கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 February, 2011

தூங்கா நகரம் - திரை விமர்சனம் (First in Net)

 

அம்மா பச்சகிளி பாண்டியம்மா..சீக்கிறம்வா

யோவ் ஏன்யாய் இப்படி கத்தறே...

வா.. இன்னிக்கு நம்ம ரெண்டுபேரும் தான் தூங்காநகரம் பட விமர்சனம் சொல்ல போறோம்...

படம் எப்படி இருக்குன்னு ஜனங்களுக்கு சொல்லுவோம்..

என்னை ‌எங்கையா படம் பார்க்கவுட்ட அதை வாங்கிட்டு வா.. இதை வாங்கிட்டு வான்னு அனுப்பிகி‌னே இருந்தே..  நீயோ சொல்லு 

அது என்னய்யா ஊறுக்குள்‌ளே எவ்வளலு பேரு இருக்கு அதவுட்டுட்டு பேரு வச்சிருக்கிற பாரு பாண்டியம்மா-ன்னு அனுஷ்கா.. திரிஷ்... நயன்தாரா-ன்..

ஏய் உட்டா நீ பேசிக்கிட்டே போவ.. நான் படத்தோட கதையை சொல்றேன்... இரு...

படத்தேட கதை :
 
படத்திலே நாலு பேர சுத்திதான் கதை நகருது... மதுரைக்கு பிழைப்பை தேடி வேற வேற ஊர்லேந்து வர்ற நாலு பேர் பிரண்ட்ஸ் ஆகராங்க.. அந்த பிரண்ட்ஸ் ஒன்னாயிருக்காங்க... ஒரு சமூக விரோதிக்கு எதிரா ஒரு முறை மோதுர இவங்க அவனை அடிச்சிடராங்க.. அவன் தன்னுடைய கண்ணை இழந்துடரான்... இந்த நாலு பேரையும் தீர்த்து கட்ட வில்லன் குருப் முடிவு செய்து.. முதல் ஆளை கொல்ல மிச்சம் இருக்கிற மூணு பேற அனுப்புராங்க அங்க அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது... கல்யாணத்துக்குள் அ‌வனை கொல்ல வில்லன் குருப் அவங்க குடும்பத்த கொல்லுவதா மிரட்டராங்க... அந்த மூணு பேரும் தன்னுடைய நண்பனை ‌‌கொல்ல முயற்சி எடுக்குராங்க... இறுதியில் இவங்க அ‌வனை கொன்னானுங்கலா இல்லையா.. வில்லன் என்ன ஆகுராங்கன்னு மிக சஸ்பென்ஸ் கூட்டி கௌரவ் கொடுத்திருக்கிற படம் தான் தூங்கா நகரம்...
 
யோவ் கதை சொல்லுன்னா என்னய்யா இது... படிக்கிறவங்க காண்டாக போராங்க.. இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லு...

சரி.. சரி.. சொல்றேன்...
படத்திலே நாலு பேரு...
  
1. அய்யாவு.. (பரணி) இவரு விருதுநகரிலிருந்து மதுரைக்கு வந்து எலக்ரிஷன் வேலை செய்யுறாறு.. இவருடைய ‌மனைவி மீனாட்சிக்கு வளைகாப்பு செஞ்சி..  நல்லா வச்சிக்கனுன்னு இவரு விருப்பம்...

2. இரண்டாவது ஆளு மாரியப்பன்... (நிஷாந்த்) இவரு சிவகங்கையிலிருந்து மதுரைக்கு வந்து ஏதோ வேலை செஞ்சி பிழைக்கிறான்.. இவன் ஊமை இவக்கு யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்குனு ஆசை..

3. ராஜா மணி... (இயக்குனர் கௌரவ்) இவரு.. உசிலம்பட்டியிலிருந்து மதுரைக்கு வந்து வேலை பார்க்கறாறு .. இவருக்கு பிணம் எரிக்கிற வேலை ஈவு இறக்கமற்ற கேரக்டர்...

4. கண்ணன் (அதாங்க களவாணி விமல்) இவரு திண்டுக்கல்லிருந்து கல்யாணத்தில் வீடியோ படம் எடுக்கிற வேலை...
 

இந்த நாலு பேரும் ஒரு புனிதமான இடத்தில் சந்திச்சி பிரண்ட்ஸ் ஆகராங்க...
 
ஏய் இரு.. இரு.. இடத்தை நான் சொல்றேன்... புனிதமான இடம்ன்னா.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தானே..
 
ஏய்.. வாயை மூடு... இளைஞர்களுக்கு புனிதமான இடம் அதாங்க ”வைகை பார்” குடிக்கும் போது ஏற்படுகிற சண்டையிலே நாலு பேரும் பிரண்ட்ஸ் ஆகுராங்க...

