படம் நான் கடவுள் இதில் நாயகன் நாயகி யார்த்தப்பாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்தினார். படம் ஒரு அகோரி யான ஆர்யதவை சுற்றி படம் நகர்ந்தது. இறுதிகாட்சிகளில் நாகியை கொன்று நிஜமான அகோரியாக மாறி விட கண்ணீரோடு திரையரங்கம் வணக்கம் போட்டது..

பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகனோ அல்லது நாயகியோ இறப்பது போன்று படம் முடிந்தால் தமிழ் ரசிகர்கள் அந்த படத்தை விரும்புவது இல்லை. ஆனால் அதற்கு விதிவிலக்கு பாலா படங்கள். இவர் படங்கள் சோகமான முடிவு ‌ என்றாலும் வசூலிலும், பாராட்டுக்களிலும், விருதுகளிலும் குறையிருப்பதில்லை.

இதற்கிடையில் தற்போது வெளியாக உள்ள அவன்-இவன் படமும் தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் விஷால் மற்றும் ஆர்யா தன்னுடைய இமேஜை துறந்து இந்த படத்தை நடித்து கொடுத்து ஒரு இயக்குனர் படமாக தந்துள்ளனர். பொதுவாக பாலா இறுதிகாட்சிகளில் இரு நாயகர்களில் ஒருவரை கொன்று விடுவது வழக்கம் அந்த வழக்கப்படி இப்படத்தில் இருநாயகன்களில் அல்லது நாயகிகளில் யாரை கொலைசெய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

நாயகன் இறந்துப்போவது கதையை வலிமைபடுத்துவதாக இருந்தாலும் அவர் அவருடைய ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும். (எம்.ஜி.ஆர் இறந்துவிடுவது போன்று ஒரு படமும் இல்லை என்று நினைக்கிறேன்).

பாலாவின் படங்கள் நிச்சயம் தேசிய விருதுக்குரியப்படம் அந்த வரிசையில் அவன் இவன் படம் பல்வேறு விருதுகளை வாங்கி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..

படப்பிடிப்பு முடிந்து விட்டது. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது.

12 comments:

  1. சரியா இந்த கருண் எங்க போனாப்ல ஆளையே காணோம் ஹிஹி!

    ReplyDelete
  2. >>>>>. (எம்.ஜி.ஆர் இறந்துவிடுவது போன்று ஒரு படமும் இல்லை என்று நினைக்கிறேன்).

    மதுரை வீரன்

    ReplyDelete
  3. இவன் அவன் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட்.. சோ க்ளைமாக்சில் அவர் யாரையும் கொல்லவில்லை.. ஆடியன்சை கொன்னா தான் உண்டு

    ReplyDelete
  4. படம் காமெடி சோ அப்படி இருக்காது

    கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2


    http://speedsays.blogspot.com/2011/04/2.html

    ReplyDelete
  5. பாத்திரத்தைக் கொன்னால் பரவாயில்லை.சில இயக்குனர்கள் நம்மையல்லவா கொல்கிறார்கள்!

    ReplyDelete
  6. //சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
    இவன் அவன் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட்.. சோ க்ளைமாக்சில் அவர் யாரையும் கொல்லவில்லை.. ஆடியன்சை கொன்னா தான் உண்டு//
    ஓ! காமெடி படமா? பாலாவின் காமெடி படம்! பிதே வித்தியாசமா இருக்கே! பார்க்கலாம்! :-)

    ReplyDelete
  7. இதுதான் மேட்டரா? நான்கூட என்னவோ ஏதோன்னு வந்தேன்

    ReplyDelete
  8. (எம்.ஜி.ஆர் இறந்துவிடுவது போன்று ஒரு படமும் இல்லை என்று நினைக்கிறேன்).
    >>


    இருக்கு கூண்டுக்கிளினு ஒரு படம் இருக்கு. அதுல இன்னொரு சிறப்பு சிவாஜியும், எம்ஜியாரும் இனைஞ்சு நடிச்ச ஒரே படம்.

    ReplyDelete
  9. சினிமா சார்ந்த ஒரு பதிவு ..
    என் அறிவுக்கு எட்டியது...

    ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...