மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.
மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.
ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.
சென்னையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.
இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!
இதுக்கு அப்புறம் அவர் எங்க போவார்...?
ReplyDeletewelcome to AIADMK MR.SAMPATH.
ReplyDeleteWELCOME TO AIADMK MR SAMPATH.
ReplyDeleteஅப்போ பயங்கரவாத விடுதலைபுலிகளின் தமிழகப்பிரிவான மதிமுகவில் வைக்கோல் ஒரு ஆள்தானா? ..யாழ்ப்பாணத்துல போய் யாரையாவது தீக்குளிக்க சொல்லுங்கப்பா ..
ReplyDeleteகத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் வந்துட்டார் கடையில் சேர்ந்துட்டார் ஆச்சரியமில்லை
ReplyDeleteமுழங்குமா பீரங்கி!
ReplyDeleteஆஹா .. அடிமைகளின் எண்ணிக்கை ஒன்று உயர்ந்து விட்டது ..
ReplyDeleteஇதையும் படிக்கலாமே :
ReplyDeletegoogle தெரிந்ததுதும் தெரியாததும்
இன்னொரு அடிமை சிக்கியது!
ReplyDeleteசெய்திகள் பதிவாகின்றனவா சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete