கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 December, 2012

40 தொகுதியும் வெல்ல ஜெயலலிதா சபதமும்..! திருமணம் செய்துகொண்டதற்கு வருந்தும் கமலும்...!

 
2014-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தொண்டர்கள் புடைசூட முதல்வர் ஜெயலலிதா உறுதிமொழியில் கேட்டுக்கொண்டார். 
 
அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் 25-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
 
நினைவிடம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு வந்தார். அங்கு உறுதி மொழி ஏற்கும் நிகழச்சியில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி மொழி எற்றுக் கொண்டனர். 
 
உறுதிமொழிகளை வாசித்த, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார். 
 
40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் கட்சித்தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்பின்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 
 *************************************
 
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், 
 
எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும். ஆனால் வாணி, சரிகாவின் வசதிக்காக திருமணம் செய்து கொண்டேன். 
 
வாணி லிவ் இன் முறைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரை சம்மதிக்க வைக்க நான் அப்போது தயாராக இல்லை. இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் நானும், சரிகாவும் ஒன்றாக ஹோட்டலில் தங்கினால் ஒரு மாதிரி பேசும் சமூகமாக இருந்தது. 
 
சரிகாவுக்கும், எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 12 ஆண்டுகள் கூட இந்த திருமணம் நீடிக்காது என்று நினைத்தேன். ஆனால் எங்கள் பிரிவு குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தள்ளிப்போட்டுக் கொண்டே போனோம். குழந்தைகள் ஓரளவுக்கு பெரியவர்களாக ஆகும்வரைகாத்திருந்தோம். 
 
கௌதமி மிகவும் வித்தியாசமானவர். அவர் தன்னை மணந்து கொள்ளுமாறு ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை என்றார்.

11 comments:

  1. ச்சே! இதெல்லாம் ஒரு பொழப்பா கமல்ஹாசன் அவர்களுக்கு, பிரபலங்கள் இப்படி சொன்னால் இந்தியாவின் கலாச்சாரம் அமெரிக்காவை ஓரம்கட்டிவிடும்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. 40 க்கு 40 நல்ல கனவு ...

    ReplyDelete
  3. \\கௌதமி மிகவும் வித்தியாசமானவர். அவர் தன்னை மணந்து கொள்ளுமாறு ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதில்லை என்றார்.\\ க்ர்ர்ரர்ர்ரர் ............. தூ............


    ReplyDelete
  4. இவனுக்கும் தெரு நாய்க்கும் என்ன வித்யாசம்

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - எம் ஜி யாரின் நினைவு தினத்தன்று ச்பதம் எடுத்துக் கொண்ட அதிமுக தொண்டர்கள் - நிகழ்வு பற்றிய ப்திவு நனறு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    ReplyDelete
  7. கமல் ஹாசா....ஒனக்கு இன்னாப்பா கவலை..??கண்ணாலம் கட்டிகிட்டாலும் கண்டவளை இஸ்துகினு சுத்துற ,..கண்ணாலம் கட்டாட்டியும் கண்டவள இஸ்துகினு சுத்துற ...மச்சம் உள்ள ஆளுப்பா நீ...

    ReplyDelete
  8. கமல் தன் நிலைப்பாட்டை நேர்மையாக சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  9. நண்பர் சௌந்தர் பதிவின் மூலம் என்ன சொல வருகிறீர்கள்?

    1.ஜெயலலிதா 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிக்கிறார்.

    2. கமல் ஹாசன் ஆண் பெண் உறவை மிக எளிதாக எடுக்கிறார்.

    கம்ல்ஹாசன் முதல்வராக இருக்கிறார் என்றால் இப்படி எழுதுவீர்களா?அல்லது ஹி ஹி!!

    இன்னொருவரைக் குற்றம் சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை இல்லை!!பின்னூட்டங்ளில் கமலைத் திட்டுபவர்கள் பரம் யோக்கியர்களாகவே இருக்க வேண்டும்.!! வாழ்க வளமுடன்!

    நாட்டின் சட்டப்படி கமல் அவர்கள் செய்வது எந்த விதத்திலும் தவறு இல்லை !!


    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. \\நாட்டின் சட்டப்படி கமல் அவர்கள் செய்வது எந்த விதத்திலும் தவறு இல்லை !!\\ மாமு உங்களுக்கு ஏன் இன்னமும் நோபல் பரிசு குடுக்கலைன்னு தான் புரியாத புதிரா இருக்கு!!

      Delete
  10. கமல் + அம்மா பற்றிய பகிர்வு அருமை...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...