மதுரையில் துணிக்கடை ஒன்றில் பெண்கள் துணி மாற்றும் போது ‌அதை படம் எடுத்து பிளாக் மெயில் பண்ற ஒரு கூட்டம் இருக்குது... அதுல ஒரு ஐய்யர் பெண்ணு மாட்டிக்குது.. இதை நம்ம களவாணிக்கிட்ட சொல்லி அய்யர் அழராரு... போதையில் இருந்த இவன் வில்லன் டீமை அடித்து அவனுடைய கண்ணை குருடு ஆக்கிறாங்க... அவங்க மோசமானவன்னு தெரிஞ்சிக்கிட்டு அவங்கவங்க ஊருக்கு போயிராங்க...
 
இதை கண்டுப்புடிச்சி வில்லன் டீம் அவங்க அட்ரஸை கண்டுபிடிச்சி விமலை‌ கொள்ள மற்ற மூணு  பேரையும் அனுப்புது... விமலுக்கும்.. நாயகி அஞ்சலிக்கும் திருமண ஏற்பாடு நடக்குது அங்க வந்து முதலில் மூணு பேரும் தனித்தனியா கொள்ள முயற்சி செய்து பின்னர் மூன்று பேரும் சேர்ந்து....

ஏய்.. இரு..இரு.. உட்டா மொத்த கதையும் சொல்லி ஜனங்களை தியாட்டர் பக்கம் வரவுடாத பண்ணிடிவியே...

இதாங்க கதை இந்த கதையை எங்கேயும் தோய்வு இல்லாமல் மிகவும் விருவிருப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கௌரவ்...
 
இந்த நான்கு போரும் தன்னுடை கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தி அளவான முறையில் நடிச்சிருக்காங்க..
 
அஞ்சலிக்கு அதிக வேலையில்லை மதுரை உள்ளுர் தொலைக்காட்சியில் வேலை.. பிளாஸ்போக்கில் விமலும் அஞ்சலியும் எதிரெதிர் வீடு சின்ன வயசிலே காதல்.. அதனாலே ரொம்ப இழுக்காது... காதல்.. திருமணம்ன்னு முடித்து இரண்டு பாட்டுக்கு மட்டும் வந்து தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திறிருக்கிறார்...
 
வில்லன் டீம் அத்தனையும் புதுமுகங்கள் (படத்தில் கிட்டதட்ட 75 புது முகங்கள் டைட்ல்லே போட்டாறங்கப்பா...)
 
காமெடிக்கு சிங்கம்புலி.. ஒரு சில காட்சிகளில் வந்து காமெடி பண்ணியிருக்கிறார் அதைவிட படத்தில் இரண்டு பாட்டிங்க பண்ற அட்டகாசம் கலகட்டுது..

படத்துல சரியான இடத்தில் சரியான பாடல்களுடன் படம் நகருது...
மதுரையில் நடக்கிற அந்தனை விஷயங்களையும மற்றும் மதுரை மொத்தத்தையும் சசுத்தி காட்டி இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.
 
நீ.. சிரிச்சா கொண்டாட்டம்... மற்றும்  ஞானகரவேல் அவர்கள் எழுதிய  எட்டு கண்களுக்குள் ஒற்றை பார்வை என்ற பாடல் அருமை படம் முழுக்க இசையால் ஆட்சி செய்திருக்கிறார் சுந்தர் சி. பாபு..

படம் நாலு பேர்ல ஒருத்தரை கொன்னு கொளுத்துர சீன்ல ஆரம்பிக்குது படம்.. அது யார்ன்னு சஸ்பென்ஸ் வச்சி இறு காட்சியில் நடப்பது என்னன்னு அனைவரையும் சீட்டின் நுனிக்கே வரவச்சிருக்கு..
 
ஆரம்ப காட்சியியும் இறுதி காட்சியும் ரசிகர்களை இது ஒரு திரில்லர் படம்ன்னு சொல்ல வைக்கும்...
 
சரி.. சரி.. ஜனங்க பார்த்துட்டு அவங்க சொல்லுவாங்க நீ உன் கடையை மூடு...
 
இரு..இரு.. நான் ஒரு விஷயம் சொல்லிடுறேன்.. என்ன..
 
அதான் வடிவேலு மதுரை சிரிச்ச தூங்காநகரம் பாட்டுக்கு வந்து ஆடராறே..அந்த விஷயம்
 
ஆமாங்க.. வடிவேலு.. படத்தின் ஆரம்பத்திலே தன்னோட குரல்ல கதையை விளக்குறாரு...
 
பச்சக்கிளி பாண்டியம்மா வ... இவங்க இதை படிச்சிட்டு திட்றாங்களா.. இல்ல புகழ்றாங்களான்னு பாக்கலாம்

படம் அருமை இயக்குனர் கௌரவ்க்கு நல்ல எதிர்காலம் இருக்குது...

Hollo Boss என்ன கிளம்பிட்டிங்க... ஒரு கமெண்ட் போட்டுட்டு போரது...

33 comments:

 1. விமர்சனம் அருமை...
  தொடருங்கள்..

  ReplyDelete
 2. Good Review... Keep up good work....all the best

  ReplyDelete
 3. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

  ReplyDelete
 4. @பாட்டு ரசிகன்

  நனறி..
  கண்டிப்பாக வடை உங்களுக்குதான்

  ReplyDelete
 5. @பாரத்... பாரதி...

  உங்களுக்கும் என்வணக்கங்களும் நன்றிகளும்...

  ReplyDelete
 6. அருமையான விளக்கம்..
  ஆமாம் கிளிக்குநல்லா பேரா வைய்ப்பா...

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்...
  தொடரட்டும் உங்கள் பணி..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. அம்பது ரூவா மிச்சம்.....
  அதான் கதை என்னான்னு தெரிஞ்சிடுச்சே....

  ReplyDelete
 10. //வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்///

  அடப்பாவி இங்கேயும் அதே டயலாக்கா.....!!!!????

  ReplyDelete
 11. நல்ல வித்தியாசமான விமர்சனம்.. நன்றி..!

  ReplyDelete
 12. //நல்ல வித்தியாசமான விமர்சனம்.. நன்றி..! //
  உ,தமிழண்ணே, அப்போ படம் நல்லா இல்லியா?

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோ

  பாஸ்கதையைகேட்டுட்டு இப்படி சொன்னா எப்படி..
  தியாட்டர்ல போய் படம் பார்க்கனும்..

  ReplyDelete
 14. @MANO நாஞ்சில் மனோ

  என்ன பணற்து டைம இலல் பாஸ் அதான் ஒரே டயலாக்..

  ReplyDelete
 15. பார்க்கலாம் போலயே!

  எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனிங்க பாஸ்...

  ReplyDelete
 16. விமர்சனம் நன்று! :)

  ReplyDelete
 17. தினத்தந்தி விமர்சனம் கூட இப்பவெல்லாம் ஒரளவு பரவால்ல. வித்தியாசமாக எடுப்பதாக நினைத்து சொதப்பி இருக்கும் தூங்காந்கரம் போலவேதன் உங்க விமர்சனமும்.

  ReplyDelete
 18. >>> ஆனா நெறையா பேர் படம் சுமார்னு சொல்றாங்களே நண்பா..

  ReplyDelete
 19. கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாம எழுதக்கூடாதா ? எழவு !

  ReplyDelete
 20. ///பிரபு எம் said... [Reply to comment]

  பார்க்கலாம் போலயே!

  எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனிங்க பாஸ்...///
  கண்டிப்பாக படம் பாருங்க பாஸ்...
  தற்போதுஎழுத்து பிழைகளை சரிசெய்து விட்டேன்..
  நன்றி..

  ReplyDelete
 21. பிரபு எம் said... [Reply to comment]

  விமர்சனம் நன்று! :)


  நன்றி பிரபு..

  ReplyDelete
 22. ///Rafeek said... [Reply to comment]

  தினத்தந்தி விமர்சனம் கூட இப்பவெல்லாம் ஒரளவு பரவால்ல. வித்தியாசமாக எடுப்பதாக நினைத்து சொதப்பி இருக்கும் தூங்காந்கரம் போலவேதன் உங்க விமர்சனமும். ////


  என்னங்க பண்றது.. ஏதாவது செஞ்சிதான் பிழைக்கம் கொஞ்ச ம் வித்தியாசமா பண்ணனுன்னு கிளம்றோம் ஆனா....

  ReplyDelete
 23. ! சிவகுமார் ! said... [Reply to comment]

  >>> ஆனா நெறையா பேர் படம் சுமார்னு சொல்றாங்களே நண்பா..

  இப்படியே சொல்லி தமிழ் சினிமாவை படுக்க வச்சிடாதிங்க நண்பரே..

  ReplyDelete
 24. ///செந்தழல் ரவி said... [Reply to comment]

  கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாம எழுதக்கூடாதா ? எழவு !
  ///

  எப்படியாவது.. சீக்கிறம் விமர்சனம் பப்ளிஸ் பண்ணிடனும் என்ற அவசரத்தில் நடக்கிற குறைபாடு இது... கண்டிப்பாக எழுத்து பிழை இல்லாமல் பார்த்துகிறேன் பாஸ்...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...