"தமிழக சட்டசபை வைர விழாவில், தன் பெயரை, கவர்னர் ரோசய்யா 
குறிப்பிடவில்லை' என, கருணாநிதி மிகவும் வருத்தம் 
அடைந்திருக்கிறார். கவர்னரின் பேச்சை, மீண்டும் யாரையாவது படிக்கச் சொல்லி 
கருணாநிதி கேட்க வேண்டும்.
ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, 
எம்.ஜி.ஆர்., ஆகிய முன்னோடிகளின் பங்களிப்பு, நல்ல முன் மாதிரியாக உள்ளது 
என்று, கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.
சாராயக் கடைகளை திறக்காமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், முன் மாதிரியாக இருந்தார் ராஜாஜி. அவரது கொள்கைகளைப் பின்பற்றி, காமராஜர், சாராயக்கடைகளை திறக்காமல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல் இருந்தார்.
ஏழைக் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்று, 
பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தை, கொண்டு வந்தார். நெய்வேலி மின் திட்டம், 
ரயில் பெட்டி தொழிற்சாலை, விவசாயப்புரட்சி என, தமிழகத்தை 
முன்மாதிரியாக்கினார். கடைசி வரை, திருமணம் செய்து கொள்ளாமல், ஆட்சியில், 
குடும்பம் நுழையாமல் பார்த்துக் கொண்டார். 
அவருக்கு பின், அவர் விட்டுச் 
சென்ற பணிகளை, பக்தவத்சலமும் செவ்வனே தொடர்ந்து செய்தார்.மக்களின் ஆதரவைப் 
பெற்ற அண்ணாதுரை, மக்களுக்காகவே ஆட்சி நடத்தினார். ஆட்சியில், குடும்ப 
உறுப்பினர்கள்  வராமல் பார்த்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர்., மக்களுக்காகவே ஆட்சி செய்தார். விலைவாசிகள் ஏறாமல் 
பார்த்துக் கொண்டார்; சட்டம் - ஒழுங்கை நன்றாக பராமரித்தார்.இதனால், 
இவர்கள் பெயர்களை, கவர்னர் ரோசய்யா குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு; அதுபோல,
 கருணாநிதி பெயரைக் குறிப்பிடாததற்கும் காரணம் உண்டு. 
சாராயக் கடைகளை, 
கருணாநிதி திறந்து, தமிழகத்தை குடிகார நாடாக்கினார். இதனால், தமிழகம், 50 
ஆண்டு காலம் பின்னோக்கிப் போய் விட்டது. ராஜாஜி ஆட்சிக் காலத்தில், ஊழலுக்கு
 இடமில்லாமல் இருந்தது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஊழலுக்கே முதலிடம் 
கிடைத்தது. 
காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., காலங்களில், தொழில்துறை 
நன்றாக இருந்தது. இவர்கள், தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக 
இருந்தனர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், உலகப் புகழ் பெற்ற பின்னி மில் 
மூடப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சாலைகள், வடமாநிலங்களுக்கு 
தப்பித்துச் சென்றன. தொழிலாளர் குடும்பங்கள், கருணாநிதி ஆட்சிக் காலத்தில்,
 நடுத் தெருவுக்கு வந்தன. காமராஜர், பக்தவத்சலம் மற்றும் எம்.ஜி.ஆர்., 
ஆட்சிக் காலங்களில் சட்டம் - ஒழுங்கு நன்றாகயிருந்தது. 
கருணாநிதி ஆட்சிக் 
காலத்தில், பிப்., 14, 1998ல் கோவையில், தொடர் வெடி குண்டு வெடிப்பில், 
60க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர்.  வீரப்பனை, கருணாநிதியால் 
பிடிக்க முடியவில்லை. அக்., 18, 2004ல், ஜெ., ஆட்சியில் தான் வீரப்பன் 
சுட்டுக் கொல்லப்பட்டான். 
இவரது,  2006 - 2011 ஆட்சி காலத்தில், விலைவாசி 
விஷம்போல் ஏறியது. குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி பெற்றுத் தந்தார். 
தொண்டர்கள் புறக்கணிக்கப் பட்டனர். 
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நில 
அபகரிப்பு, கொலை, கொள்ளை போன்றவை, இவரது ஆட்சியில் சர்வ 
சாதாரணம். கருணாநிதி, சட்டசபைக்கு செல்ல மாட்டார்; வருகை பதிவேட்டில் 
கையெழுத்து போட்டு, படியைப் பெற்று, அப்படியே, "எஸ்கேப்' ஆகி 
விடுவார்.சட்டசபை வைர விழாவிற்கும் வரவில்லை. இந்த லட்சணத்தில், கவர்னர்,  
இவரது பெயரை எப்படி கூற முடியும்? கருணாநிதிக்கு ஏன் இந்த ஆசை?
மெயிலில் எஸ்.சந்தான ராகவன், சென்னை 



ஹா ஹா ஹா !! செம சிரிப்பு , இவர் பெயரை தனியாகவே சொல்லமுடியும் கீழ் சொன்ன காரணங்களுக்காக.
ReplyDeleteஒன்றும் சொல்வதற்கில்லை சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்லா வைக்குறீங்கய்யா தலைப்பு!!
ReplyDeleteஉங்கள் வரிசையில் ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயா உட்பட அனைவரும் சரியில்லை என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். சாராயக்கடையைத்திறந்ததே எம்ஜிஆர் என்று மதிமாறன் சொன்னதாக நினைவு.
ReplyDeleteதயவுசெய்து மதுவிலக்கு வரலாற்றை அறிந்து கொள்ளவும்
ReplyDeleteஇவர் பெயரை சொல்வதற்கு ஒன்றல்ல 100 விஷயங்கள் உள்ளன ...ரூம் போட்டு கும்மணும்..
ReplyDeleteநீங்க அம்மா கட்சியா ??? ஹா ஹா
ReplyDelete100% Correct.
ReplyDelete